இரவு நேரங்களில் அத்துமீறல்களில் ஈடுபடும் அம்மையநாயக்கனூர் உதவி காவல் ஆய்வாளர் மீது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!

இரவு நேரங்களில் வீடு புகுந்து விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் உதவி காவல் ஆய்வாளரின் வீடியோ வைரல்!
https://youtu.be/NRo5GFzoFQc?si=opdGNDIPpSfo-1jy

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் பள்ளபட்டியைச் சேர்ந்த முனியம்மாள் (வயது 80) புகார் ஒன்று கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டி கவுண்டன்பட்டி கிழக்குத் தெருவில் கடந்த 80 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கு பத்து குழந்தைகள். கணவர் 2002ஆம் ஆண்டு தோட்டத்தில் வேலை செய்த போது கிணற்றில் தவறி விழுந்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். நாங்கள் பள்ளபட்டியைச் சேர்ந்த பாலாம்பட்டியார் என்பவரது சுமார் ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்து வருகிறோம். 2002 ஆம் ஆண்டு கணவர் இறந்தவுடன் பலம் பட்டியார் மகன்கள் கிருஷ்ணன் ராமராஜ் ராமு ஆகியோர் 12 சென்ட் நிலமும் மூன்று லட்சம் பணமும் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த 12 சென்ட் இடத்தில் வீடு கட்டி மாடு கன்றுகளை வளர்த்து வருகிறோம். இந்த நிலையில் எங்களுக்கு நிலம் கொடுத்த பாலம் பட்டியார் மகன்களாகிய கிருஷ்ணன் , ராமராஜ் ,
ராமு, ஆகியோர் தற்போது இறந்துவிட்ட நிலையில் ராமு கிருஷ்ணன் ராமராஜ் ஆகியோரது மகன்கள் மனைவிகள் கூட்டாக சேர்ந்து நாங்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும். அதுமட்டுமில்லாமல் அம்மையநாயக்கனூர் உதவி காவல் ஆய்வாளர் வேல்முருகன் இரவு நேரத்தில் அத்துமீறி சட்டவிரோதமாக வீட்டிற்கு வந்து காவல் நிலையத்திற்கு இது சம்பந்தமாக விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறியதாகவும். அதற்கு யார் புகார் கொடுத்தார்கள் அவர் பெயர் என்ன எதற்கு நாங்கள் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் இது நிலப் பிரச்சனை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியதற்கு அதெல்லாம் முடியாது காவல் நிலையத்திற்கு வந்து ஆக வேண்டும் என்று அம்மைய நாயக்கனூர் உதவி காவல் ஆய்வாளர் வேல்முருகன் மிரட்டும் தோணியில் பேசிவிட்டு சென்றார் . ஆகையால் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களிடம் அம்மையநாயக்கனூர் காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் பணம் பெற்றுக் கொண்டு நிலப் பிரச்சனை சம்பந்தமாக எங்கள் வீட்டிற்குள் இரவு நேரத்தில் அத்துமீறி வந்து மிரட்டுவதாகவும்
ஏற்கனவே நிலம் சம்பந்தமான பிரச்சனைகளை காவல் நிலையத்தில் விசாரிக்க கூடாது என்ற ஒரு சுற்றறிக்கை இருக்கும்போது அதையெல்லாம் அவர் மதிக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் அம்மையநாயக்கனூர் சா உதவி காவல் ஆய்வாளர் வேல்முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ நிலப் பிரச்சினை சம்பந்தமாக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யக்கூடாது என எத்தனை முறை தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திலிருந்து காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினாலும் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு தங்களது கட்டப்பஞ்சாயத்து வேலைகளில் தொடர்ந்து செய்து வருவதால் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் ஆகவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக காவல் நிலையங்களில் விசாரணை செய்யக்கூடாது என்றும் அப்படி காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் நிலப் பிரச்சனை சம்பந்தமாக கட்டப்பஞ்சாயத்து செய்யும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.