இறப்புச் சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் வருவாய் ஆய்வாளர்! செயலிழந்து இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகம்!
கந்தர்வகோட்டை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமம்
குடிக்காடு,குளத்தூர்,
நடுப்பட்டி,நம்புரான்பட்டி,பெரியகோட்டை,புதுப்பட்டிமட்டங்கால்,காட்டுநாவல்வளவம்பட்டி,
சோத்துப்பாளை,
ஆத்தங்கரைவிடுதி
துவார்சுந்தம்பட்டி,,நெப்புகைஅண்டனூர்
சங்கம்விடுதி,வெள்ளாளவிடுதி,கல்லாக்கோட்டை
ஆகிய 16 வருவாய் கிராமங்கள் இருக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா கல்லாகோட்டை வருவாய் ஆய்வாளர் சந்தான லெட்சுமி சங்கம் விடுதி ஊராட்சி சொக்கம்பேட்டை ADகாலணியை சேர்ந்த R.ஜோதிமலர் தனது கணவர் இறந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் சூழலலில் தனது மாமனார் குழந்தைவேல் இறப்பு சான்று கோரி கோட்டாட்சியர் அவர்களிடம் கொடுத்த மனுவின் விசாரணை கிராம நிர்வாக அலுவலர் விசாரணை முடிந்து வருவாய் ஆய்வாளர்க்கு விசாரணைக்கு சென்றுள்ளது.
இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் ஆய்வாளர் இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வழங்க முடியும் என அந்த பெண்ணை தினமும் அழைக்களிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
வருவாய்த் துறையில் தற்போது கொடிகட்டி பறக்கும் ஊழல் லஞ்சம் என்று தொடர்ந்து பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரும் நிலையில் அதையெல்லாம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்டும் காணாமல் தங்களுடைய சுய லாபத்திற்காக அதிகாரிகள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்காமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் பணம் பணம் என்று கேட்டு தொந்தரவு செய்யும் கல்லாகோட்டை வருவாய் ஆய்வாளர் சந்தானலெட்சுமி மீது வட்டாட்சியர் வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சியர் இவர்கள் மூன்று பேரில் யாராவது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா என்று பொது மக்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றார்கள்.
திறந்து பார்ப்போம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை!?