இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் பச்சை மையால் கையெழுத்து போடலாம் ! போடக் கூடாது என்ற அரசு ஆணை அதிகார அமைப்பில் இல்லை! தேனி மாவட்ட வருவாய்த்துறை!
பச்சை மையால் யார் யார் கையெழுத்து போடலாம்!? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முதல்வர் மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பச்சை மயில் கையெழுத்து போட அதிகாரம் பெற்றுள்ளார்கள் .பச்சைமை உபயோகித்து கையொப்பம் விடுவது தேவையில்லை என மத்திய செயலக கையேடு அலுவலக நடைமுறை (சி எஸ் எம் ஓ பி) 2014 இல் திருத்தப்பட்டது இதன் அடிப்படையில் தமிழக அரசின் பச்சை மை பயன்படுத்த வேண்டாம் என ஆணை பிறப்பித்துள்ளது. எனவே அரசு பணியாளர்களோ ஓய்வு பெற்ற பணியாளர்களோ அரசியல்வாதிகளோ பச்சை மையால் கையெழுத்து போட கட்டாயம் இல்லை .இதற்கு முன் பச்சை மை கையெழுத்திற்கு தனி மதிப்பு இருந்தது. தற்போது இல்லை என்பதுதான் உண்மையாக உள்ளது. சட்டப்படி நீளம் மற்றும் கருப்பு வண்ணங்களில் கையெழுத்து இதெல்லாம் என்று உள்ளது. பச்சை மையைப் பற்றி எந்த குறிப்பு எந்த ஆவணமும் இல்லை என்பதுதான் நிதர்சனம்
gazetted officer) அரசிதழ் அதிகாரிகள் மட்டுமே பச்சை மையால் கையெழுத்து போட முடியும் என்ற எழுதப்படாத ஒரு சட்டம் தற்போது வரை இருந்து வருகிறது.
இப்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. இந்திய குடிமகன் பச்சை மையில் கையெழுத்து போடக்கூடாது என்பதற்கான அரசு ஆணை இல்லை என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
இந்திய குடிமகன் பச்சை மையில் கையெழுத்து போடக்கூடாது என்ற ஆவணம் எதுவும் இல்லை என்று தேனி மாவட்டம் வருவாய்த்துறை தகவல்!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் லோயர் கேம்ப் கடைவீதியில் வசிக்கும் சண்முகசுந்தரம் என்பவர் தகவல் புரியும் சட்டத்தின் கீழ் சில தகவல் கேட்டு மனு செய்துள்ளார் .
அதில் முக்கியமாக இந்திய குடிமகன் பச்சை மையால் கையெழுத்து போடக்கூடாது என்பதற்கான அரசு ஆணையின் ஆவணங்கள் கேட்டிருந்தார்.
அந்தத் தகவலுக்கு தற்போது தேனி மாவட்ட வருவாய் துறையில் இருந்து மனுதாரருக்கு பதில் அனுப்பி உள்ளது மனுதாரர் கேட்டிருந்த இந்திய குடிமகன் பச்சை மயில் கையெழுத்து போடக்கூடாது என்பதற்கான அரசு ஆணைகள் எதுவும் இப்போது அதிகார அமைப்பில் இல்லை என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
ஆகையால் இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் பச்சை மயில் கையெழுத்து போடலாம் என்பதை தான் இந்த தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் வந்த பதில் சொல்கிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.