உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை காற்றில் பறக்க விட்ட டாஸ்மாக் நிர்வாகம்.உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!

உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை காற்றில் பறக்க விட்ட மதுரை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம்!
விதிமுறைகளுக்கு மாறாக, கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் அருகில் டாஸ்மாக் கடைகள் அமைந்திருந்தால் உடனே அந்த கடைகளை அகற்ற டாஸ்மார்க் அதிகாரிகளுக்கு திமுக ஆட்சி வந்தவுடன் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி (கடந்த வருடம் 2021 செப்டம்பர் மாதம்) உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் பொதுமக்களிடமிருந்து வரும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

ஆனால் அமைச்சர் அவர்கள் கூறியது வெறும் அறிவிப்பும் மட்டுமே தவிர செயல்பாடு மற்றும் நடைமுறைப்படுத்தவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தமிழக மதுபான சில்லரை விற்பனை விதிகளில் உள்ள வரையறைகளின்படி, மதுக் கடைகள் அமைக்கப்படுகின்றன. அதன்படி மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 மீட்டரில் இருந்து 100 மீட்டருக்குள் மதுக் கடைகள் இருக்கக் கூடாது. அதுமட்டுமில்லாமல் மதுக்கடைகள் எந்த இடத்தில் அமைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

இதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட தேனி மெயின் ரோடு பேரவை அரங்கம் தெரு
நாடார் சரஸ்வதி தனியார் பள்ளியிலிருந்து 100 மீட்டருக்குள் (கடை என் 5289 )டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.

இந்தக் கடையை அகற்ற பலமுறை அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி தலைவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆளுங்கட்சியினரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் கடை அருகே மது அருந்திவிட்டு சாலையில் அமர்ந்து கொண்டு ஒரு சில நபர்கள் பள்ளி மாணவன் மாணவிகளிடம வரம்பு மீறி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெரும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு உசிலம்பட்டி நகராட்சி தலைவர் அவர்கள் டாஸ்மார்க் கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மார்க் நிர்வாகம் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.