அரசு புறம்போக்கு நீர் வழிப்பாதை ஓடையை பட்டா போட்டு தாரை வார்த்து கொடுத்த திண்டுக்கல் கிழக்கு தாலுகா வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பல லட்சம் லஞ்சம்!நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!

திண்டுக்கல் கிழக்கு தாலுகா செம்மடைப்பட்டி கிராம பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ( 28/10/24 திங்கட்கிழமை) அரசு புறம்போக்கு நிலத்தில் செல்லும் நீர்வழிப்பாதையை மண்ணை கொட்டி ஆக்ரமிப்பு செய்துள்ளதால் நீர் வழிப் பாதை ஓடையில் மழைநீர் சொல்ல முடியாமல் குடியிருக்கும் பகுதி மற்றும் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கி நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது . இந்த மலையனூர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் .

ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நீர்வழிப் பாதை ஓடையை மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கும் இரட்சணிய தாஸ் என்பவர் அந்த நீர்வழிப் பாதை ஓடையை நான் வாங்கி விட்டேன் என்றும் அந்த இடத்திற்கு பட்டா வைத்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் 100 வருடத்திற்கு மேல் கல்குட்டை ஊரணியிலிருந்து இந்த நீர்வழிப்பாதை ஓடை ஆரம்பித்து கொழிஞ்சம்பட்டி சாலையில் அமைந்துள்ள தரைப் பாலத்தின் வழியாக தவசிமடை என்ற ஊரில் இருந்து வரும் சிறுமலை ஓடையில் சேரும் என்றும்
மழை இல்லாத காலங்களில் இந்த ஓடை வழியாக தான் செம்மடைப்பட்டி ,பஞ்சம் பட்டி ,கொசவபட்டி , சானாம்பட்டி கிராம பொதுமக்கள் விவசாய நிலங்களுக்கு காலங்காலமாக சென்று வருவதாகவும் ஆகவே தற்போது இந்த அரசு புறம்போக்கு நீர்வழி ஓடை பாதையை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல முடியாமலும் கோடைகாலங்களில் அந்த வழியாக விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நீர்வழிப்பாதை ஓடையை ஆக்கிரமிப்பை மீட்டெடுத்து மழைநீர் ஊருக்குள் தேங்கி நிற்காமல் செல்வதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறும்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பல நீர்வழிப்பாதை ஓடைகளை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாகவும். அதற்கு வருவாய்த் துறையினர் பட்டா போட்டு கொடுத்துள்ளதாகவும் அதேபோலத்தான் தற்போது திண்டுக்கல் கிழக்கு தாலுகாவுக்கு உட்பட்ட செம்மடைப்பட்டி கிராமத்தில் இருந்த நீர்வழிப்பாதை ஓடையை கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் ஆகியோர் பல லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலி ஆவணங்களை வைத்து பட்டா வழங்கியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கும் நீர்வழிப் பாதை ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீதும் லஞ்சம் வாங்கிக் கொண்டு பட்டா வழங்கி அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது