இயற்கை வளங்களை சுரண்டி கனிமவளம் கடத்தும் அதிர்ச்சி வீடியோ!உடந்தையாக திண்டுக்கல் மாவட்ட கனிம வளம் துறை &வருவாய்த்துறை & காவல்துறை அதிகாரிகள்! நடவடிக்கை எடுப்பாரா!? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!?
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சித்த நத்தம் வருவாய் துறைக்கு உட்பட்ட குண்டலாம்பட்டி கிராமம் அருகே மலை அடிவாரத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் கனரக வாகனத்தில் கனிம வளங்கள் சட்ட விதிமுறைகளுக்கு புறம்பான முறையில் ஜேசிபி இயந்திரங்களை வைத்து கனிம வளங்களை வெட்டி கொள்ளையடிக்கப் பட்டு வரும் வீடியோ!
கனிம வளம் கடத்தல் மாமியார் கும்பலிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கனிமவளத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்துடனையே பயணம் செய்து வருகின்றன
எனவே உடனடியாக கனிம வளங்களை கொள்ளையடிக்கும் மாபியா கும்பலை கைது செய்வதோடு இதற்கு உடந்தையாக இருக்கும் கனிமவளத் துறை அதிகாரி வருவாய்த்துறை அதிகாரி காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி துறை ரீதியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதை அரசு தடுத்து நிறுத்ததி இயற்கை வளங்களை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.