ஆன்மீகத் தளம்

இறந்த உடலை வைத்து இரவு முழுவதும் அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்து அரக்கனாக செயல்பட்ட புதுக்கோட்டை கோவில் செயல் அலுவலர் முத்துராமன் மீது நடவடிக்கை எடுக்காமல்
கோமாவில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை !?

இறந்த உடலை வைத்து   இரவு முழுவதும்  அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்து அரக்கனாக செயல்பட்ட புதுக்கோட்டை கோவில் செயல் அலுவலர் முத்துராமன் மீது நடவடிக்கை எடுக்காமல்
கோமாவில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை !?

அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் நார்த்தமலை புதுக்கோட்டை மாவட்டம்


புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. முத்தரையர்களின் படைத் தலங்களில் தலைமையிடமாக நார்த்தாமலை விளங்கி வந்துள்ளது. முத்தரையா்களின் வட்ட வடிவிலான கற்கோவில், விஜயலாய சோழனின் குகை கோவில் மற்றும் கடம்பர் மலை கோவில் ஆகிய கோவில்கள் இவ்வூரில் அமைந்துள்ளது. தற்காலத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு நடைபெறும் முளைபாரி ஊா்வலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் இந்த விழாவில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் 26/03/2023 அன்று மாலை 7 மணி அளவில் நார்த்தமலை  முத்து மாரியம்மன் கோவிலுக்கு பூச்செரிதல் அபிஷேக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோவிலில் தற்காலிக பூசாரிகளாக இருக்கும் ராஜா வயது 40 என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்ட பக்தர்கள் கோவில் செயல் அலுவலர் முத்துராமன் தகவல் கொடுத்துள்ளனர். உடனே இறந்து கிடந்த பூசாரி ராஜாவின் உடலை கோவிலின் பின்புறம் போட்டுவிட்டு தொடர்ந்து அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்ய செயல் அலுவலர் முத்துராமன் கூறியுள்ளார். இறந்த உடலை வைத்து இரவு முழுவதும் மாரியமனுக்கு மலர் அபிஷேகம் செய்து அரக்கன் போல் செயல்பட்ட கோவில் செயல் அலுவலர் மீது  அப்பகுதி மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இறந்த பூசாரியின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு வந்து விரோத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

Watch “இறந்த உடலை வைத்து அம்மனுக்கு இரவு முழுவதும் மலர் அபிஷேகம் செய்த புதுக்கோட்டை கோவில் செயல் அலுவலர்” on YouTube https://reportervisionnews.com/watch-இறந்த-உடலை-வைத்து-அம்மனு/

இது சம்பந்தமாக ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிகை நிருபர் இறந்த பூசாரியின் சகோதரர் செல்வராஜிடம் இது சம்பந்தமாக கேட்டபோது அவர் கூறியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா வயது 40 கடந்த இரண்டு ஆண்டுகளாக நார்த்தமலை முத்துமாரியம்மன் கோவிலில் தற்காலிக பூசாரிக பணி செய்து வந்தார்.27/03/2023 அதிகாலை 2 மணிக்கு பூசாரி ராஜா இறந்துவிட்டதாக தகவல் கொடுத்ததன் பெயரில் கோவிலுக்குச் சென்று பார்த்தபோது  அங்கு கோவிலில் அம்மனுக்கு தொடர்ந்து  இரவு முழுவதும் மலரபிஷேகம் செய்து வந்ததாகவும்  இறந்தகடந்த பூசாரி ராஜாவை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கோவில் செயல் அலுவலர் முத்துராமன் கூறியதால் இறந்த பூசாரி ராஜாவை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளதாக கூறியுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். எது எப்படியோ தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து நார்த்தமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா இரவு நடந்த போது தற்காலிக பூசாரி ராஜா  மர்மான முறையில் இறந்து கிடந்தார். இது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அமைச்சர்  அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு இதுபோன்று இறந்த உடலை வைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த செயல் அலுவலர் முத்துராமன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்
புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில் — நார்த்தாமலை்

அருள்மிகு முத்து மாரியம்மன் – நார்த்தாமலை
மூலவர்:
முத்துமாரியம்மன்
அம்மன்/தாயார்:
பூவாடைக்காரி
தல விருட்சம்:
வேம்பு
திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
போன்:
+91 4322 221084, 97869 65659
செல்லும் வழி
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை – 622 101, புதுக்கோட்டை மாவட்டம்.

திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் இருக்கிறது. புதுக்கோட்டையிலிருந்து பேருந்து வசதி உண்டு. திருச்சியிலிருந்து -35 கி.மீ. புதுக்கோட்டையிலிருந்து – 18 கி.மீ.

கோயில் பெருமைகள்
நாரதர் பெருமான் இம்மலையில் வந்து தங்கியதால் நாரதர் மலை என்று வழங்கப்பட்டதாகவும் காலப்போக்கில் நார்த்தாமலை என்று வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குழந்தை வரத்துக்கு அம்மாவட்டத்திலேயே மிகவும் புகழ்பெற்ற கோயில் இது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் குணமடைவதால் இத்தலத்தில் பக்தர்கள் வருகை மிக அதிக அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கரும்பு தொட்டில் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. அக்னி காவடி எடுத்தால் தீராத வியாதிகள் குணமாகின்றன. அம்மை வியாதிகள் குணமாகும்.மாவிளக்கு , அக்னி காவடி,கரும்பு தொட்டில், பறவை காவடி எடுத்தல் அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாத்துதல் , ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இவை தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்.

நாடு போற்றும் நார்த்தாமலை : நல்லவர்களின் நாட்டமும் மன்னர்களின்கண்ணோட்டமும் பெற்ற நார்த்தாமலை மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை , ஆளுருட்டிமலை, பொம்மாடிமலை, மண்மலை, பொன்மலை, என்ற ஒன்பது மலைக் குன்றுகளுக்கு மத்தியில் ஓங்காரமாய் அமைந்து விளங்குகிறது.அங்கு நிமிர்ந்து நிற்கும் மலைக்குன்றுகள் ஒவ்வொன்றும் ஒரு பழங்கதையை உணர்த்தும் விதமாய் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button