மத்திய அரசு நிகழ்ச்சி அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர் பெயரை நிராகரித்த நிர்மலா சீதாராமன்!
நாளை (12.09.2021)வருகை தரும் மத்திய அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு இன்று விழா அழைப்பிதழை வழங்கினார்கள் அரசு அதிகாரிகள்.
விருதுநகர் எம்.பி ப.மாணிக்கம் தாகூர் கடும் அதிருப்தி.
மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் மற்றும் மத்திய இணையமைச்சர் திரு. L.முருகன் அவர்கள் விருதுநகர் மாவட்டம் Aspirational District என்பதாலும் லோன் மேளா நடத்தப்போவதாகவும் இன்று(11.09.2021) மதியம் 1 மணி அளவில் பேங்க் அதிகாரிகள் வந்து நாளை அருப்புக்கோட்டையில் வைத்து நடைபெறும் கூட்டத்திற்கு எனது விருதுநகர் அலுவலகத்தில் இந்த நிகழ்விற்கான அழைப்பிதழை வழங்கியிருக்கிறார்கள்.
அழைப்பிதழில் இரண்டு அமைச்சர்கள் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் உண்மையிலேயே வரவேண்டுமென்றால் முதலிலேயே தகவல் சொல்லி இருக்கலாம்.
மத்திய அமைச்சரும், அமைச்சரின் அலுவலகமும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தான் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு தங்கள் தொகுதிக்கு வருவதை சொல்வது என்பது மரபாக இருந்தது.
இன்று இந்த மரபு மீறப்பட்டுள்ளது மிகவும் வேதனையான விஷயமாகும். இதை சபாநாயகரிடம் கொண்டு செல்வேன்.
மத்திய அமைச்சர்கள் அவர்கள் வருவது பற்றி முன்கூட்டியே தகவல் தெரியாத காரணத்தினால் நான் இன்று standing committee கூட்டத்திற்காக டெல்லியில் உள்ளேன். அதன் காரணமாக இன்று(11.09.2021) மதியம் தகவல் தெரிந்த காரணத்தினால் நாளை(12.9.2021) நடைபெறும் லோன் மேளா கூட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன்.
மிகவும் வருத்தத்திற்குரிய இந்த நிலையை எடுத்து, அதிகாரிகளுக்கும் உண்மையிலேயே மத்திய அமைச்சரின் அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர் வரவேண்டும் என்று நினைக்கிறதா? இல்லை வரவேண்டாம் என்று நினைக்கிறதா? என்று தெரியவில்லை.