அரசு விழாக்களில் கலந்து கொள்வதை சடங்காக (formality) நினைக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்! தாமதமாக வந்த ஆட்சியாளரால் பல மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்!
தேனி மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்ததால் அவதியில் காத்திருந்த மாணவர்கள்!
தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களளில், தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடம், அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (08.06.2023) வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் திறந்து வைத்த விழாவில், டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் அவர்களுக்கு முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.தமிழ்நாடு என்பது அனைத்து துறைகளிலும் தலை சிறந்த மாநிலமாக தலை நிமிர்ந்து கம்பீரமாக இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது என்ற முதல்வர் ஸ்டாலின் பேசினார்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் ஐந்து மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை (Debit Cards) வழங்கி பேசிய தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்தின் ஏற்றவாறு மாற்றிட டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களாக 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை உயர்த்திட ஆணை வழங்கப்பட்டு முதற்கட்டமாக தற்போது தமிழ்நாட்டில் 22 தொழிற்பயிற்சி மையங்களில் 762.30 கோடி மதிப்பீட்டு அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி தொடக்க விழா நடத்தப்பட்டது.
அரசு விழாக்களில் கலந்து கொள்வதை சடங்காக நினைக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!
(8.06.2023) காலை 10:15 மணி அளவில் தேனி மற்றும் போடிநாயக்கனூர் ((இ) உப்பார்பட்டி) அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்
உட்பட தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தேனி, தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகே உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் காலை 10:30 மணி அளவில் அரசு விழா தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் தொழிற் பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை 9 மணிக்கு தொழிற் பயிற்சி மையத்திற்கு வரவழைத்து விழா நடக்கும் அரங்கத்தில் உள்ளே இருந்த இருக்கைகளில் உட்கார வைத்துள்ளனர். மாணவர்கள் 9 மணியிலிருந்து 10.39 மணி வரை காத்திருந்த அவல நிலை ஏற்பட்டது.
ஆனால் சரியாக 10:30 மணி அளவில் காணொளி மூலம் முதல்வர் இந்த அரசு விழா நடக்கும் அரங்கில் பார்வையிட்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி காணொளி மூலம் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் அரங்குகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அதேபோல் தேனி தொழிற்பயிற்சி மைய அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் தேனி மாவட்ட ஆட்சியர் 10:30 மணிக்கு தான் தொழிற்பயிற்சி மையத்தில் அரசு விழா ஏற்பாடு செய்திருந்த அரங்கத்திற்கு வந்தார்.
அப்போது அரங்கத்தில் 9 மணி முதல் காத்திருந்த மாணவர்களை அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு அரங்கத்திற்குள் ஆட்சியர் இருக்கையில் உட்கார்ந்து பின்பு மறுபடியும் மாணவர்களை அரங்கத்திற்குள் வரவழைத்து அமர வைத்துள்ளனர்.
மாணவர்கள் நலன் மீது அக்கறை இல்லாத தேனி மாவட்ட ஆட்சியர் மாணவர்களை பல மணி நேரம் காத்திருக்க வைத்து ரத்தினப்போக்கை மற்றும் அலட்சிய போக்கை கடைபிடித்த சம்பவத்திற்கு தேனி மாவட்ட சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் தேனி மாவட்டத்தில் நடக்கும் அரசு மற்றும் மக்கள் நலத்திட்ட விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்வதை ஒரு சடங்காக மட்டுமே (formality) பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இதற்கு சான்றாக இன்று நடந்த தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் நடந்த அரசு விழாவில் தாமதமாக வந்ததே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரகடம் தொழிற்பயிற்சி மையத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க இருந்த அரசு விழாவிற்கு சரியான நேரத்தில் தமிழக முதல்வர் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வரும் நிலையில் மக்களுக்காக பணிசெய்யும் தேனி மாவட்ட ஆட்சியர் அதுவும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகில் 500 மீட்டர் தொலைவில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்கு தாமதமாக வந்தது தான் வேதனையை அளிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்ட ஆட்சியராக பிப்ரவரி மாதம் பொறுப்பேற்ற நாளிலிருந்து அனைத்து அரசு மற்றும் நலத்திட்ட துவக்கு விழாக்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து தாமதமாக கலந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆகவே இனிமேலாவது மக்கள் நலத் திட்டங்கள் மாணவர்களுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு சரியான திட்டமிட்டு சரியான நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும் .
ஒரு திறந்து பார்ப்போம் தேனி மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டை!
தொழிற்பயிற்சி மையத்தில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளதின்
மேம்படுத்தப்பட்ட CNC இயந்திரத் தொழில்நுட்ப பணியாளர்
1.(dvance CNC mechanic technician)
இதன் பயன்கள்
இதனுடைய பயன்கள் குறைவான தொழிலாளர்களை கொண்டு அதிக இயந்திரங்களை இயக்கிடலாம்
கூடுதல் துல்லியம் குறைபாடில்லா உற்பத்தி மற்றும் திறன் .
2.கம்மியர் மின்சார வாகனம் mechanic electronic vehicle
Petrol diesel gas போன்ற எரிபொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உலக வெப்பமயமானதை தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார வாகனம் (electric vehicle)அவசியமானதாகும்.
3. உற்பத்தி கட்டுப்பாடு மற்றும் தண்ணியக்கும் மையம் (manufacturing process control and automation) இதன் பயன்கள் தொழிற்சாலைகளில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு நிலைகளையும் தானியங்கி (automatic)ஆக இயங்குவதற்கு hydraulic & pnumatic circuit மூலம் சிறப்பாக வடிவமைக்க இது மிகவும் இன்றியமையாதாக உள்ளது.
4. தொழில்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில் நுட்ப பணியாளர்
(Industries robotic and digital manufacturing)
நவீன தொழில்நுட்ப உலகில் தொழில் துறை எந்திரவியல் மிக முக்கிய பங்கு வைக்கிறது தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன்மற்றும் தரம் அதிகரிக்கவும் தேவையான இலக்கை அடைந்ததெல்லாம் எனவே இன்றைய காலகட்டத்தில் அனைத்து தொழிற்சாலைகளிலும் எந்திரவியல் மிக முக்கிய பங்கு வைக்கிறது .
தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம் வகுப்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உதவித் தொகையுடன் ஐ.டி.ஐ படிப்புகளில் சேர்வது குறித்த அறிவிப்பை தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.