காவல் செய்திகள்

இளம் பெண்ணை  பல்லடத்தில் கொலை செய்து காரில் வைத்து மதுரை வாடிப்பட்டி அருகே சுற்றி வந்த கொடூர காதலன்!
! மதுரை மாவட்ட வாடிப்பட்டி காவல்துறையிடம் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்!

மதுரை மாவட்ட வாடிப்பட்டி காவல்துறையிடம் சிக்கிய கொலை செய்யப்பட்ட பெண்ணை காரில் வைத்து
திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில்   சுற்றி வந்த கொலையாளிகள் ! மதுரை மாவட்ட வாடிப்பட்டி காவல்துறையிடம் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்!


கடலூரைச்  சேர்ந்த பிரின்ஸ்  22 வயது  பெண் பிரின்ஸ் தன் கணவர் அருண் ஸ்டாலின் விஜய்)உடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான்.

கொலை செய்யப்பட்ட பிரின்ஸ்

அதே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துறை சேர்ந்த  திவாகர் என்பவர் அதே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ள இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி பெயர் (உமா பாரதி ) திவாகருக்கும் பிரின்ஸ்கும் கடந்த இரண்டு வருடங்களாக கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது பிரின்ஸ் கணவருக்கு தெரிய வர கள்ளக்காதலை விட்டு விடும்படி மனைவியிடம் கூறி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இது சம்பந்தமாக  கள்ளக்காதலனிடம்   இனிமேல் என்னை விட்டு விடு என கூறியுள்ளார். கோபமடைந்த  கள்ளக்காதலன் மதுரையைச் சேர்ந்த தன்னுடைய நண்பருக்கு போன் செய்து கார் ஒன்று எடுத்து வர சொல்கிறார் .

வெள்ளை பனியன் போட்டு உள்ளவன் தான்  கள்ளக் காதலியை கொலை செய்த கள்ளக்காதலன் திவாகர்

உடனே மதுரையில் இருந்து மாருதி ஆம்னி காரை கள்ளக்காதலனின் நண்பன் எடுத்துச் சென்றுள்ளான்.

பல்லடம் அருகே காரில் காத்திருந்த  திவாகர் கள்ளக்காதலிக்கு போன் செய்து அங்கு வந்த கள்ளக்காதலி பிரின்ஸை அந்த காரில்  காரில் ஏற்றுக்கொண்டு காரில் வைத்து கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டு

தன்னுடைய நண்பரை காரை எடுத்துக்கொண்டு மதுரை வாடிப்பட்டி அருகே கொண்டு சென்று காத்திருக்குமாறு அனுப்பிவிட்டு எதுவுமே நடக்காதது போல்  கள்ளக்காதலன் வேலைக்கு சென்று விட்டு   வேலை முடிந்தவுடன் அங்கிருந்து

இரண்டு சக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள டிராக்டர் கம்பெனி அருகே கொலை செய்த பெண்ணுடன் காரில் காத்திருந்த இடத்திற்கு கள்ளக்காதலன் வந்துள்ளான் .

இரண்டு பேரும் இரவு நேரங்களில் ஏதாவது ஒரு இடத்தில் கொலை செய்த பெண்ணை குழி தோண்டி புதைத்து விடுவதற்கு மம்பட்டி கடப்பாறை அனைத்தையும் ஏற்பாடு செய்து காருடன் நான்கு வழிச்சாலையில் ஒரு ஓரமாக நிறுத்தி வைத்து காத்திருந்தனர். அப்போது
இரவு நேர ரோந்து பணியில் இருந்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் காரின் அருகே இருந்த இரண்டு இளைஞர்களை கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதன் பின்பு காரை திறந்து பார்க்கும் போது இளம் பெண் கொலை செய்யப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் கார் நின்றிருந்த பகுதி திண்டுக்கல் காவல் கார் நின்றிருந்த பகுதி திண்டுக்கல் கார் நின்றிருந்த பகுதி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட்கோட்டம் அம்மையநாயக்கனூர் காவல் எல்லைக்குட்பட்ட இடத்தில் இருப்பதால் நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய காவல்துறையினர் சேர்ந்து கார் மற்றும் கள்ளக்காதலன் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடலை மருத்துவப் பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேற்கொண்டு வருகின்றனர்.

மாயாண்டி உதவி காவல் ஆய்வாளர் உதயகுமார் உதவி காவல் ஆய்வாளர்

இந்த நிலையில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட வாடிப்பட்டி காவல்துறையினரை அனைவரையும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து  பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button