ஆக்கிரமித்துள்ள 50 சென்ட் அரசு தரிசு நிலத்தை 40 ஆண்டுகளக மீட்டெடுக்க முடியாத வாடிப்பட்டி வருவாய்த்துறை! மௌனம் காக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் நிர்வாகம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் சர்வே எண் 283/4 இல்44 சென்ட் அரசு தரிசு நிலம் உள்ளது.

தற்போது அந்த கிராமத்திற்கு சமூக கூடம் மற்றும் விவசாயிகள் களம் மற்றும் நூலகம் இது போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிடங்கள் கட்ட போன்ற வளர்ச்சி பணிகளுக்கு தற்போது அரசு அனுமதி வந்துள்ளது. ஆனால் அந்த கிராமத்தில் உள்ள
காட்டு ராஜா, ராமன், கிருபாகரன், முதுகிர்ஷ்ணன் ஆசாரி , ஸ்டாலின் நபர்கள் அரசு தரிசு நிலத்தை தங்களுக்கு சொந்தமான இடம் என்றும் அதற்கான பத்திரங்கள் எங்களிடம் இருக்கிறது என்று ஆக்ரமித்து வைத்துக் கொண்டு கிராமத்தில் மோதல் போக்கை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அளவிற்கு நடந்து வருவதாகவும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்து வருவதாகவும் ஆகவே போலி பத்திரங்களை ரத்து செய்து 50 சென்ட் அரசு தரிசு நிலத்தை மக்கள் நல திட்டத்திற்கு பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் கையகப்படுத்த பெதம்பம்பட்டி கிராம பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரியிடம் கொடுத்து விசாரணை மேற்கொள்ள கூறியுள்ளார்கள்.

அதன் பின்பு மனு கொடுத்த கிராம பொதுமக்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறிய போது மதுரை மாவட்ட ஆட்சியர் அரசு தரிசு நிலங்களை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு இருக்கும் அந்த ஐந்து நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்திற்கு அரசு கட்டிடங்கள் கட்ட உடனே அந்த இடத்தை கையகப்படுத்தி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமித்துள்ள 50 சென்ட்அரசு தரிசு நிலத்தை மீட்டு எடுக்க மதுரை மாவட்ட வாடிப்பட்டி வட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும். அந்த உத்தரவை வைத்து வாடிப்பட்டி வட்டாட்சியர் அரசு தரிசு நிலத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்றும் மதுரை கோட்டாட்சியரை சந்திக்க சென்றபோது அவர் அலுவலகத்தில் இல்லை என்றும் கூறினார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியரும் கோட்டாட்சியரும் வட்டாட்சியரும் என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.