கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி கோழிப்பண்ணைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மாவு அரவை நிலையம் உரிமையாளர்கள்!
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து கோழிப்பண்ணைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மாவு அரவை நிலையம் உரிமையாளர்கள்!
தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் முறையான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் வினியோகத்தை கண்காணிக்கவும் பலதுறை அலுவலர்களை நியமித்துள்ளது.
ரேஷன் கடைகளில் வினியோகத்தை கண்காணிக்க வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. தலைமையில் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அதிலும் தற்போது உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், அதை மாவு மில்களில் மாவாக அரைத்து விற்பனை செய்வதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பல்லடம் தாராபுரம் காங்கேயம் ஆகிய பகுதிகளில் உள்ள மாவு அரைக்கும் அரவை மில்களில் ரேஷன் அரிசியை
மாவாக அரைத்து சட்ட விரோதமாக கோழி தீவனமாக பயன்படுத்த கோழிப் பண்ணைக்கு அதிக விலைக்கு விற்று வருவதாகவும்
மாவு அரைக்கும் நிலையத்தில்
அதிக அளவில் ரேஷன் அரிசி அரைக்கப்பட்டு இட்லி தோசை க்கு உணவகங்களில் பயன்படுத்த மாவாக வினியோகம் செய்யப்படுவதாக
அதிர்ச்சி தகவல்!
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை மாவு மில் உரிமையாளர்கள் வாங்கி
கோழிப் பண்ணைகளுக்கு கோழிகளுக்கு தீவனமாக அதிக விலைக்கு வருவதாகவும்
அது மட்டும் இல்லாமல் மற்றொருபுறம் ரேஷன் அரிசியை வாங்கி அதை அரைத்து மாவாக்கி சில அப்பளம் கம்பெனிகளுக்கு சட்டவிரோதமாக சப்ளை செய்து வருவதாகவும்
மாவு மில் உரிமையாளர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும்
இந்த சட்ட விரோத செயலை கண்டு கொள்ளாமல் இருக்க குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆகியோர் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை கையூட்டு பெற்று வருவதாகவும்
சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையில் பணியில் இருக்கும் நேர்மையான ஒரு சில காவல் அதிகாரியிடம் குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரித்த போது ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும். அதிலும் கடந்த காலங்களை விட தற்போது கடத்தலில் ஈடுபடுபவர்கள் முழுமையாக கைது வருவதாகவும். இருப்பினும் ஓரிரு இடங்களில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி மாவாக அரைக்கப்பட்டு விற்பனை செய்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.