மாநகராட்சி

ஒப்பந்தம் வழங்க 20 சதவீதம் கமிஷன் வாங்கும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள்! உழைப்பாளர் மக்கள் கழகம் அதிரடி குற்றச்சாட்டு!

சாலை போட ஒப்பந்தம் வழங்க கமிசன் வாங்கியதாக  திருப்பூர் மாநகராட்சி முன்னாள் துணை ஆணையர் சபியுல்லா மீது உழைப்பாளர் மக்கள் கழகம் மாநில நிர்வாகி சிவ சுப்பிரமணி புகார்

திருப்பூர் நகராட்சியில்  சாலை பணி ஒப்பந்தம் வழங்க 20 சதவீதம் கமிஷன்!
தரமற்ற சாலைகளால் பொதுமக்கள் அவதி! மக்கள் உழைப்பாளர்கள் கழகம் சிவ சுப்பிரமணி பேசிய அதிர்ச்சி ஆடியோ

திருப்பூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் தார் சாலைகள், கான்கிரீட் சாலைகள், மெட்டல் சாலை மற்றும் மண் சாலைகள் ஆயிரம் கி.மீ., நீளத்துக்கும் மேல் அமைந்துள்ளன.


திருப்பூர் மாநகராட்சி 160 சதுர கி.மீ., பரப்பளவில், 60 வார்டுகளை உள்ளடக்கியது.திருப்பூர் மாநகரில் மொத்தம் 402 கிலோ மீட்டர் தூரம் சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.207 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரம் நிதி அரசிடம் கோரப்பட்டது. அதற்கான நிர்வாக அனுமதி கிடைத்து டெண்டர் விடப்பட்டு படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல் மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு 168 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.உள்ளாட்சி அமைப்பு பதவியேற்ற போது, மாநகர பகுதியில் 903 கி.மீ., நீளம் சாலைகள் சீரமைப்பு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் முந்தைய நிதியாண்டில் 204 கி.மீ., பணி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 402 கி.மீ., நீளமும் ரோடு போட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 208 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு, திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 189 பேக்கேஜ் அடிப்படையில், 2,700 பணிகள் இந்த 402 கி.மீ., நீள சாலைகள் அமைக்கும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் கட்ட நிதி ஆதாரங்கள் பெறப்பட்ட பணிகள் தற்போது பல்வேறு திட்டங்களின் கீழ் பகுதி வாரியாக துவங்கப்பட்டுள்ளது

இந்த பணிக்காக ரூ.228 கோடி திட்டமிடப்பட்டு அரசிடம் நிதிஉதவி கோரப்பட்டது. தற்போது முதல்கட்டமாக ரூ.40 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதில் ரூ.11 கோடியே 38 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் தார் சாலை போட ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு 20 சதவீதம் வரை கமிஷன் தொகை தர வேண்டும் என உழைப்பாளர் மக்கள் கழகம் மாநில நிர்வாகி அதிரடி குற்றம் சாட்டியுள்ளார். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை போட 20 லட்சம் கமிஷன் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டுமாம்.ஒப்பந்த வழங்குவதற்கு  முன்பு முன் தொகையாக 10%   அதாவது இரண்டு லட்சம் ரூபாய் தர வேண்டுமாம் . அப்படி என்றால் தற்போது 200 கோடிக்கு மேல் தற்போது ஒப்பந்தம் விட கூறப்பட்டுள்ளது ஆகையால் 200 கோடிக்கு இருபது சதவீதம் கமிஷன் என்றால் 40 கோடி ரூபாய் அதிகாரிகளுக்கு மட்டும் கமிஷன் தொகையாக கொடுக்க வேண்டியது இருக்கும் என்பதுதான் நிதர்சனம் அது மட்டும் இல்லாமல் ஒப்பந்ததாரர்கள் தாங்கள் ஒப்பந்தம் எடுத்த தொகையில் லாபம் பார்க்காமல் சாலை போட முடியாது அப்படி என்றால் அவர்கள் 20% கண்டிப்பாக லாபத்துடன் தான் சாலை போடும் பணியை தொடங்குவார்கள் இப்படி இருக்கும் போது எப்படி தரமான சாலைகள் இருக்கும் போட முடியும் என்பது தான் அனைத்து சமூக ஆர்வலர்கள் மில்லியன் கேள்வியாக உள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் சாலைகள் போட ஒப்பந்தம் வழங்கும்போது அதிகாரிகள் மூலம் 20% கமிஷன் பேசி ஒப்பந்தம் வழங்கப்படுவது தான் தற்போது வரை நடைமுறையாக இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் வெளிப்படையாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதேபோல் தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் நடக்கும் பணிகள் அனைத்திற்கும் இதே நிலைதான் தொடர்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது . பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் சாலைகள் அமைக்க ஒப்பந்தம் விடுவதில் பல நூறு கோடி ரூபாய் கமிஷன் தொகையாக அதிகாரிகளுக்கு போய் சேருகிறது என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது.

ஆகவே மாநகராட்சிகளில் முக்கிய பொறுப்பில் உள்ள பொறியாளர்கள் அதிகாரிகள் கமிஷன் லஞ்சம் வாங்குவதாக வரும் புகார் மற்றும் குற்றச்சாட்டிற்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினால் மட்டுமே உண்மை நிலவரம் வெளிச்சத்திற்கு வரும் . அதுமட்டுமில்லாமல் மாநகராட்சியில் உள்ள முக்கிய உயர் பதவியில் உள்ள அதிகாரிகளின் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை இட்டால் மட்டுமே லஞ்சம் வாங்கி இருக்கிறார்களா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார்களா என்பதை கண்டுபிடித்து மக்களுக்கு வெளிச்சம் காட்ட முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.


200 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு 20 சதவீதம் கமிஷன் அதிகாரிகளுக்கு கட்டாயம் கொடுத்தால் மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இழந்துள்ளது. அதுவும் குறிப்பாக ஒப்பந்தம் வழங்கும் முன்பே முன் தொகையாக ஒப்பந்ததாரர்களிடம் பல லட்ச ரூபாய் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒப்பந்தம் கொடுப்பதாக பல லட்ச ரூபாய் முன் தொகை  கமிஷனாக பெற்றுக் கொண்டு கடைசி நேரத்தில் ஒப்பந்தம் வழங்க முடியாத நேரத்தில் ஒப்பந்தம் கிடைக்கும் என்று கொடுத்த கமிஷன் முன் தொகையை உயர் அதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் அதில் முக்கியமாக உயர் பொறுப்பில் உள்ள சீனியர் பொறியாளர்கள் வேறு மாநகராட்சிக்கு மாற்றப் படுவதால் கொடுத்த  கமிஷன் தொகையை   ஒப்பந்ததாரர்கள்  திருப்பி கேட்டால் மறுபடியும் திருப்பூர் மாநகராட்சிக்கு மாறுதல் பெற்று வந்தால் உங்கள் பணத்தை திருப்பித் தருகிறேன் என்று அந்த உயர் பதவியில் இருக்கும் பொறியாளர்கள் கூறுவதாக உழைப்பாளர் மக்கள் கழகம் மாநில நிர்வாகி சிவ சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button