என்கவுண்டர் செய்யப் போகும் முன்பு வீடியோ வெளியிட்டு காவல்துறையை மிரள வைத்த ரவுடி முத்து சரவணன் ! நடந்தது என்ன!?
காவல்துறை என்கவுண்டர் செய்யப் போவதை ஐந்து மணி நேரம் முன்பு நூத முறையில் வீடியோ வெளியிட்ட ரவுடி முத்து சரவணன்!
அதிர்ந்து போன ஒட்டு மொத்த காவல்துறை!
திடுக்கிடும் தகவல்! நடந்தது என்ன!?
திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு ஆன்லைன் மூலம் ஸ்கெட்ச் போட் கொலை செய்து காவல்துறையிடம் இருந்து தப்பி வந்த கூலிப்படை தலைவன் ரவுடி முத்து சரவணன் செல்போன் பயன் படுத்தாமல் காவல்துறைக்கு சவாலாக இருந்து வந்தவனை. நூதன முறையில் ஸ்கெட்ச் போட்டு தூக்கி சாதனை படைத்த காவல்துறை.
கடந்த 50 நாட்களுக்கு முன்பு பாடியநல்லூர் அதிமுக கட்சி நிர்வாகி பார்த்திபனை கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியான ரவுடி முத்து சரவணனை காவல்துறையினர் தேடி வந்தனர்.
ரவுடி முத்து சரவணன் வட மாநிலங்களில் தங்கியிருந்து கொண்டு கூலிப் படைகளை ஏவி கொலை செய்து வந்ததாகவும் பலமுறை காவல்துறை பிடிக்க முயற்சி செய்தும் காவல்துறைக்கு மிகவும் சவாலாக .
இருந்த நிலையில் 12/10/23 அதி காலையில்
திருவள்ளூர் சோழவரம் – புதூர் மாரம் பேடு பகுதியில் பிரபல ரவுடி முத்து சரவணன் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் வந்ததையடுத்து பூந்தமல்லி சரக உதவி காவல் ஆணையர் ஜவகர் தலைமையில்
காவல் ஆய்வாளர் ரமேஷ் காவல் உதவி ஆய்வாளர் அஷோக் மற்றும் மூன்று காவலர்கள் பதுங்கி இருந்த ரவுடி சரவணனை பிடிக்க முயற்சி செய்த போது
ரவுடி முத்து சரவணன் காவலர்களை அரிவாளால் தாக்கி கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து சுட முயற்சி செய்ததாகவும் தொடர்ந்து தற்காப்பு ரீதியாக போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் அவர் உயிரிழந்துள்ளார். இதில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி முத்து சரவணன் மீது
6 கொலைகள் உட்பட 17 வழிப்பறி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
.
வெளிவராத திடுக்கிடும் தகவல்!
ரவுடி முத்து சரவணன் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டால் அதை உடனே வீடியோ மூலம் வெளியிட முன்கூட்டிய தன்னுடைய வழக்கறிஞர் மூலம் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
திரைப்படத்தில் வரும் காட்சிகளை விட நூதன முறையில் திட்டம் போட்டு வீடியோ வெளியிட்டது எப்படி என்று காவல்துறையினர் விசாரணை செய்த போது கிடைத்த தகவலைக் கேட்டு பிரமித்து போய் இருந்ததாகவும் கிடைத்த தகவலின் படி
காவல்துறையில் சிக்கிக் கொண்டதை தாய் தந்தையை இருவரும் தன் மகனை காவல்துறையினர் சுட்டுக் கொல்லப் போவதாக வீடியோ வெளியிட வைத்தது எப்படி என்பதை
ரவுடி முத்து சரவணனின் சொந்த ஊரான ராமநாடு மாவட்டத்தில் புலனாய்வு மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
காவல்துறையினர் பிடித்தால் என்கவுண்டரில் சுட்டு கொன்று விடுவார்கள் என்று முத்து சரவணன் தன்னுடைய வழக்கறிஞரிடம் மட்டும் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்படி காவல்துறையிடம் சிக்கிக் கொண்டால் எப்படி வழக்கறிஞர் தெரிந்து கொள்வது என்பதை ரவுடி முத்து சரவணன் திட்டம் தீட்டி உள்ளார்.
