காவல் செய்திகள்

காங்கிரஸ் MLA ரிசார்ட்டில் பெண்கள் உல்லாசம்!மது மாது ஆபாச நடன விருந்து!!விலையுர்ந்த கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிசார்ட்டில் போதை விருந்து – 100க்கும் மேற்பட்டோர் சிறைபிடிப்பு

காங்கிரஸ் கட்சி MLA
ஹசன் மௌலானா
தாம்பரம் காவல் ஆணையர் ரவி

சென்னை வேளச்சேரி எம்எல்ஏவுக்கு சொந்தமான ECR ரிசார்ட்டில் போதை விருந்து நடந்ததாக எழுந்த புகாரில், 50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பணையூரில் வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாவிற்க்கு சொந்தமான ரிசார்ட் உள்ளது. இந்த விடுதியில் இசை நிகழ்ச்சி மற்றும் போதை விருந்து நடந்து வருவதாக தாம்பரம் காவல் ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலை அடுத்து தாம்பரம் காவல் ஆணையர் ரவி உத்தரவின் பேரில் மது விலக்கு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் அங்கு சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட விலையுர்ந்த கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதை விருந்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியது தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்த போதை விருந்தில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஆபாச நடனம் ஆடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இசை நிகழ்ச்சி மற்றும் போதை விருந்தில் கலந்து கொண்ட 50 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரின் பெயர் மற்றும் முகவரிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர்களுக்குத் தேவைப்படும் stress buster மது அல்ல”- காவல் ஆணையர் ரவி*

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தனியார் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக நடைபெற்ற மதுவிருந்தில் பங்கேற்ற 50 பெண்கள் உட்பட 500 பேரைப் பிடித்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் இரவு 1 மணி முதல் விடிய விடியத் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த மேனஜர் சைமன் கைது செய்யப்பட்ட நிலையில் மது விருந்தில் கலந்து கொண்ட சுமார் 500 ஆண்கள், நடனமாடிய சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் சிறைபிடித்து வைத்தனர். மேலும் தகவல் அறிந்த வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலாளா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

இதன் பின்னர் தாம்பரம் காவல் ஆணையர் ரவி, அங்கு இருந்த இளைஞர்களிடம் இது போல் நடந்து கொள்ளக்கூடாது என்றும் இளைஞர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம் என்றும் கூறினார். மேலும் இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இளைஞர்களுக்குத் தேவைப்படும் stress buster இது அல்ல நல்ல வழியைப் பயன்படுத்துங்கள் என்றும் அறிவுரை கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button