கடனை அடைத்து மூன்று வருடம் ஆகியும் அசல் பத்திரம் கொடுக்க மறுக்கும் கூட்டுறவு சங்கம் அதிகாரிகள்!
கடனை அடைத்து மூன்று வருடம் ஆகியும் அசல் பத்திரம் கொடுக்க மறுக்கும் கூட்டுறவு சங்கம் அதிகாரிகள்!
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கெப்பு சோலை பட்டியை முத்துக்குமார் வயது 40 விஜயராணி வயது 37 தம்பதியினர் சின்னாளபட்டியில் உள்ள டி டி -163 கூட்டுறவு சங்க கட்டிடத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டில் வீடு கட்டுவதற்காக தனது சொத்தின் அசல் பத்திரம் அடமானம் வைத்து ரூபாய் 2.25லட்சம் கடனாக பெற்றுள்ளனர். வாங்கிய கடனை வட்டியும் அசலும் பணம் 2020 ஆம் ஆண்டில் கட்டி முடித்துள்ளனர் அதற்கான ரசிதும் மேலும் எந்த ஒரு கடனும் இல்லை என்றும் தடையில்லா சான்றுகளும் வாங்கியும் உள்ளனர். பத்திரத்தை திருப்பி கேட்ட போது உங்களுடைய பத்திரம் சென்னை அலுவலகத்தில் உள்ளது என்று அதிகாரி பலமுறை கூறியுள்ளார். மனைவி விஜயராணி கூறும் போது நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம் எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து வாங்கிய கடன் தொகையினை கட்ட வேண்டும் இல்லையென்றால் வீட்டை ஏலத்தில் விட்டு விடுவோம் என்றும் நாங்கள் வந்து செல்லும் வாகனம் ஆட்டோ செலவு எல்லாம் உங்கள் கணக்கில் தான் வர வைக்கப்பட்டு வருகிறது என்றும் கூறிவிட்டு செல்வார்கள் பின்பு அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடனை அடைத்தோம் கடந்த மூன்று வருடங்களாக அசல் பத்திரத்தை கொடுக்காமல் அலைய விடுகின்றனர் என்று கண்ணீருடன் கூறினார். பின்பு சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.