காவல் செய்திகள்

உளவுப் பிரிவு காவல் துறையினர் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு!திருப்பூர் வடக்கு துணை கமிஷனா் அலுவலகத்திலும் தெற்கு துணை கமிஷனா் அலுவலகத்திலும் பல வருடங்களாக பணியில் இருக்கும் காவலர்களை பாரபட்சம் பார்க்காமல் பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாநகர காவல் ஆணையர்!?

ஒற்றும் உரை சான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றன்க மன்னவன் கண்.
இது வள்ளுவன் வாக்கு.
ஒற்றா்களையும், புகழ் பெற்ற நீதி நூல்களையும் ஒரு மன்னன் தனது இரண்டு கண்களாக கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள் ஆகும்.


திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் பொறுப்பேற்றுள்ள நிலையில், நகரின் சட்டம் ஒழுங்கை காப்பதுடன், அதிகரித்துள்ள குற்றச்செயல்களை தடுப்பது உள்ளிட்ட சவால்களை, அவர் எப்படி எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் ஐபிஎஸ்!


திருப்பூர் மாநகரம் என்றாலே US டாலர் சிட்டி என்ற புகழ் பெற்றதாகும். திருப்பூரில் உள்ள ஜவுளித்துறை நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருவதாகக் கூறினார். அடுத்து ஐந்தாண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்துறையாக மாறும் வலிமை உள்ளது என்கின்றனர்.

நாட்டில் ஜவுளித் துறையில் மிகவும் வெற்றிகரமான ஒரு தொழில் மையமாக திருப்பூர் விளங்கி வருவதுடன், தற்போது ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்!

ஏனென்றால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பின்னலாடை நிறுவனங்களும் பெரும்பாலும் ஏற்றுமதி மட்டுமே செய்து வருவதால் வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலதிபர்கள் திருப்பூரில் கால் வைக்காமல் இருக்க முடியாது . ஏனென்றால் எல்லாமே டாலர் மதிப்பில் தான் வியாபாரம் நடைபெறுகிறது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் பரிவர்த்தனை திருப்பூர் நகரில் நடக்கிறது என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது என்பதுதான் நிதர்சனம் .
அதுமட்டுமில்லாமல் தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலத்திலிருந்து தொழில் தொடா்பாக மையம் கொண்டுள்ளனா்.

இப்படி பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணம் வர்த்தனை நடக்கும் திருப்பூர் மாநகரில் இதை பயன்படுத்தி தொழிலதிபர்கள் என்று சொல்லிக்கொண்டு நூதன முறையில் மோசடி செய்து வருவதாக பல்வேறு குற்றச்செயல்களுக்கும் இந்த ஊர் மிகவும் பிரசித்தம் என்பது தமிழக அளவில் குறிப்பிடத்தக்கது. திருப்பூர் மாநகர் காவல் ஆணையர் தலைமையில் இரண்டு காவல் துணை ஆணையர்கள் உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் உள்ளனா்.


இந்த நிலையில் 2022 ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரபாகர் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் பொறுப்பேற்றுள்ள நிலையில், நகரின் சட்டம் ஒழுங்கை காப்பதுடன், அதிகரித்துள்ள குற்றச்செயல்களை தடுப்பது உள்ளிட்ட சவால்களை, அவர் எப்படி எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது.


இவா் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாநகரில் துணை கமிஷனராக (தலைமையிடம்) பணியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்பு டிஐஜி பதவியில் சென்னை மாநகார காவல் துறையில் கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக இருந்தவர். தற்போது பதவி உயா்வு பெற்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாநகரில்
காவல் ஆணையருக்கு சவால்கள் நிறைந்த போர்க்களம்! சரித்திரம் படைக்க சட்டம் ஒழுங்கு, குற்றங்களுக்கு கடிவாளம் போடப்படுமா!?

