பொதுப்பணித்துறை

இயற்கை சீற்றங்களை தாங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்க அதிர்வு கருவிகளை தமிழ்நாடு அரசு பொருத்த கடும் கண்டனம்!

நிலநடுக்க அதிர்வு கருவிகளை பொருத்த பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தேனிமுல்லைப் பெரியாறு அணை உரிமைக்காக மீண்டும் போராட்டம் வைகோ அறிவிப்பு விட்டிருக்கும் நிலையில் முல்லை பெரியாறு அணையில் நிலநடுக்க அதிர்வு கருவிகளை பொருத்த விவசாயிகள் சங்கம் கண்டனம்.

நிலநடுக்க அதிர்வு கருவிகளை  பொருத்தும் பணி
பெரியார் வைகை அனை


சில நாள்களுக்கு முன்பு கூட கேரள அமைச்சர் புதிய அணையை கட்டுவோம் என்று கூறியுள்ளார். அதற்காக மதிமுக சார்பில் மீண்டும் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை மீட்க போராட்டம் கம்பம் பகுதியில் நடைபெறும். தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்னையான முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை பெற மீண்டும் போராட்டம் நடைபெறும்.

தேனிமுல்லைப் பெரியாறு அணை உரிமைக்காக மீண்டும் போராட்டம்: வைகோ அறிவிப்பு மதிமுக மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன் மகன் ஆர்.சுபாஷ் சுந்தர் – ஏ.பவ்யா திருமணம்.

அதேபோல் தேவாரம் நியூட்ரினோ திட்டம் மிகப்பெரிய ஆபத்தானது. இதனால் இடுக்கி மற்றும் பென்னிகுயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணைகளுக்கும் ஆபத்து ஏற்படும். இந்த திட்டத்தை தடுக்க தொடர் போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.
தேனி, மதுரை மாவட்டங்களில் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, கட்சி சார்பற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து “முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு” என்ற பெயரில் ஒவ்வொரு கிராமத்திலும் உறுப்பினர்கள் சேர்த்து, ஒருங்கிணைப்பு குழு அமைத்து முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு தொடர்ந்து போராட்டம் நடத்தி நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணையின் வடிவமைப்பே ,இயற்கை சீற்றங்களை தாங்கக்கூடிய வைகையில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் நில அதிர்வு கழிவுகளை பொருத்துவதற்கு
தற்போது என்ன அவசியம் என்றும்
இதுகுறித்து பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்…
யாரை திருப்தி படுத்த இந்த நாடகம்…?
இன்று திருந்தி விடுவார்கள், நாளை திருந்தி விடுவார்கள் என்று 40 ஆண்டுகளாக நாமும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். மலையாளிகள் திருந்திய பாடில்லை.

நிலநடுக்கம் வந்தால் அதில் 3.5 ரிக்டர் அளவுகோல் முதல் 4.5 ரிக்டர் அளவுகோலை தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்ட அணை முல்லைப் பெரியாறு அணை.

கடந்த 125 ஆண்டுகளில் வராத நிலநடுக்கம், இனி வந்து விடும் என்பதே அணையை பலவீனப்படுத்துவதின் தொடக்கம் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் மேல் பகுதி, கேலரி பகுதி, கேம்ப் காலனி ஆகிய மூன்று இடங்களிலும் நிலநடுக்க கருவிகள் மற்றும் அதிர்வு கருவிகளை கடந்த இரண்டு நாட்களாக பொருத்திக் கொண்டிருக்கிறது ஹைதராபாத்தை சேர்ந்த NGRI என்கிற தனியார் நிறுவனம்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை வண்டிப்பெரியாறு அருகே உள்ள மஞ்சு மலையில் கட்ட வேண்டும் என்று மலையாள அரசு தீர்மானித்த போது,,,

அதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, கேரளாவிற்கு செய்து கொடுத்ததும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் என்பது தான் நமக்கு உதைக்கிறது.

இந்த நிகழ்வுக்காக NGRI நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி திரு விஜயராகவன்,முதுநிலை முதன்மை விஞ்ஞானி திரு சேகர் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பெரியாறு அணைக்குள் வந்ததோடு,,,

கேரள மாநில நீர்வளத்துறை தலைமை பொறியாளர் திரு பிரியேஸ், கேரள மாநில மின்வாரியத்தைச் சேர்ந்த திரு ஹரிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் எந்த அடிப்படையில் அணைக்குள் வந்தார்கள்.

அணைக்கு பொறுப்பான தமிழக பொறியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் கூட,
முல்லைப் பெரியாறு அணையைப் போல பத்து மடங்கு அதிக தண்ணீர் கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில் இன்னமும் நில அதிர்வு கருவிகள் பொருத்தப்படாத நிலையில்…

எதற்காக இந்த கேரளா ஹைதராபாத் விஞ்ஞான அதி புத்திசாலிகள் பெரியாறு அணைக்குள் வரவேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் வடிவமைப்பே,இயற்கை சீற்றங்களை தாங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருப்பது தான்.

4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் என்றால் இடுக்கி அணை சுக்கு நூறாக உடையும். ஆனால் முல்லைப் பெரியாறு அணை சிறு விரிசல் கூட இல்லாது கம்பீரமாக நிற்கும். இதுதான் மலையாள அறிவுக்கும், தமிழர் கட்டுமானத்திற்கும் இடையேயான வித்தியாசம்.

மலையாள கும்பல், முல்லைப் பெரியாறு அணைக்குள், விஷமத்தன நோக்கத்துடன் ஊடுருவி, தமிழக அரசின் பணத்தில் ஒரு கருவியை பொருத்துவதென்பது, நம் கண்ணை எடுத்து நாமே குத்திக் கொள்வதற்கு சமம்.

