மாவட்டக் கல்வித் துறை

கருணையே இல்லாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம்
காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் தலைமை ஆசிரியை!
கோமாவில் இருக்கும் தேனி மாவட்ட கல்வி நிர்வாகம்! கண்டுகொள்ளாத தேனி மாவட்ட ஆட்சியர்!

கருணையே இல்லாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம்
காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் தலைமை ஆசிரியை!
கோமாவில் இருக்கும் தேனி மாவட்ட கல்வி நிர்வாகம்!

தேனி மாவட்ட ஆட்சியர்


தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக விருதுநகர் தொடக்கக்கல்வி அலுவலர் இந்திராணி பதவி உயர்வு பெற்று 2023 ஜூலை மாதம் தேனி அல்லி நகரத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி

அதேபோல், தமிழகத்தில் மொத்தம் 7 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று, காலியாக இருந்த மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி அல்லிநகரத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், நல்ல கருப்பன் பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 100க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள்.

பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைவை சந்திக்கின்ற இப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளை இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை பெரிதும் நம்பியே கல்வி கற்க இங்கு அனுப்பி வைக்கிறார்கள்,
ஆனால் இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியை மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் இப்பகுதி மக்களால் வைக்கப்படுகிறது.

தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்றார் போல் தலைமை ஆசிரியைக்கு ஒதுக்கப்பட்ட அறிவியல் பாடத்தை மாணவ மாணவிகளுக்கு சொல்லித் தராததால் தேர்வு எழுதும் போது மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கருணையே இல்லாமல் மாணவர்களின் பெற்றோர்களை பார்த்து உங்கள் பிள்ளைகள் தேர்வு எழுதும் போது தேர்வு தாளில்”அறிவியல் பாடம் நடத்தவில்லை என்று எழுதி வைக்கச் சொல்லுங்கள் “என்று
ஒரு படித்த ஆசிரியை போல் நடந்து கொள்ளாமல் ஏதோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடனை வசூல் செய்ப்பவர்கள் போல காட்டுமிராண்டித்தனமானமாகா நடந்து கொள்வதாகவும்
மேலும் தேர்வு நேரத்தில் வினாத் தாளுக்காக அதிகமான பணத்தை பள்ளி குழந்தைகளிட மிருந்து தலைமை ஆசிரியை வசூல் செய்ததாகவும் .
பள்ளிகளில் பள்ளி குழந்தைகளை வைத்து துப்புரவு பணி மேற்கொள்ளக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்ட தலைமை ஆசிரியை பள்ளி வளாகத்தையோ, வகுப்பறையையோ சுத்தம் செய்ய அங்கு பயிலும் பள்ளி குழந்தைகளை வைத்து விதிக்கு மாறாக தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை துப்புரவு பணியில் ஈடுபடுத்தி வருவதாக புகைப்படம் ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளதாகவும்
அதுமட்டும் இல்லாமல் ஊராட்சி மன்றத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களையும் வைத்து பள்ளி வளாகத்தை இவர் தினம் தூய்மை செய்வதாகவும் தெரிகிறது .இந்த துப்புரவு, தூய்மை பணிகளுக்காக ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ஒரு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது .

அந்த நிதியை இந்த பள்ளியின் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு தனியாக ஒரு ஆளை நியமித்து செய்ய வேண்டும் என்பது அரசின் பொது விதி ஆகும். இப்படி அரசின் விதிகளை காற்றில் பறக்கவிட்டு
அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்விச் சூழலை பாதிக்கும் வகையிலும்,குழந்தை களின் அடிப்படை உரிமைகளை அவமதிக்கும் வகையிலும் இருப்பதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் ஆகவே மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி உடனடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடனே வேறு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் எனவும். தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி மற்றும் கல்வித் துறை உயர் அதிகாரிகளிடமும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமான தேனி மாவட்ட பகுதி மாணவர்கள் படிக்கும்
நல்ல கருப்பன் பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியின் கல்வி வளர்ச்சி சூழ்நிலையை பாதுகாக்க வேண்டும்.
இதுவே அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளியில்

படிக்கும் மாணவர்கள் அந்த பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத் தக்கது.



பொறுத்திருந்து பார்ப்போம்
கல்வித்துறை அமைச்சர் மற்றும்
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நடவடிக்கையை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button