மாவட்டச் செய்திகள்

கழிவுநீர் கால்வாய் கட்டுவதில் வந்த பிரச்சனை! பாலம் கட்டும் பணி 50 நாட்களாக வாடிப்பட்டி பேரூராட்சி கிடப்பில் போட்டதால் மக்கள் அவதி!நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்!

வாடிப்பட்டி மேட்டு நீரே தான் கிராமத்தில்  கழிவு நீர் கால்வாய் கட்டுவதில் வந்த பிரச்சினையால் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தியதால் 50 நாட்களாக கிடப்பில் போட்ட வாடிப்பட்டி பேரூராட்சி!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மேட்டு நீரே தான்( 18 வது வார்டு) ஆகும்.
இந்த கிராமத்தில்  70 வருடம் முன்பு கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை விரிவாக்கம் செய்து புதிதாக கால்வாய் கட்ட வாடிப்பட்டி பேரூராட்சி சார்பாக  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 70 வருடங்கள் முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் மீது கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்குமாறு கிராம பொதுமக்கள் பேரூராட்சி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் கழிவுநீர் கால்வாய் கட்ட ஒப்பந்தம் எடுத்தவர்கள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதில் இருந்து பத்து அடி தள்ளி புது கால்வாய் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அக்கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்தப் பணி அப்படியே நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் என்ன என்று அப்பகுதியில் விசாரித்தபோது பழைய கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்கள் அந்த ஆக்கிரமிப்பு அகற்ற முன்வரவில்லை என்று தகவல் தெரிவித்தனர். இது அப்படியே இருந்த நிலையில் மேட்டு நீரா தான் ஊரின் நுழைவாயில் உள்ள கால்வாய் பாலம் மிகவும் குறுகலாக  இருப்பதோடு மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டதால் அந்த கால்வாய் பாலத்தை அகலப்படுத்தி புதிதாக கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் அந்த கால்வாய் பாலம் அமைக்கும் பணி கடந்த 50 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது கழிவுநீர் கால்வாய் கட்டாமல் இந்த கால்வாய் மேம்பாலம் கட்டக்கூடாது என்று ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்திய நிலையில் கால்வாய்  மேம்பாலம் பணி 50 நாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருப்பதால் ஊருக்குள் வரும் பள்ளி வாகனங்கள் வர முடியாமல் ஊரைச் சுற்றி கால்வாய் கரையில் வர வேண்டிய சூழ்நிலை இருப்பதால் உடனடியாக கால்வாய் பாலம் கட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு கொடுத்த நிலையில் உடனே அந்த பாலத்தை கட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 50 நாள் நடைபெறாமல் இருந்த பாலத்தின் பணி நடக்க இருந்த நிலையில் கிராமத்தின் ஒரு தரப்பினர் கழிவுநீர் கால்வாயை கட்டாமல் இந்த பாலத்தை கட்டக்கூடாது என்று மீண்டும் 109/2023 எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகும் என்று சோழவந்தான் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சோழவந்தான் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலம் கட்ட எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பாலம் கட்டும் பணி முடியும் வரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர். அது மட்டுமில்லாமல் இந்த பிரச்சனையால் மேட்டு நீரா தான் துர்க்கை அம்மன் கோவில் திருவிழா இந்த வருடம் நடக்கவில்லை என்றும் தகவலை அந்த கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவில் தேர் சப்பரம் ஊரை சுற்றி வருவது வழக்கம் என்றும் தற்போது அப்படி சுற்றி வரும் பாதையில் தான் கழிவுநீர் கால்வாயை தோண்டி போட்டு இருப்பதாகவும் இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதன் காரணமாக தற்போது பாரம்பரியமாக நடந்து வந்த துர்க்கை அம்மன் கோவில் திருவிழா நடக்காமல் போனதற்கு ஒரு காரணம் என்றும் அந்த கிராமத்து பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு நலத்திட்டங்கள் நடைபெறும் போது தங்களது சுய லாபத்திற்காக அதை நடக்க விடாமல் தடுப்பவர்கள் மீது காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது என்று அனைத்து சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button