கருவுற்ற ஐந்து மாத பச்சிளம் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற மர்மப் பெண் யார்!?
சேலம் காவல்துறை விசாரணை!
கள்ளக்காதலனால் கருவுற்ற ஐந்து மாத பச்சிளம் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற மர்மப் பெண் யார்!?
சேலம் காவல்துறை விசாரணை !
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட நெத்திமேடு பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்டா மிஷின் சாலையில் குப்பைகளை அகற்ற முயன்ற போது அந்த குப்பையில் பச்சிளம் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்த துப்புரவு பணியாளர்கள் உடனே அருகில் உள்ள அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் உதவி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன் பின்பு இறந்து கிடந்த பச்சிளம் குழந்தையை பிரோத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். வயிற்றில் கருவில் 5 மாத குழந்தையாக இருக்கும் போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்து சில மணி நேரத்தில் குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றதால் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் சேலம் மற்றும் சுற்றுவட்டாரம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை வருகின்றனர்.
இது எப்படியோ மருத்துவமனைகளில் பணத்திற்காக இதுபோன்று கருவில் உள்ள பச்சிளம் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து கொடுப்பது சத்தத்திற்கு புறம்பானது. ஆகையால் உடனடியாக இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது சுகாதாரத்துறை அவர்கள் மீது சட்ட ரீதியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாகும்.