ஆன்லைன் இலவச வீட்டு மனை பட்டா வழங்க VAO லஞ்சம் கேட்கும் அதிர்ச்சி வீடியோ! புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் அவல நிலை!
வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மற்றும் வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீடு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா மத்திய மாநில அரசு வழங்கப்பட்டு வருகிறது.
இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்தால் உங்களுக்கு பட்டா நிச்சயம் என்பது மாற்றுக் கருத்து இல்லை. யார் யாரிடம் இலவச மனை பட்டா கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்றால் DRO வட்டாட்சியர் RDO இவர்கள் யாரிடமாவது மனுக்களை கொடுத்தால் உரிய நாட்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசுகளை செய்து இலவச வீட்டு மனை பட்டா மாவட்ட ஆட்சியர் மூலம் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் மூலம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது கிராம நிர்வாக அலுவலர்கள் என்று பொதுமக்களை திசை திருப்பி இந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு குறைந்தது பத்தாயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பொதுமக்களிடம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த நிலையில் தான்
இலவச ஆன்லைன் வீட்டு மனை பட்டா வழங்க புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தாலுகா வாராப்பூர் கிராம நிர்வாக அலுவலர் 10000ரூபாய் லஞ்சம் கேட்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வாராப்பூர் ஊராட்சியில் 186 பட்டியலிடப்பட்ட சாதிகள் உள்ளன . பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் உள்ளனர். வாராப்பூர் மக்கள் தொகை தற்போது ஐயாயிரத்திற்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா, வாராப்பூர் ஊராட்சியில் மிகவும் சுமார் 30 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் இலவச வீட்டு மனை ஆன்லைன் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 12 பயனாளிகளின் பட்டாவை வாராப்பூர் கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் தன் வசம் வைத்துக்கொண்டு ஒவ்வொரு இலவச மனை பட்டாவிற்கு ரூபாய் 6,000 முதல் 10000ரூபாய் வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே இலவச வீட்டு மனை பட்டாவை வழங்குவேன் என்றும் இல்லையென்றால் உங்கள் வேலையை பாருங்கள் என்று இலவச பட்டா வாங்க வந்த பெண்களை கிராம நிர்வாக அலுவலர் பேசும் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அதற்கு அந்த சாமானிய ஏழை எளிய பெண்மணிகள் நாங்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம் எங்களிடம் 6000 5000 என்று கேட்டால் நாங்கள் எங்கே போவது என்று சொல்வதைக் கேட்காமல் வீடியோ சுபாஷ் பணம் இருந்தால் மட்டுமே பட்டா வழங்க முடியும் என்று விஏஓ சுபாஷ் சொல்கிறார்.தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தருவேன் என கூறி பாமர மக்களின் வயிற்றில் அடித்து வரும் கிராம நிர்வாக அலுவலர், இது போன்ற சம்பவங்களை இனி நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், உடனடியாக பட்டாவை மக்களுக்கு வழங்க வேண்டும்.
இது தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் அறவழிப் போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை ஒன்றிய பொருளாளர் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ எதிரொலியால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உடனே வாராப்பூர் கிராம நிர்வாக அலுவலரை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார். தற்போது புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகத்தில் பல லஞ்ச ஊழல் முறைகேடு நடந்து கொண்டே வருவதாக பல பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டு வரும் நிலையில் வருவாய்த் துறையில் இருக்கும் அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் கேட்பது மிகவும் வேதனையாகவும் வெட்கக்கேடாகவும் இருப்பதாக சமூக ஆர்வலர்களின் கூக் குரலாக ஒளித்து வருகிறது! இது எப்படியோ தலை சரியாக இருந்தால் தான் கீழ்நிலை ஊழியர்கள் சரியாக இருப்பார்கள் ஆகவே உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தினால் மட்டுமே இதற்கு விடிவுகாலம் ஏற்படும் என்பது தான் நிதர்சனம்!