காவல் செய்திகள்

இரண்டு வயது குழந்தையை கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசப்பட்டாரா!? உடலை கைப்பற்றி வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை!?

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது30). செங்கல் காளவாசல் வைத்து நடத்தி வருகிறார். .
இவருக்கு சிவரஞ்சனி (28). என்ற மனைவியும் (5) மற்றும் (2) வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 4/11/2024 திங்கட்கிழமை காலையில் குழந்தை சுபாஷினி( வயது 2) வீட்டின் அருகே உள்ள தோட்ட பகுதியில் விளையாடி கொண்டிருந்தபோது நாய் கடிக்க வந்ததாகவும் நாய்க்கு பயந்து ஓடும் போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் குழந்தை தவறி விழுந்ததாகவும் இதைக் கண்ட தாய் சிவரஞ்சனி அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு தனது குழந்தையை காப்பாற்றுமாறு கதறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து தந்தை பிரசாத் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து கிணற்றில் குதித்து குழந்தையை மீட்டுள்ளனர். ஆனால் குழந்தை கிணற்றில் விழுந்த சிறிது நேரத்திலேயே மூச்சு திணறி உயிரிழந்து விட்டதாகவும் . உடனே குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதைத்து அடக்கம் செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விஏஓ கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் காவல்துறையினர் மற்றும், வருவாய் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் மலைச்சாமி , வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் நயினார் முகமது ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உண்மையிலேயே குழந்தை கிணற்றில் தவறி விழுந்து தான் உயிரிழந்தாரா!? இல்லை குழந்தையை யாரோ கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசப்பட்டாரா!? என சந்தேகத்தின் பேரில் புதைத்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை உயிரிழந்த சம்மந்தமாக பெற்றோர்களிடமும் , கிராமத்தில் உள்ளவர்களிடமும் அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பிரபல பரிசோதனை முடிந்த பின்பு தான் குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா இல்லை குழந்தையை கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டாரா என்ற உண்மை மற்றும் முழுவிபரம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button