உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்னதானம் நிகழ்ச்சி என்ற பெயரில் சேலம் அரசு மருத்துவமனை அருகே நூதன முறையில் இடம் ஆக்கிரமிப்பு !?
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் திமுக கட்சிப் பந்தலை அகற்ற திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா!?
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்னதானம் நிகழ்ச்சி என்ற பெயரில் சேலம் அரசு மருத்துவமனை அருகே நூதன முறையில் இடம் ஆக்கிரமிப்பு !?
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் திமுக கட்சிப் பந்தலை அகற்ற திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா!?
27/11/2022 அன்று தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் ஏழைகளுக்கு இலவச அரிசி, அன்னதானம், வேட்டி, சேலை என நலத்திட்ட உதவிகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடி வந்தனர்.
குறிப்பாக சேலத்தில்
சேலம் மாநகரத்தில் நாவலர் நெடுஞ்சாலை
மோகன் குமாரமங்கலம்
அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு செல்லும் கேட் அருகே செவ்வாப்பேட்டை பிரதான சாலையில் 29 வது கோட்ட திமுக கட்சி நிர்வாகிகள் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு பந்தல் போடப்பட்டு அன்னதானம் வழங்கினர்.
ஆனால் தற்போது வரை அன்னதானம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் போடப்பட்ட பந்தல் இன்னும் அகற்றப்படாமல் அந்த இடத்தை 29 வது கோட்ட திமுக கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்து அங்கேயே அமர்ந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இது சம்பந்தமாக அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்த போது உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று திமுக கட்சி நிர்வாகிகள் இந்த இடத்தில் பந்தல் போட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த இடத்தை நூதன முறையில் ஆக்ரமித்து செய்து வகித்துள்ளனர் என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
திமுக கட்சி நிர்வாகிகள் நூதனமான முறையில் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவமனை அவசரப் பிரிவு கேட் அருகில் கட்சி என்ற பெயரில் பந்தல் போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.
இது சம்பந்தமாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் 29 வது கோட்டம் திமுக கட்சி நிர்வாகிகளிடம் பேசியதாகவும் அதற்கு அவர்கள் மிரட்டும் வகையில் பதில் அளித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எது எப்படியோ திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரு சில இடங்களில் ஒரு சில திமுக கட்சி நிர்வாகிகள் கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டு வருவதும் அவர்களை அழைத்து திமுக கட்சி தலைமை கண்டித்து வருவதும் அனைவரும் அறிந்ததே.
ஆகவே இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று சேலம் அரசு மருத்துவமனை அவசரப் பிரிவு அருகே போடப்பட்ட அன்னதான பந்தலை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அகற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டு பொதுமக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூகங்களின் கோரிக்கையாகும்