வெளிமாநிலத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதில் பனியன் நிறுவனங்களும் தொழில்துறையும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, தொழில்துறையினர் பணியமர்த்துகின்றனரா என்பதை போலீசார் கண்காணிக்க வேண்டும்.
கஞ்சா, மது பயன்பாடு அதிகரிப்பால் திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில், வழிப்பறி, செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டு உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. இதற்கு முக்கியத்துவம் தந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல், போதிய போலீசார் இல்லாதது, குற்ற நிகழ்வுகளை தடுக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாகும். குற்றங்கள் நடப்பதை தடுக்க, காவல் துறை ஆணையர் முன்னுரிமை தர வேண்டும்.
வெளிநாட்டவா் சட்ட விரோத வருகை, கள்ள நோட்டு பழக்கம், மத மோதல், சாதி பிரச்சனை, திருட்டு, கள்ளச்சந்தையில் மது விற்பனை, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை, கஞ்சா விற்பனை என்று சமூகவிரோதிகளின் கூடாடரமாக இருந்த திருப்பூர் மாநகரம் காவல் துறையினருக்கு ஒரு சவாலாக இருக்கும் திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரபாகரன் ஐபிஎஸ் பற்றி சில காவல் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் கூறியது
என்னவென்றால் திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருக்கும் பிரபாகரன் ஐபிஎஸ் புகழ்ச்சிக்கும் விளம்பரத்திற்கும் மயங்குவார் என்கின்றனா்.

பதவியேற்ற பின்பு தற்போது திருப்பூர் மாநகர உளவுத்துறையில் பணியில் இருந்த IS என்று அழைக்கப்படும் உளவுத்துறை காவலர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பணியிடம் மாற்றம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
இது துறை ரீதியான வழக்கமான பணியிட மாற்றம் நடவடிக்கை தான் என சிலா் கூறினாலும் இதில் தனிப்பட்ட சிலரின் காழ்ப்புணர்ச்சியும் உள்ளது என சில நேர்மையான காவல்துறை அதிகாரிகள் ஆதங்கத்தை
வெளிப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து உண்மை நிலவரம் என்ன என்று களத்தில் இறங்கி விசாரித்த போது
நீண்ட நாட்களாக காவல்துறையின் சீருடையை மறந்து தனிப்பிரிவு( wing) என்ற போர்வையில் அதிகாரிக்களுக்கு பணம் காய்க்கும் மரமாக இருந்த IS என்ற உளவுத்துறையில் பணியாற்றிய காவலர்களை பணியிடம் மாற்றம் செய்தது சாரிதான் என்றும் இதே போல ஆண்டுகளாக தனிப்பிரிவில் தஞ்சம் அடைந்துள்ள காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நேர்மையான சில காவல் அதிகாரிகள் தொரிவித்தனா்.

அது மட்டும் இல்லாமல் திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற சில தினங்களில்
தனது முதல் நிகழ்வாக, விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு எதிரே உள்ள சர்ச்சைக்குரிய 8.3 ஏக்கர் நிலத்தில் நடைபெறவிருந்த மரக்கன்று நிகழ்வில் பங்கேற்பதாக இருந்தது.
இது தொடர்பான அழைப்பிதழும் அடிக்கப்பட்டது.
ஆனால், அந்த இடம் பிரச்சனைக்குரிய இடம் என்ற தகவல் கடைசி நேரத்தில் காவல் ஆணையருக்கு முக்கிய பிரமுகர் ஒரு வாயிலாக தெரியப்படுத்திய பிறகு அந்த நிகழ்வில் பங்கேற்பதை அவர் தவிர்த்துவிட்டார். இந்த விஷயத்தில், திருப்பூர் உளவுத்துறை கோட்டை விட்டது எப்படி என்று தெரியவில்லை என்றும் உளவுத்துறை ஏ.சி. ராதாகிருஷ்ணன் அலட்சியமாக இருந்து விட்டார் என்றும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
காவல் ஆணையர் பங்கேற்கும் முதல் கூட்டம் பிரச்சனைக்குரிய இடம் என்பது இங்குள்ள உளவுத்துறை போலீசாருக்கு தெரியாதா? அல்லது ஆணையர் கவனத்திற்கு வேண்டுமென்றே கொண்டு செல்லவில்லையா என்ற கேள்வி எழுந்தது. எனவே மெத்தனப்போக்குடன் ஆமை வேகத்தில் செயல்படும் உளவுத்துறை காவல் பிரிவை சீரமைக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது அதன் அடிப்படையிலேயே தற்போது உளவுத்துறை காவலர்களை கூண்டோட மாற்றியதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.


