கனிம வளங்கள் கொள்ளைக்கு துணைப் போகும் புதுக்கோட்டை வருவாய்த் துறை அதிகாரிகள்! நீதி மன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு மௌனம் காக்கும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்!?
கனிம வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
கனிம வளங்கள் கொள்ளைக்கு துணைப் போகும் கந்தவர்க் கோட்டை வருவாய்த் துறை அதிகாரிகள்!
கண்டுக் கொள்ளாமல் கோமாவில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்!
கனிம வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
தேசத்தின் சொத்துக்களான கனிம வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதை அனுமதிக்க கூடாது என்றும் வளங்களைத் திருடும் சட்டவிரோத செயல்களை மிக கடுமையான முறையில் அணுக வேண்டும் என்று அரசுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்தும் மௌனம் காக்கும் மாவட்டம் ஆட்சியர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் புதுக் கோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கனிம வளங்களை ஜே சி பி இயந்திரங்கள் வைத்து பல அடி ஆழத்திற்கு தோண்டி கடத்தப் பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
இது சம்மந்தமாக விசாரிக்க ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிகை குழு அந்தப் பகுதிக்கு சென்று போது அரசு புறம்போக்கு நிலங்கள் பல ஏக்கர் பரப்பளவில் மண் எடுக்கப்பட்டு பெரிய பெரிய குளங்கள் போல் காட்சியளித்தது.
அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கூறியது என்னவென்றால்
முக்கிய அரசியல் புள்ளிகள் பெயரைச் சொல்லி இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை சமூக விரோதிகள் சிலர் சட்ட விரோதமாக கிராவல் மண் வெட்டி எடுத்து கடத்தி வருவதாகவும் மண் கடத்தல் கடந்த அதிமுக ஆட்சியிலிருந்து தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதுவும் குறிப்பாக
அரசு புரம்போக்கு நிலங்களை குறிவைத்து இரவு வேலையில் ஜேசிபி பொக்லைன் இயந்திரத்தை வைத்து கிராவல் மன் வெட்டி எடுத்து கடத்தி வருகின்றனர் என்றும் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.
இவர்கள் தோண்டிய 10 அடிக்கு மேல் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருப்பதாகவும் அந்தப் பகுதிக்கு செல்லும் சிறுவர்கள் பள்ளத்தில் விழுந்து உயிருக்கு ஆபத்து நடந்து விடுமோ என்று அச்சத்தில் அப்பகுதி பொது மக்கள் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த கிராவல் திருட்டில் JCB கணரக இயந்திரம் டிரக்டர் மற்றும் டிப்பர் லாரிகளை பயன்படுத்தி அதிக அளவில் கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள கனிமவளங்களை வெட்டி எடுத்து கடத்தி உள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு புறம்போக்கு நிலங்களில் சமூக விரோதிகள் சட்ட விரோதமாக மண் எடுத்து கடத்துவதற்கு புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வருவாய்துறைனர் மற்றும் காவல்துறைக்கு மறைமுகமாக பல லட்சம் ரூபாய் கப்பம் கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இந்த கனிம வளங்களை கடத்துவதற்கு மாவட்ட நிர்வாக உயர்அதிகாரிகள் வரைக்கும் சேரவேண்டிய தொகை சரியான நேரத்திற்கு சேர்ந்து விடுவதால் சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் புகார் மனுக்களை கண்டுகொள்வதில்லை என்றும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன் வருவதில்லை என்று அப்பகுதி மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
பல இடங்களில் உரிய விதிகளை கடைபிடிக்காமல் கனிம வளங்கள் அனுமதி அளவைவிட கூடுதலாக எடுக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ வேலியே பயிரை மெய்வது போல அரசு நிலங்களை பாதுகாக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமே சமூக விரோதிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறது என்பது வேதனை அளிக்கிறது.
ஆகவே அரசு நிலங்களில் உள்ள கனிம வளங்களை காப்பற்ற முறைகேடுகளில் ஈடுபடும் கந்தவர் கோட்டை தாலுகா வருவாய்த் துறை அதிகார்கள் அனைவர் மீதும் முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் ஒட்டு மொத்த கோரிக்கை ஆகும்.