கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி விட்டு தலைமறைவாக உள்ள கும்பலை தேடும் பணியில் நீலகிரி வன கோட்டம்
நடுவட்டம் வனச் சரகம் தனிப்படை!
கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி விட்டு தலைமறைவாக உள்ள கும்பலை தேடும் பணியில் தனிப்படை!
நீலகிரி மாவட்டம் வனப் பரப்பு மிகுந்த பகுதியாகும். ஆகையால் நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, நீலகிரி மார்ட்டின், வரையாடு உட்பட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. உலகின் மிக முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் விளங்குகிறது. இதனால், இப்பகுதியை யுனெஸ்கோ பாரம்பரிய உயிர்ச்சூழல் மண்டலமாகவும் அறிவித்துள்ளது. வளமான காடுகளும், மருத்துவ மூலிகை தாவரங்களும், பழங்குடியினரின் பாரம்பரியங்களும் உள்ளன.உணவுக்காக அவ்வப்போது வன விலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுபோன்ற சமயங்களில் வன விலங்குகள் இறந்தாலோ அல்லது வேட்டையாடப்பட்டாலோ அவற்றின் மரபணு சார்ந்த விவரங்கள் முக்கியமானது. குறிப்பாக, வன விலங்குகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்குகளில் விலங்குகளின் ரோமம், இறைச்சி, எலும்புத் துண்டுகள் ஆகியவற்றை கொண்டு மரபணு ஆய்வு மேற்கொண்டு, இறந்தது எந்த வகையான விலங்கு, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் கண்டறியப்படும். இதன்மூலமாக எந்தவிலங்கு வேட்டையாடப்பட்டது என்பது உறுதி செய்யப்படும்.
இதுபோன்ற வன விலங்குகளின் மரபணுக்களை கண்டறியும் ஆய்வுகளை, உதகை அரசு கலைக் கல்லூரியில் உள்ள
மூலக்கூறு பல்லுயிர் ஆக்க ஆய்வுக் கூடம்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுக் கூடத்தில் புலி, யானை, காட்டெருமை, சிறுத்தை, மான் உள்ளிட்ட விலங்குகளின் மரபணு விவரங்கள் கண்டறியப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகத்தைச் சேர்ந்த வனத்துறையினரும் மாதிரிகளை வழங்கி, ஆய்வு முடிவுகளை பெற்றுச் செல்கின்றனர். இதன்மூலமாக, வன விலங்குகள் வேட்டை தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர, இந்த ஆய்வுக் கூடம் வனத்துறையினருக்கு உதவிகரமாக இருந்து வருகிறது.தமிழக வனத்துறையினரும் பல்வேறு வழக்குகளுக்காக விலங்குகளின் மாதிரிகளை அளித்து, முடிவுகளை பெற்றுச் செல்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. இதில்
அரிய வகை விலங்குகளின் உடல்கள் கிடைக்கும்போது, அவற்றின் மாதிரிகளை வனத்துறை வழங்கினால் எதிர்காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும்’ என்கின்றனர் வனவிலங்கு ஆய்வாளர்கள்.
கடந்த சில மாதங்களாக
நீலகிரி வன கோட்டம்
நடுவட்டம் வனச் சரகம் பகுதியில் உள்ள
சில்வர் கிளவுட் எஸ்டேட்டில் ஒரு கும்பல் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவல்களையடுத்து
வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடடிய கும்பலை
பிடிக்க குழுக்கள் அனுப்பப்பட்டது..
அந்த கும்பலை பிடிக்க 21.04.2024 அன்று அதிகாலையில் அதிகாலையில் , வன பணியாளர்கள் சில்வர் கிளவுட் தோட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். பைசல் சாகு ஜேக்கப் மற்றும் பரமன்பிடிபட்டனர்.
இவர்களுடன் சேர்ந்து விலங்களை வேட்டையாடிய ஶ்ரீகுமரன் மற்றும் சஜீவன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். பிடிபட்ட பரமனிடம் விசாரித்ததில் கடந்த 15 வருடங்களாக சஜீவன் என்பவரின் நீலகிரி பர்னிச்சர் கடையில் பாலிஷ் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும் சஜீவனின் சில்வர் கிளவுட் எஸ்டேட்டில் வாங்கிய நிலத்தின் தொடர்பான கணக்குகளை பார்த்து வருவதாகவும், அந்த ஸ்டேட்டில் பணிபுரிந்து வரும் பைசல் மற்றும் ஷாப்ஜேக்கப் ஆகிய இருவரும் எஸ்டேட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க பணம் கேட்டால் அதை சஜீவனிடமிருந்து இருந்து வாங்கி கொடுப்பதாகவும் தெரிவித்தார். ஒரு நாள் பைசல் தன்னிடம் வந்து சுபைர் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்தை தொடர்ந்து ஒரு கள்ள துப்பாக்கி வாங்கி வைத்து இருப்பதாகவும், தற்பொழுது அந்த துப்பாக்கிக்கு தோட்டாக்கள் தேவைப்படுகிறது என்று தன்னிடம் கேட்டார்
அதற்கு பத்து தோட்டாக்கள் வாங்கி பைசலுக்கு கொடுத்ததாகவும் மற்றபடி தனக்கும் எஸ்டேட்டில் துப்பாக்கியை கொண்டு வேட்டையாடிய சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என பரமன் தெரிவித்துள்ளார்.