சில நேர்மையான அதிகாரிகள் கூறும் போது தற்போது பதவியேற்றுள்ள போலீஸ் கமிஷனா் இதற்க்கு முன்பு கடந்த அதிமுக ஆட்சியில் துணை கமிஷனராக திருப்பூரில் இருந்த போது அவா் தலைமை இடத்தில் அதிகாரம் இல்லாமல் இருந்தார் என்பதால் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் ஐபிஎஸ் அதிகாரி என்று மறந்துவிட்டு மதிக்காமல் போதிய மாரியாதை கொடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடித்து வந்தார்கள் என்ற குற்றச்சாட்டையும் வைக்கின்றனர்.
அதை மனதில் வைத்துக் கொண்டுதான் தற்போது அதிகாரம் பொறுப்பான திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றவுடன் பழி வாங்கும் விதமாக இவா் இதுபோன்ற நடவடிக்கையில் தீவிரம் காட்டுவதாகவும் ஒரு சில குற்றம் சாட்டுகின்றனர்.

திருப்பூர் மாநகரத்தில் பல வருடங்களாக ஒரே பணியிடத்தில் இருக்கும் போலீசாரை துரை ரீதியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றால் திருப்பூர் மாநகர ஆணையரகத்தில் பலதுறையில் இருக்கும் பல காவலர்களை மாற்றியிருக்க வேண்டும். குறிப்பாக வடக்கு துணை கமிஷனா் அலுவலகத்திலும், தெற்கு துணை கமிஷனா் அலுவலகத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்கின்றனர் ஒரு சில நேர்மையான காவல்துறை அதிகாரிகள்.

திருப்பூர் தெற்கு வடக்கு காவல் நிலையங்கள்


திருப்பூர் மாநகரத்தில் பல வருடங்களாக ஒரே பணியிடத்தில் இருக்கும் போலீசாரை துரை ரீதியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றால் திருப்பூர் மாநகர ஆணையரகத்தில் பலதுறையில் இருக்கும் பல காவலர்களை மாற்றியிருக்க வேண்டும். குறிப்பாக வடக்கு துணை கமிஷனா் அலுவலகத்திலும், தெற்கு துணை கமிஷனா் அலுவலகத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆண்டுக்கணக்கில் போலீசுக்கான சீருடையை மறந்து சப்-இன்ஸ்பெக்டா் வரை பதவி உயா்வு பெற்றவா்களை அடையாளம் கண்டு பணியிட மாற்றம் செய்திருக்க வேண்டும். மேலும் மாற்றப்பட்ட உளவுப்பிரிவு போலீசார் அனைவரும் மீண்டும் போலீசுக்கான சீருடை அணிய அவசியமில்லாத தனிப்பிரிவுகளுக்கு தான் மாற்றப்பட்டுள்ளனா். எனவே இந்த பணியிட மாறுதலில் தனிப்பட்ட சிலரின் தன்னிச்சையான முடிவாவும்,
கண் துடைப்புக்காக மட்டுமே இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.


அதே போல் 2014 முதல் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த ஒரு பெண் காவலரின் விருப்பத்துக்காக மீண்டும் அதே பணியிடம் வழங்கி இருப்பது மாநகர போலீசார் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றனா்.
திருப்பூர் மாநகர காவலர் ஆணையர் மீது வைக்கும் சாதகம் பாதகங்கள் அனைத்திற்கும் பதில் கொடுக்கும் வகையில் நேர்மையான முறையில் பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் பல துறையில் பல ஆண்டுகளாக பணியில் இருக்கும் காவல்துறையினர் மீது உள்ள புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் மீதும் நேர்மையான முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மீது பொதுமக்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படும் என்பதுதான் நிதர்சனம்.


2021 மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 15 மாதங்களில், மூன்று முறை திருப்பூர் காவல் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்ததுமே, அப்போது காவல் ஆணையராக இருந்த கார்த்திகேயன் மாற்றப்பட்டு, கடந்தாண்டு ஜூன் மாதத்தில் வனிதா, நியமிக்கப்பட்டார்.
வனிதா கடந்த ஜனவரி மாதம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, ஆணையராக இருந்து வந்த பாபு நியமிக்கப்பட்டார். ஆனால், அவரும் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். விடுப்பில் சென்றதற்கு காரணம் அரசியல் நெருக்கடி என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொறுத்திருந்து பார்ப்போம் .
திருப்பூர் மாநகர காவல் ஆணையரின் நேர்மையான மக்கள் பணியை….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button