மாவட்டச் செய்திகள்

ஓடும் ரயிலில் செல்போன் திருடும் மர்ம கும்பல்கள் கல்லால் தாக்கியதில் ஒரு கண்ணை இழந்த திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை காவலரின் சோக சம்பவம்!

இரயிலில் செல்லும் பயணிகளிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரயிலின் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணிக்கும் பயணிகள், ரயில் படியில் நின்றபடி செல்லும் பயணிகள், உறங்கிக்கொண்டு செல்லும் பயணிகளை குறிவைத்து நிறைய திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
ரயில் தண்டவாளம் ஓரம் நின்றபடியோ திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க ரயில்வே காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில்தான்
சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் ரயில் இந்த திருட்டு முயற்சி நடந்துள்ளது. திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் முதல்நிலை காவலர் சுதாகர் கடந்த 18.09.2024 ம் தேதி சென்னையில் வேலையை முடித்து விட்டு இரவு ரயிலில் மூலம் திருச்சிக்கு சென்றுள்ளார். விழுப்புரம் அருகே நெருங்கிய ரயில் வேகம் குறைந்து மெதுவாக சென்று கொண்டிருந்தபோது திருச்சி மாவட்ட சிலை கடத்தல் பிரிவு தலைமை காவலர் ரயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டு தனது மனைவியிடம் போனில் பேசிக்கொண்டு வந்துள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள். கல்லால் தாக்கியுள்ளனர். இதனால் காவலரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் முகத்தில் தசை எலும்புகளும், பற்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே பணியல் இருந்த ரயில்வே காவலர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கண் முழுவதும் சேதமடைந்துள்ளதால் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை அரவிந்த் கண் சிறப்பு மருத்துவமனைக்கு உடனே அனுப்பப்பட்டு மதுரை அரவிந்த் மருத்துவமனையில் கண் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அருவை சிகிச்சை மூலம் ஒரு கண்ணை அகற்றி உள்ளனர். மேலும் அந்த காவலருக்கு மூன்று பல் மற்றும் முகத்தில் உள்ள தசை எலும்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓடும் ரயிலில் நூதன முறையில் கல்லால் தாக்கி செல்போன்களை திருடிச் செல்லும் திருட்டு கும்பல்களை கண்டுபிடித்து கைது செய்ய காவலரின் மனைவி விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஆனால் காவலரின் மீது கல்லால் தாக்குதல் நடத்திய திருட்டு கும்பல்களை கண்டுபிடித்து கைது செய்யாமல் இருப்பதும் காவலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே உடனடியாக ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் நலன் கருதி ரயில்வே காவல்துறையினர் கல்லால் தாக்குதல் நடத்தி நூதன முறையில் செல்போனை திருடிச் செல்லும் மோசடி திருட்டு கும்பல்களை விரைவில் கண்டுபிடிக்க தனிப்படை காவல்துறையினரை நியமிக்க வேண்டும் என தமிழக டிஜிபி மற்றும் ரயில்வே காவல்துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button