. அதன் பின் வனத்துறையினர் வீட்டுக் கட்டடத்தின் வாசற் படியின் அருகே மண்ணில் புதைத்து வைத்திருந்த ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து ஒற்றை குழல் துப்பாக்கிக் குரிய வெடிக்காத தோட்டாக்கள் 11 எண்ணிக்கை, வெடித்த தோட்டாக்கள் 2 கத்தி, ரத்தக்கரை படிந்த கோடாரி, நெற்றி டார்ச் லைட், டார்ச் லைட், பர்ஸ் ஒன்று மற்றும் காற்று குழல் துப்பாக்கி ஒன்று ஆகியவற்றையும் வனத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்து அவர்களை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்களை வனத்துறை இடம் கூறியுள்ளனர் கூறியுள்ளனர்.
கூடலூர் என்ற இடத்தில் உள்ள சஜீவன்,
த/பெ பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட் தோட்டத்தில் (சில்வர் கிளவுட் எஸ்டேட்)
இந்த எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி நடமாடும் என்பதால் வேட்டையாடுவதற்கு எ எஸ்டேட் உரிமையாளர் சஜீவனுக்கு நெருங்கிய தொடர்புடையவரும், மற்றும் தங்கள் எஸ்டேட்டிற்கு மேலாளர் போன்று செயல்பட்டு வரும் சுபைர் காக்காவிடம் துப்பாக்கி பற்றி பைசலால் கேட்டுள்ளார் .
அவர் பாபா என்ற ஸ்ரீகுமார், தகப்பனார் பெயர் பெறவகுட்டி, புளியம்பாறை கிராமம், கூடலூர் என்பவரிடம் கள்ள நாட்டு துப்பாக்கி இருக்கிறது, நான் கூறியதாக ஸ்ரீகுமார் இடம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், பணத்தை நான் அவருக்கு கொடுத்துக் கொள்கிறேன் என்று சுபைர் பைசலிடம் கூறி இருக்கிறார். அதன்படி சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகுமாரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் பைசல் பெற்று இருக்கிறார். சுமார் 4 மாதங்களுக்கு முன்பு சாபு ஜேக்கப் காபி தோட்டத்தில் நுழைந்த ஒரு சருகு மானை அந்த துப்பாக்கியால் சுட்டதாகவும் அது இறந்துவிட்டது. அவர்கள் இருவரும் அந்த தோட்ட பகுதியிலேயே சருகு மானின் இறைச்சியை சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் எஸ்டேட்டில் கணக்கராக பணிபுரியும் பரமன் என்ற பரமசிவத்திடம் இவர்கள் இருவரின் அன்றாட தேவைக்கான டீசல் மற்றும் இதர செலவினங்களுக்கு பணம் பெற்றுக் கொள்வதாகவும் மேலும் தோட்டாக்கள் தேவைப்படுகிறது என்றும் பரமசிவத்திடம் பைசல் கேட்டதற்கு பத்து தோட்டாக்கள் வாங்கி கொடுத்திருக்கிறார். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு காட்டு மாடு பாக்கு தோட்டத்தில் புகுந்துள்ளதை அறிந்து சாபு ஜேக்கப் துப்பாக்கியைக் கொண்டு சுட்டிருக்கிறார். பின் அவர்கள் இருவரும் இறந்த காட்டு மாட்டினை கை கோடாரி, சூரி கத்தி ஆகியவற்றை பயன்படுத்தி துண்டு துண்டாக வெட்டி சாப்பிடுவதற்கு தேவையான கறியை எடுத்துக்கொண்டு மீதி உள்ள காட்டு மாட்டின் உடல் பாகங்களை சாக்குப் பையில் போட்டு தோட்டத்தில் இருந்த பொலிரோ பிக்கப் வாகனத்தில் போட்டு தங்கி இருந்து இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் சில்வர் கிளவுட் எஸ்டேட் மறுபக்கத்தில் காப்பி தோட்டத்தின் புதர் பகுதியில் போட்டு இருப்பதாக கூறியுள்ளார்கள் உடனே அந்தப் பகுதிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் கிடந்த காட்டு மாட்டின் பாகங்களை கைப்பற்றியுள்ளனர்
அதன் பின்பு.கள்ள துப்பாக்கி கைப்பற்றப்பட்டது குறித்து வனத்துறையினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கூடலூர் டிஎஸ்பிக்கு நடுவட்டம் FRO மூலம் சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல்கள் முழு விவரங்கள் கொடுக்கப்பட்டது.
சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடியதாக பைசல்
2) சாபுஜாக்கோப்
3) பரமன்
4) ஸ்ரீ குமார்
5) சுபைர்
6) சஜீவன் ஆகையால் மீது வழக்கு பதிவு செய்து
பைசல் சாகு ஜேக்கப் மற்றும் பரமன் ஆகியோரை நீதி மன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டனர்
தற்போது தலைமறைவாக உள்ள சஜீவன், ஸ்ரீகுமார் மற்றும் சுபைர் ஆகியோரை தேடும் பணியில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பைசல், சாகுஜேக்கப் மற்றும் பரமன் ஆகியோரை நீதி மன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டனர்