கஞ்சா விற்ற அண்ணன் தம்பி இரண்டு பேரை கைது செய்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பள்ளிபாளையம் காவல்துறை!

நாமக்கல் மாவட்டம் வெப்படை காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு செல்லும் வழியில் நெட்ட வேளாம்பாளையம் அருகே பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் ரெங்கசாமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனையின் சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் பெயர் விஜய சேகர்( வயது 22,) என்றும் பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் பகுதியில் சின்னார் பாளையம் என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும் அவருடன் உடன் பிறந்த அண்ணன் பார்த்திபன் (வயது 26 ) ஆகிய இருவரும் தங்கி இருப்பதாகவும் இருவரும் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பின்பு இருவரையும் கைது செய்த பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் பறிமுதல் செய்த இரண்டரை கிலோ கஞ்சாவுடன் கைது செய்த இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.