கல்லூரி விடுதியில் நடக்கும் தொடர் குற்றங்கள்!
சிக்கித் தவிக்கும் மாணவர்கள்!
மறைக்க முயற்சி செய்யும் நாமக்கல் எக்ஸெல் கல்லூரி நிர்வாகம்!
மௌனம் காக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் உயர் கல்வித் துறை நிர்வாகம்! நடந்தது என்ன அதிர்ச்சி தகவல்!

நாமக்கல் மாவட்டம் சங்ககிரி பள்ளிப்பாளையம், சேலம் சாலையில் எக்ஸெல் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரியில் உள்ள விடுதியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.

எக்ஸெல் பொறியியல் கல்லூரியில்
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடிப் பகுதியைச் சேர்ந்த கோகுல், வயது 19. மாணவன்பி.டெக்., மூன்றாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்த மாணவன் கடந்த 05/10/25 ஞாயிறு அன்று இரவு, விடுதியில் உணவு சாப்பிட்டுவிட்டு நள்ளிரவு வரை நண்பர்களுடன் பேசிவிட்டு தூங்கச் சென்றவுடன்
அவருடன் சக மாணவர்களும் தூங்கச் சென்று விட்டனர்.
மறுநாள் காலை ஏழு மணி அளவில் வழக்கம் போல் கோகுலுடன் தங்கி இருந்த ஹரி என்ற மாணவர் இரண்டு பேரும் கழிப்பறைக்கு
சென்றுள்ளார் .
அதன் பின்பு நீண்ட நேரம் ஆகியும் கழிப்பறைக்குச் சென்ற கோகுல் வரவில்லை.
அதன் பின்னர் ஹரி கோகுல் சென்ற கழிப்பறை தள்ளிப் பார்த்துள்ளார் உள்பக்கம் கதவில் தாழ்ப்பால் போட்டிருந்ததால் திறக்க முடியவில்லை.
அதன் பின்பு கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது கோகுல் அணிந்திருந்த டவுசர் நாடாவினால், கழிப்பறையில் உள்ள கம்பி ஒன்றில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்ததை பார்த்த சக மாணவன் ஹரி அதிர்ச்சி அடைந்து
அதன் பின்னர் கல்லூரி வார்டன் இளவரசனுக்கு தகவல் கொடுத்த பின்பு கல்லூரி வார்டன் இளவரசன் உடனடியாக

குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் .
அதன் பின்னர் குமாரபாளையம் காவல் நிலைய காவலர்கள் எக்ஸெல் பொறியியல் கல்லூரிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்து கிடந்த கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும். மாணவன் கோகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள மாணவனின் உறவினர்களிடம் விசாரணை செய்த போது தூக்கிட்டு தற்கொலை செய்யும் அளவிற்கு மாணவன் கோழை இல்லை என்றும்.
தைரியமான மாணவன் என்றும் மாணவன் அணிந்திருந்த டவுசர் நாடாவில் அதுவும் கழிப்பறையில் உள்ள கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் மாணவனின் மரணத்தில் சந்தேகம் மற்றும் மர்மம் இருப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் உண்மையான மரணத்தை மறைக்க முயற்சி செய்வதாகவும்
கல்லூரி வளாகம் மற்றும் கல்லூரியின் விடுதி பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையிடம் கொடுக்காமல் இருப்பதால்
கல்லூரி நிர்வாகத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் நாங்கள் காவல்துறையில் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வராமல் கல்லூரி நிர்வாகங்கள்
பண பலத்தாலும் அரசியல் பலத்தாலும் கொலையை தற்கொலையாக மாற்றி முயற்சி செய்து வருவதாகவும்
ஆகவே எக்ஸெல் பொரியல் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் எதிர்கால நலன் கருதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நேர்மையான அதிகாரிகளை நியமித்து கல்லூரி விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களா இல்லை மரணத்திற்காக வேறு ஏதாவது காரணமா என நேர்மையான முறையில் விசாரணை செய்து தற்கொலை மரணம் இல்லை என தெரியவரும் பட்சத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் தனியா கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் வருங்கால நலன் கருதி தமிழக முதல்வர் அவர்கள் கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு வந்தால் மட்டுமே மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் வருங்கால கனவு நிறைவேறும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து 22 நாட்கள் மட்டுமே ஆனா நிலையில் அதுவும் ஆயுத பூஜை தீபாவளி பண்டிகை விடுமுறை என சுமார் 10 தினங்களுக்கு மேல் கல்லூரிக்கு விடுமுறை விட்டு தற்போது கல்லூரி திறந்து நான்காவது நாளில் அக்டோபர் 26 ஆம் தேதி இரவு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் கேட்டீனில் உணவை சாப்பிட்டு விட்டு, குடிநீரை குடித்த சில நிமிடங்களில் 400 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர், உடனடியாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நான் ஒரு மாணவ, மாணவிகளையும் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் வெளியே உள்ள அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் அனைவரும் நலமுடன் திரும்பி வந்துள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் .ஆனால் அங்கு நடந்த சம்பவம் பற்றி ஒரு சில மாணவர்கள் கூறும்போது உணவு சாப்பிட்டு வாந்தி மயக்கம் அடைந்து கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் உடல் மிகவும் மோசமான நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் ஆனால் கல்வி நிர்வாகம் அந்த நான்கு மாணவர்களின் உடல்நிலை பற்றி வெளியே தெரியாமல் மூடி மறைக்க முயற்சி செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறையினர் கல்லூரி விடுதிக்கு சென்று இரண்டு நாட்களாக உணவு கூடங்களை ஆய்வு செய்தனர். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீர் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்திய போது,





