மாவட்டச் செய்திகள்

ஆபத்தான நிலையில் உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மர்!
மழை காலங்களில் டிரான்ஸ்பார்மர் சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம்!! உயிரை பணயம் வைத்து மின் துண்டிப்பை சரி செய்யும் மின் ஊழியர்கள்!தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!!? நடவடிக்கை எடுக்குமா மதுரை மாவட்ட நிர்வாகம்!!?

ஆபத்தான நிலையில் உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மர்!
மழை காலங்களில் டிரான்ஸ்பார்மர் சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம்!! வாடிப்பட்டி மின்சார வாரிய அதிகாரிகளும் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகமும் அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தண்ணீரில் மிதக்கும் டிரான்ஸ்பார்ம்.
இரவு நேரங்களில் இருளில் காணப்படும் காட்சி!


பல நாட்களாக மழைநீர் சூழ்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மர்!
அலட்சியப் போக்கில் மின்சார வாரியம் மற்றும் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!

மதுரை மாவட்டம் டீ வாடிப்பட்டி சுடுகாடு எதிரில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைந்துள்து. இந்த டிரான்ஸ்பார்மரிலிருந்து தாதம்பட்டி நீரே தான் கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடம் . சுமார் 40 அடி நீளமும் 30 அடி அகலத்திலும் 6அடி பள்ளத்திலும் இருக்கிறது.
மழை பெய்தால் போதும் ஐந்தடிக்கு குறையாமல் தண்ணீர் சூழ்ந்து வெளியேற முடியாமல் பல நாட்களாக தேங்கி நிற்கும். இதனால் மழை நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதை சரி செய்ய முடியாமல் பல மணி நேரம் மின் ஊழியர்கள் போராடி தண்ணீரில் மிதந்து சென்று சரி செய்து வருவதாகவும் இப்படி தண்ணீரில் இறங்கி சரி செய்ய செல்லும் பொழுது தேங்கி நிற்கும் தண்ணீரில் விஷ பூச்சிகள் இருப்பதாகவும் அது கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் அதுமட்டுமில்லாமல் தண்ணீரில் நின்று டிரான்ஸ்பாரம் இல் சரி செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உயிரை பணயம் வைத்து மின் துண்டிப்பை சரி செய்வதாக மின் ஊழியர்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். அது மட்டும் இல்லாமல் பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெரும் மழை பெய்து வருவதால் தாதம்பட்டி விவசாய நிலங்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இரண்டு நாட்களாக சரி செய்ய முடியாமல் மின் ஊழியர்கள் போராடி அதன்பின் தண்ணீருக்குள் இறங்கி டிரான்ஸ்பார்மர் இல் இருந்த பழுதை சரி செய்துள்ளனர். ஆகையால் பல வருடங்களாக மழை காலங்களில் டிரான்ஸ்பார்மர் சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலையை போக்க அந்தப் பள்ளத்தை மூடுவதற்கு இதுவரை வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்கான முயற்சியும் மின்வாரிய அலுவலக உயர் அதிகாரிகளும் முயற்சி செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். அதுமட்டுமில்லாமல் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல் இரவு 7 மணிக்கு மேல் சுடுகாடு சுற்றி போதிய மின்விளக்குகள் இல்லாமல் இரண்டு காணப்படுவதால் இதைப் பயன்படுத்தி சமூக விரோதிகளின் கூடாரமாகவும் சட்டவிரோதமான பல தவறான செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் சுடுகாடு சுற்றி உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என்று பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் தண்ணீருக்குள் இருக்கும் டிரான்ஸ்பார் மீட்டெடுக்க மதுரை மாவட்ட ஆட்சியாளர் உடனே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button