கல்வி மற்றும் தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த வல்லுனர்கள் பங்கேற்ற “குவாண்டம் கம்ப்யூட்டிங் & டெக்னாலஜி” குறித்த
ஆறு நாள் ஆசிரியர் பயிற்சி முகாம்!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள
மஹாலக்ஷ்மி தொழில் நுட்பக் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை சார்பில், ஏஐசிடிஈ-அடல் பயிற்சி மற்றும் கற்றல் அகாடமி ஆதரவில்
நடத்ப்படும் “குவாண்டம் கம்ப்யூட்டிங் & டெக்னாலஜி” எனும் ஆறு நாள் ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சி கடந்த அக். 27 ஆம் தேதி துவங்கியது.
நிகழ்ச்சி துவக்கமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

“குவாண்டம் கம்ப்யூட்டிங் & டெக்னாலஜி” என்ற ஏஐசிடிஈ அடல் ஆசிரியர் பயிற்சி துவக்க விழாவில் மஹாலக்ஷ்மி கல்விக்குழுமத் தலைவர் ஆர். ரவி அவர்கள் தலைமை
விருந்தினராகவும், மஹாலக்ஷ்மி கல்விக்குழும துனைத் னலவர் ஆர். குகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
மகாலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி முனைவர்
பேரா.டாக்டர் உஷா ஈஸ்வரன் அவர்கள் வரவேற்புரையாற்றி இந்த
, ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சியின் நோக்கங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி விளக்கினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேராசிரியர் டாக்டர் உஷா ஈஸ்வரன், முக்கிய பேச்சாளராக. டி. ஜெயக்குமார், டீன் முனைவர்
ஸ்ரீனிவாஸ் கும்பார்த்தி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ஆர். ரவி அவர்கள், குவாண்டம்
தொழில்நுட்பங்கள் எதிர்கால அறிவியல் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கான புதிய பரிமாணத்தை உருவாக்கும் என்பதை
வலியுறுத்தினார்.
கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பின் சத்தியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இடையே நவீன அறிவியல் தொழில் நுட்ப துறைகளில் ஆர்வத்தை வளர்த்தெடுப்பது .
இந்நிகழ்ச்சியின்
பிரதான நோக்கமாக
தெரிவித்தார்.
“குவாண்டம் கம்ப்யூட்டிங் அடிப்படைக் கொள்கைகள் என்ற தலைப்பில் மற்றும் தொழில்துறை பயன்பாட்டுகளை பற்றி எளிமையான முறையில் எடுத்துரைத்த பேச்சாளர்
தலைமை விருந்தினர் ஆர் ரவி சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து
முதல்வர் பேராசிரியர் டாக்டர் உஷா ஈஸ்வரன் அவர்கள் தலைவர் ஆர் ரவி மற்றும் துணைத் தலைவர் குகன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
“குவாண்டம் கம்ப்யூட்டிங் & டெக்னாலஜி” குறித்த
ஆறு நாள் ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சி அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் முதல் வாரம் வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஐஐடி,
என் ஐ டி, ஐ ஐ ஐ டி எம், எஸ் எஸ் என் கல்லூரி, குவாண்டம் ஜி லேப்ஸ்,
மற்றும் குவான் குரியர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், கல்வி மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் இருந்து சிறந்த வல்லுனர்கள் பங்கேற்று குவாண்டம் அல்குவாரி தம்ஸ் மெஷினிங் லேர்னிங் கிரிப்டோகிராபிக்ஸ் குவாண்டம் ஹார்ட்வேர் போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.