காவல் செய்திகள்
உசிலம்பட்டி காவலர் படுகொலை – குற்றவாளி பொன்வண்ணன் என்கவுன்ட்டர்!

மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமாரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, தேனி கம்பம்
வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக உசிலம்பட்டி தனிப்படை காவல் துறையினர்களுக்கு தகவல் வந்துள்ளது
அதன் அடிப்படையில் உசிலம்பட்டி பணிப்படை காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் சென்ற காவல்துறையினர் குற்றவாளி பொன்வண்ணனை பிடிக்க முயன்ற போது தனிப்படை காவலர்களை குற்றவாளி பொன்வண்ணன் தாக்கி விட்டு தப்பி ஓடிய போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் குற்றவாளி பொன்வண்ணன் உயிரிழந்தார்.