இந்தக் கருவிகளை நிறுவுவதற்காக இந்த கும்பல் ஒப்புதல் பெற்றது யாரிடம்…?

அணைக்குள் மலையாள பொறியாளர்கள் எந்த அடிப்படையில் வந்தார்கள்…?

மூவர் குழுவிற்கும், ஐவர் குழுவிற்கும் முறையாக தகவல் சொல்லப்பட்டதா…?

எதற்காக மெயின் கமிட்டியும் சப் கமிட்டியும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை…?

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. எந்நேரமும் அங்கு நிலநடுக்கம் வரலாம். அதற்காகத்தான் இந்த கருவிகளை, தமிழக அரசின் ஒப்புதலுடன் பொருத்தி இருக்கிறார்கள் என்று நாளையிலிருந்து மலையாள காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் கத்தி கதறுவதை கண்ணால் காணத்தான் போகிறோம்.

என்ன மாதிரியான மனிதர்கள் இந்த மலையாளிகள்…?
இடுக்கி அணைக்கு ஏன் இந்த கும்பல் செல்லவில்லை…?
இடுக்கி அணையில் நிலநடுக்கம் வராதா…?
கேரள மாநில பொறியாளர்களோ தனியார் நிறுவன விஞ்ஞானிகளோ அணைக்குள் ஊடுருவினால் அணைக்கு பெரும் பாதிப்பு இருக்கிறது. பாதுகாப்பிலும் அச்சம் இருக்கிறது என்கிற எங்களுடைய கருத்தை பொது வெளியில் வைக்கிறோம்.
தமிழக அரசு ஒருபுறத்தில் கண்ணகி கோவிலை இந்து சமய அறநிலைத்துறையினுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும்…
மறுபுறத்தில் முல்லைப் பெரியாறு அணைக்குள் நில அதிர்வு கழிவுகளை பொருத்துவதற்கு அனுமதிப்பதும்…

எந்த வகையில் ஏற்புடையது… வேதனையாக உள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்குள் ஏற்படக்கூடிய நில அதிர்வுகளை அந்த கருவி ஹைதராபாத்திற்கு அனுப்புமாம். அங்கிருந்து ஆய்வு செய்து அவர்கள் எத்தனை ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அறிவிப்பார்களாம்…

தனியார் நிறுவனம் என்ன வேண்டுமானாலும் சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை சாக்காக வைத்து அணையை உடைத்து விடலாம் என்று மலையாள இடதுசாரி கும்பல் கனவு கண்டால்…
வந்த வழியே அந்த கும்பலை விரட்டியடிப்போம்…
பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்
அன்வர் பாலசிங்கம் கண்டனம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


பெரியாறு அணையில் நிலஅதிர்வு மாணி பொருத்தும் பணி.
முல்லைப் பெரியாறு அணையில் நிலஅதிர்வு மாணி பொருத்தும் பணிக்கான பொருட்கள் நேற்று அணைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து இன்று அணைப்பகுதியில் நிலஅதிர்வு மாணி பொருத்தும் பணி நடைபெற்றது.

தென் தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய ஆதாரமாகவும் உள்ளது முல்லைப்பெரியாறு அணை.

இந்த அணை பலவீனமாக உள்ளது என கேரள அரசு குற்றம் சாட்டி வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் மூலம் அணையின் உறுதித்தன்மை நிரூபிக்கப்பட்டது. அதன் பின்பும் கேரளஅரசு தொடர்ந்து நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வால் அணைக்கு பாதிப்பு உள்ளது என ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறிவந்தது.

இதனால் முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளை கண்காணிக்க நில அதிர்வுமாணிகள் பொருத்த கேரளா கண்காணிப்பு குழுவை வலியுறுத்தியது.


இதையடுத்து கடந்த ஜுன் மாதம் டெல்லியில் நடைபெற்ற மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்துவது குறித்து கேரளாவின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜுன் இறுதியில் பெரியாறு அணையில் நில அதிர்வு மற்றும் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்சலரோகிராப் கருவிகள் வாங்க ரூபாய் 99.95 லட்சம் நிதி தமிழக பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது.

கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலைய (என்ஜிஆர்ஐ) விஞ்ஞானிகள் விஜயராகவன், சேகர் ஆகியோர் பெரியாறு அணையில் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்சலரோகிராப் கருவிகள் பொருத்துவதற்கான இடம் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேற்று பெரியாறு அணையில் நிலஅதிர்வு மாணிகள் மற்றும் அவை பொருத்தும் பணிக்கான மராமத்து பொருட்களை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவிசெயற்பொறியாளர் குமார், உதவிப்பொறியாளர் ராஜகோபால் அணைக்கு கொண்டு சென்றனர்.
இவர்களுடன் என்ஜிஆர்ஐ விஞ்ஞானி சேகர் உடன் சென்றுள்ளார். இன்று சீனியர் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் அணைப்பகுதியில் 3 இடங்களில் நிலஅதிர்வு மாணி பொருத்தப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆக்சலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதியிலும், அணை கேலரி பகுதியிலும் (சுரங்கப்பகுதி), அதுபோல் சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேம்பிலும் பொருத்தப்பட உள்ளது. மேலும் இது இருமாநிலத்திற்கான பிரச்சனை என்பதால், இங்கு அமைக்கப்படும் நில அதிர்வுமாணியின் அறிக்கை ஒவ்வொரு 15 நொடிக்கும் ஹைதராபாத்திலுள்ள தேசிய புவி இயற்பியல் நிலநடுக்க ஆய்வுக்குழுவிற்கு தகவல் செல்லும் வகையிலும் ஐந்து ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button