ஆசிட் வீச்சு மற்றும் அரிவாள் கத்தியுடன் கோஷ்டி மோதல்!திமுக உட்கட்சித் தேர்தல் பின்னணியில் தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு நிழலாக இருக்கும் குரு இளங்கோ மற்றும் நந்தகோபால் !?? கட்சி விதிமுறைகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நெருக்கடியில் கட்சித் தலைமை!?
ஒருங்கிணைந்த தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்தவர் கம்பம் நா.ராமகிருஷ்ணன். இவரது தலைமையில் கட்சியினர் ஒன்றுபட்ட நிலையில் செயல்பட்டு வந்தனர். இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வன் வருகையால் அமைப்பு ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வனும், தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் நா.ராமகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டனர்.
அதன்பிறகு இரண்டு கோஷ்டிகளாக திமுக செயல்படத் தொடங்கியது. இந்த சூழலில் அதிமுக, அமமுக என கட்சிகள் மாறி மாறி வந்த தங்க தமிழ்ச்செல்வன், தனது ஆதரவாளர்களுக்கு கட்சி பதவிகள் வாங்கிக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளியாகின.
காலங்காலமாக திமுகவில் இருந்து, கட்சிக்காக உழைத்து அடுத்தகட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று காத்திருந்த உடன்பிறப்புகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
தேனி திமுகவில் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கொடுக்கப் பட்டுள்ளது
முன்னதாக நகரப் பதவிகளுக்கு தேர்தல் முடிந்த நிலையில் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
தற்போது ஒன்றிய பதவிகளுக்கு விருப்ப மனு வழங்கப் பட்டுள்ளது.அடுத்தகட்டமாக மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேனி தெற்கு மாவட்டம் எம்.எல்.ஏ கம்பம் நா.ராமகிருஷ்ணன் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பு ரீதியான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேனி தெற்கு மாவட்டத்தில் திமுக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதேசமயம் உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.
தேனி தெற்கு மாவட்டம் எம்.எல்.ஏ கம்பம் நா.ராமகிருஷ்ணன் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
தற்போது தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள ராமகிருஷ்ணன் மீது பல குற்றச்சாட்டுகளை திமுக தலைமைக் கழகத்திற்கு சில கட்சி நிர்வாகிகள் கொடுத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
1.தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன்.(திமுக கட்சியில் உறுப்பினர் இல்லாத ஒருவருக்கு கம்பம் தெற்கு நகர 31வது வார்டு திமுக கவுன்சிலர் பதவிக்கு (ராஜா என்பவருக்கு ) ஐந்து லட்சம் பணம் பெற்றுக்கொண்டு வழங்கி இருப்பதாக 30 வது வார்டு திமுக செயலாளர் மற்றும் கம்பம் நகர் பொறுப்புக் குழு உறுப்பினராக இருக்கும் SN.மகேந்திரன் திமுக தலைமைக் கழகத்திற்கு புகார் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
2.அதே போல் பாளையம் இளைஞர் அணி பொறுப்பாளர். அக்கிம் ஒன்றியச் செயலாளர் பதவிக்கு மனு வாங்க வரும்பொழுது பாளையம் கட்சி தேர்தல் அலுவலகத்தில் வைத்து அனைபட்டி ஒன்றியச் செயலாளர் முருகேசன் தாக்கியதாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் அதன்பின்பு சின்னமனூர் காவல்நிலையத்தில் தாக்கியவர் மீது புகார் கொடுத்துள்ளார் அது சம்பந்தமாக காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
- தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம் மெட்டு காலனியைச் சேர்ந்தவர் ஷாஜகான் வயது 54.இவர் 30 வருடமாக திமுக கட்சியில் இருப்பதாகவும் 15 வருடங்களாக வாட் செயலாளராக இருந்துள்ளதாகவும். தற்போது நடந்த திமுக உட்கட்சித் தேர்தலில் எந்த பொறுப்பும் வழங்கவில்லை என்றும் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இதனால் மன வேதனையில் திமுக தலைமைக் கழகத்திற்கு புகார் அளித்தேன் என்றும் இதை அறிந்த திமுக கட்சி நிர்வாகிகள் d
சிலர் தொலைபேசியில் மிரட்டியதாகவும் இது சம்பந்தமாகமாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் அவர்களிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனால்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு தன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றேன் என்று கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். - .4.இந்நிலையில் உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ணைபுரம் பேரூராட்சியில் திமுக சார்பில் உட்கட்சி தேர்தல் நடக்கு்ம் போது செயலாளராக போட்டியிட 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருந்த பண்ணைபுரம் ராஜேந்திரன் என்பவர் 9தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு வாங்கியுள்ளார். இந்த சூழலில் ராஜேந்திரன் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் சிலர் சதித் திட்டம் போட்டு அடியாட்களை தயார் செய்து இருசக்கர வாகனத்தில் சென்று பண்ணைபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜேந்திரன்
- முகத்தில் ஆசிட் வீசி விட்டு தப்பியோடி இருக்கின்றனர்.
- அப்போது, உனக்கு எல்லாம் கட்சியில் பொறுப்பு வேண்டுமா? நீ இன்னும் உயிரோடு இருந்து என்ன செய்யப் போகிறாய் செத்துப் போ” என்பது போல் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆசிட் வீச்சால் துடிதுடித்த ராஜேந்திரனை அருகிலிருந்த பொது மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி தெற்கு மாவட்ட திமுகவில் நடைபெறும் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் ஆசிட் வீசும் அளவிற்கு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி விதிமுறைகளை மீறி நடந்தவர்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு திமுக தலைமை கழகம் தள்ளப்பட்டுள்ளதாக உடன்பிறப்புகள் சிலர் கூறுகின்றனர்.