ஒரு நாளைக்கு நான்கு முறை மட்டும் அதுவும் ஐந்து மணி நேரம் ஒரு முறை வழக்கறிஞருக்கு வேறொரு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வேன் என்றும் அப்படி ஐந்து மணி நேரத்திற்கு மேல் தொடர்பு கொள்ளவில்லை என்றால் காவல்துறையினரிடம் நான் சிக்கிக் கொண்டதாக தாங்கள் நினைத்துக் கொண்டு அப்பா அம்மாவை வைத்து வீடியோ வெளியிட வேண்டும் என்று நூதன முறையில் திட்டம் தீட்டி தினம் தோறும் வழக்கறிஞருக்கு 5 மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர்பு கொண்டு தன்னை காவல்துறை பிடிக்கவில்லை என்பதை உறுதி செய்து வந்த நிலையில் தான் 11/10 23 அன்று இரவு வழக்கறிஞருக்கு ரவுடி முத்து சரவணன் தொடர்பு கொள்ளவில்லை. உடனே ரவுடி முத்து சரவணன் என் தாய் மற்றும் தந்தை இருவரும் தன் மகனை காவல்துறையினர் பிடித்து என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப் போகிறார்கள் என்று பேச வைத்து வீடியோ பதிவு செய்து அதை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் வழக்கறிஞர் . இந்த வீடியோ வெளியே வந்ததும் ஒட்டுமொத்த காவல் துறையும் திகைத்துப் போய் இருந்துள்ளது.
ஏனென்றால் தேடப்படும் கொலை குற்றவாளியை பிடிப்பதற்கு காவல்துறை ரகசியமாக தனிப்படை அமைத்து தேடுவார்கள். அப்படி தேடும்போது குற்றவாளிகள் அவர்களிடம் பிடிபட்டால் அவர்களை விசாரணை செய்து முடிந்த பின்பு தான் வெளியே தெரிவிப்பார்கள். ஆனால் ரவுடி முத்து சரவணன் காவல்துறையினர் பிடித்த உடன் அந்த வீடியோ வெளிவந்தது தான் காவல்துறைக்கு மிகவும் சவாலாக இருந்துள்ளது.
ஏற்கனவே ரவுடி முத்து சரவணன் செல்போனை எப்பவுமே பயன்படுத்த மாட்டார் என்றும் ஆன்லைன் மூலம் தான் கூலிப்படைகளுக்கு தகவலை பரிமாற்றம் செய்து கச்சிதமாக கொலை செய்து வந்துள்ளனர். இதனால் காவல்துறைக்கு ரவுடி முத்து சரவணன் பிடிப்பதற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.. ஆனால் எட்டு கொலைக்கு மேல் செய்த ரவுடி முத்து சரவணன் பிடித்து சரண்டர் செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்த நிலையில்தான் தனிப்படை காவல்துறையினர் ரவுடி முத்து சரவணனை கண்டுபிடிக்க பல கோணங்களில் ரகசிய தேடுதல் வேட்டை நடத்திய போது தான் ரவுடி முத்து சரவணனின் கூலிபடையில் இருக்கும் ஒரு குற்றவாளியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த குற்றவாளி சொன்ன தகவலின் படி முத்து சரவணன் எங்கு இருக்கிறான் என்பதை சைபர் கிரைம் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தொடங்கிய போது தான் ரவுடி முத்து சரவணன் டெல்லியில் பதுங்கி இடத்திற்கு காவல்துறை விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ரவுடி முத்து சரவணன் பிடித்து சென்னைக்கு விமானம் மூலம் துறையினர் அழைத்து வந்து விசாரணை செய்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு வீடியோ வெளிவந்தது அந்த வீடியோவில் ரவுடி முத்து சரவணன் தாய் பேசி வெளியிட்ட வீடியோ அந்த வீடியோவில் முத்து சரவணன் தாய் என் மகனை காவல்துறையினர் சுட்டுக் கொள்ள போகிறார்கள் என்றும் அவரைக் காப்பாற்றுங்கள் என்றும் கதறி அழுகும் ஒரு வீடியோ வெளிவந்தது . இதைக் கண்ட காவல்துறையினர் ரவுடி முத்து சரவணனை பிடித்து ரகசியமாக விசாரணை செய்து வருவதை யார் தகவல் குடுத்து இருப்பார்கள் என்று பல கோணத்தில் விசாரணை நடித்திருக்கிறார்கள் காவல் துறையில் உள்ள நபர்களே இந்த தகவலை வெளியிட்டு இருப்பார்களா என்ற சந்தேகமும் காவல்துறையில் வந்துள்ளது ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தான் ரவுடி முத்து சரவணன் தன் வழக்கறிஞரை வைத்து ஏற்கனவே திட்டம் போட்டு தன்னுடைய தாயைப் பேச வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டு ஒட்டுமொத்த காவல்துறையினரை பரபரப்பாக பேச வைத்துள்ளது .