மாணவர்களுக்காக உணவு தயாரிக்கும் கூடத்தில், உணவே சமைக்க முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மாணவர்கள் குடிப்பதற்காக பயன்படுத்தப்படும் குடிநீர் தொட்டி முழுவதும் அசுத்தமாகவும், புழுக்கள் நிறைந்ததாகவும் இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது “நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் எக்ஸெல் பொறியியல் கல்லூரியில் கடந்த 26 ஆம் தேதி விடுதியில் தங்கியிருந்த மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் குடி நீரால் சுமார் 400 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக கல்லூரி நிர்வாக மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு சிகிச்சைக்குப் பின் அனைத்து மாணவ மாணவியர்களும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் இந்த நிகழ்வின் காரணமாக எந்த ஒரு மாணவ, மாணவியர்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படவில்லை” என்றும் மேலும், பாதிப்புக்குள்ளான பகுதிகளை சீர் செய்து தூய்மைப்படுத்தவும், மாணவர்களுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும்
சோதனை முடிவுகள் வெளிவரும் வரை கல்லூரி செயல்பாடுகளுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் கல்லூரியில் செயல்படும் உணவகங்கள் சமையல் கூடங்கள் முறையான வழிகாட்டி மற்றும் நெறிகள் பின்பற்றி சான்றிதழ் பெறப்பட்ட பின்னரே கல்லூரி திறக்க வேண்டும் அதுவரை

கல்லூரிக்கு விடுமுறை விடப்படுகிறது என்றும் என்று உணவு பாதுகாப்புத் துறை வலியுறுத்தியதன் பெயரில் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த மாணவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர் என

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் உறவினர்களிடம் கேட்டபோது எக்ஸெல் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கும் உணவு தரமாகவும் சுத்தமாகவும் இருக்காது என்றும் இதனால் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் பல மாணவர்கள் பல நேரங்களில் சாப்பிடாமலேயே இருந்து விடுவார்களாம். இது சம்பந்தமாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுக்கும் மாணவர்களை கல்லூரி விடுதி வார்டன் மிரட்டும் தோணியில் அச்சுறுத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் கல்லூரியில் இருந்து அனுப்பி விடுவோம் என்றும் மாணவர்கள் செய்யாத தவறை அவர்கள் மீது சுமத்தி பழி போட்டு மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கண்டிப்பார்களாம். இதை நம்பும் பல மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்கள் தான் தவறு செய்திருப்பார்கள் என்று நினைத்து இனிமேல் எந்த தவறும் செய்ய மாட்டோம் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி விடுவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ தற்போது கல்வி ஒரு வியாபாரமாக மாறி வரும் நிலையில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என பல கல்லூரிகளை தேடி செல்வதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் கல்வியை ஒரு வியாபாரமாக செய்து வருவதுதான் நிதர்சனமான உண்மை.
கல்வியை வியாபார நோக்கத்துடன் செயல்படுத்தி தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

