கபசுர குடிநீர் மற்றும் அமுக்கரா சூரண மாத்திரையை பொதுமக்களுக்கு வழங்கிய ஆட்சியர்
(014.08.2021) காஞ்சிபுரம் நகராட்சி, பூக்கடை சத்திரம், கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழி்ப்புணர்வு தொடர் பிரச்சார வார விழாவில் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் அமுக்கரா சூரண மாத்திரையை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி, அவர்கள் வழங்கினார். உடன் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் .திவ்யா மற்றும் சுகாதாரத்துறை அலுலவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இன்று (014.08.2021) காஞ்சிபுரம் நகராட்சி, பூக்கடை சத்திரம், கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழி்ப்புணர்வு தொடர் பிரச்சார வார விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரச்சார வில்லைகளை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் ஆட்டோவில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உடன் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் திருமதி.திவ்யா மற்றும் சுகாதாரத்துறை அலுலவலர்கள் ஆகியோர் உள்ளார்.