மாவட்டச் செய்திகள்

ஏலம் எடுத்த 24 மணி நேரத்தில் 5  லட்சம் ரூபாய் இழந்த மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி திமுக முன்னாள் செயலாளர் !!

ஏலத் தொகை 15 லட்சம் ரூபாய் கட்ட முடியாமல் ஐந்து  லட்சம் ரூபாய் இழந்த திமுக முன்னாள் சோழவந்தான் பேரூராட்சி செயலாளர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் தினசரி மற்றும் வார சந்தை ஏலம் எடுத்த தொகை.ரூ. 15. லட்சம்  செலுத்த முடியாததால் கைவிட்டுப் போன  5 லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து வருடம் ஏலத்தில் பங்கு கொள்ள முடியாத நிலையில் சிக்கித் தவிக்கும்  சோழவந்தான் திமுக செயலாளர்!மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் தினசரி மற்றும் வார சந்தை ஏலம் விட அறிவிப்பு வெளியாகி இரண்டு முறைக்கு மேல் ஒத்தி வைக்கைப்பட்ட நிலையில்
09/12/2022 அன்று காலை 11.மணியளவில்  பேரூராட்சி அதிகாரி சுதர்சன் மற்றும் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் ஆகியோர்  முன்னிலையில் சந்தைக்கான ஏலம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.
தினசரி சந்தை ஏலத்திற்கு டெபாசிட் தொகையாக மூன்று லட்ச ரூபாய் மற்றும்  வார சந்தை டெபாசிட் தொகையாக ரூபாய் இரண்டு லட்சமும் ஏலதாரர்களிடமிருந்து காசோலையாக சோழவந்தான் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். ஏலம் எடுத்த பின் 24.மணி நேரத்திற்குள் மீதி  ஏலத்தொகையுடன்  வருமானவரி மற்றும் சிஎஸ்டி வரி சேர்த்து முழவதும் செலுத்த வேண்டும்
என்ற விதிமுறைக்குட்பட்டு ஒரு சிலர் ஏலத்தில் கலந்துகொண்டனர்.

தினசரி சந்தை மற்றும் வாரச்சந்தை என தனித்தனியாக நடந்த சந்தை ஏலத்தில்  முனியாண்டி என்பவர் தினசரி சந்தையை .ரூ 12. லட்சத்தது ஆயிரம் ரூபாய்க்கும் வாரசந்தையை .ரூ.3.லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கும்  ஏலம் எடுத்தார்.
இதன் பின்னர் 24 மணி நேரம் முடிந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மதியம் 2.மணிவரை சந்தைகள் ஏலம் எடுத்த முனியாண்டி ஏலம் எடுத்த  ஏலத்தொகை  முழவதும் செலுத்தவில்லை .

இதனால் ஏல விதிப்படி முனியாண்டியின் டெபாசிட் முன் தொகையான .ரூ.5.லட்சம் ரூபாயை திரும்ப பெற தகுதி இழந்தவராகவும் மேலும் 3.முதல் 5.ஆண்டுகளுக்கு அரசு ஏலத்தில் கலந்து கொள்ளமுடியாது என பேரூராட்சி  அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏலடெபாசிட்தொகை ரூ. 5 லட்சம் இழந்த சோழவந்தனை சேர்ந்த முன்னாள் சோழவந்தான் பேரூராட்சி திமுக செயலாளராக 15 ஆண்டுகள்  மேலாக பதவி வகித்தவர் என்பது குறிபிடத்தக்கதாகும்..

மறு ஏலம் விடப்படும் எந்த தேதி என்பதை அடுத்த பேரூராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button