மாநகராட்சி

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை! காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடப்பது என்ன ?

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை! காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடப்பது என்ன ?

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக செயல்பட்டு வரும் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லை என்றும் பெரும்பான்மையை நிரூபிக்க மாமன்ற கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்யுமாறும் மாமன்ற உறுப்பினர்கள் 30க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து புகார் செய்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த எம்.மகாலட்சுமி யுவராஜ் பெரும்பான்மையான உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு மேயராக பொறுப்பேற்றுக் கொண்டாவர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 50 வார்டுகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி 32 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 9 இடங்களிலும், பா.ம.க- 2 இடங்களிலும், பா.ஜ.க.- 1 இடத்திலும், சுயேச்சைகள் 6 இடத்திலும் வெற்றி பெற்றனர்.
இதில் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.மகாலட்சுமி யுவராஜை காஞ்சீபுரத்தின் மேயர் வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்தது.இதில் 29 வாக்குகள் பெற்று தி.மு.க. தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து நின்ற தி.மு.க. போட்டி வேட்பாளர் சூர்யா சோபன்குமார் 20 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.காங்கிரஸ் சார்பில் 22-வது வார்டில் வெற்றி பெற்ற குமரகுருநாதன் துணை மேயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து போட்டியிட வேறு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் குமரகுருநாதன், காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயராக போட்டியின்றி தேர்வானார்.

இவர்களில் திமுக உட்பட அனைத்துக்கட்சியையும் சேர்ந்த  30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பது
மேயரின் கணவர் ஆர்.யுவராஜ் எங்கள் வார்டு பகுதிகளில் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி பணம் பெறுவதாக பொதுமக்கள் எங்களிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மேயரிடம் தெரிவித்தபோது அவரது கணவரை கண்டிக்காமல் ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார். இதிலிருந்து அவர் மேயரின் ஆதரவுடன் தான் செயல்படுகிறார் எனவும் தெரிய வருகிறது. எங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி குறைகளை சரி செய்ய முற்படும் போது அதிகாரிகளிடம் அக்குறைகளை சரி செய்ய வேண்டாம் என்றும் கூறி விடுகிறார்.இதனால் எங்கள் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்புகள், குடிநீர் பிரச்சினைகள் உட்பட எந்தப் பிரச்சினையையும் சரி செய்ய முடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் எங்கள் பகுதி மக்களின் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்பட்டு விடும்.மேயராக தொடர்ந்து செயல்பட்டால் எங்கள் பகுதி மக்களின் பிரச்சினைகளை சரி செய்யவே முடியாமல் போய் விடும்.எனவே மேயரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். அவர் பெரும்பான்மையை நிருபிக்க மாமன்ற கூட்டத்தை கூட்டஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கையெழுத்திட்டு கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்முதலில் மகாலட்சுமி யுவராஜுக்கு  திமுக சார்பில் மேயர் சீட் கொடுக்கப்பட்டது,  ஆனால் அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த மற்றொரு நபர் போட்டு விட்டார். அவருக்கு சுயாட்சிகள்,  பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஆதரவளித்தனர். இதனால் முதலில்  பெரும்பான்மையை நிரூபிக்கவே, மாநகராட்சி பிரச்சனை ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து மகாலட்சுமி யுவராஜ் பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவை பெற்று காஞ்சிபுரத்தின் முதல்  மேயராக பதவி  ஏற்றார்.புதிய மேயராக பதவி ஏற்றதிலிருந்து,  மகாலட்சுமி யுவராஜுக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தற்பொழுது காஞ்சிபுரத்தின் துணை மேயராக உள்ளார். துணை மேயர் தரப்புக்கும் மற்றும் மேயர் தரப்பிற்கு மேல் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.  அதே போன்று மாநகராட்சி கூட்டங்களின்போது, பலமுறை சலசலப்பு போராட்டங்களும் நடைபெற்ற வருகிறது. இந்தநிலையில் கவுன்சிலர்களின் இந்த  முடிவு  காஞ்சிபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், மேயருக்கு எதிராக தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கியுள்ள நிலையில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களை அழைத்து,

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு சமாதானம் செய்து உள்ளார். போதிய முடிவு எட்டப்படாததால், 20 தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டு உள்ளனர். இரண்டாம் கட்ட சமாதானப் பேச்சு இன்று, மாவட்ட செயலர் சுந்தர் தலைமையில், காஞ்சிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த மகாலட்சுமி உள்ளார். இந்நிலையில், ஒராண்டாகவே அ.தி.மு.க., – தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அதிகரித்தது. மாநகராட்சி நிர்வாகத்தில் மேயர் கணவர் யுவராஜ் ஆதிக்கமும் அதிகமானதால், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.


நெருக்கடி


இதற்கிடையே, பல பிரச்னைகள் நீடித்து வந்த நிலையில், மாநகராட்சி கூட்டத்திற்கு தி.மு.க.,- – அ.தி.மு.க., – சுயேட்., கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்காமல் புறக்கணித்து வந்தனர். இதனால், தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல், மேயருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில்தான், மேயர் மகாலட்சுமி மீது, நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., கவுன்சிலர்கள் 17, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 7, பா.ம.க., கவுன்சிலர்கள் 2, காங்., துணை மேயர் குமரகுருநாதன், சுயேட்., 5, பா.ஜ., ஒருவர் என, 33 பேர் இணைந்து, கலெக்டர் கலைச்செல்வியிடம் கடந்த 7ம் தேதி , மனு அளித்தனர்.

இதையடுத்து, கவுன்சிலர்கள் எதிர்ப்பு அதிகமாக இருப்பதால், மாமன்ற கூட்டத்தை நடத்த முடியாததால், தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்ற முடியாமல் இருந்து வருகிறது. தி.மு.க., மேயருக்கு எதிராக, தி.மு.க., கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்ததால், காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சுந்தருக்கு இந்த சூழல் கடும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில்

ஏற்கெனவே மேயரின் கணவர் யுவராஜின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட செயலர் சுந்தரிடம், தி.மு.க., கவுன்சிலர்கள் புகாராக தெரிவித்திருந்தனர்.

மாவட்ட செயலர் சுந்தர்,மேயரின் மீதும், யுவராஜின் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தியடைந்த தி.மு.க., கவுன்சிலர்கள், அ.தி.மு.க., வுடன் சேர்ந்து மேயரின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் அளவிற்கு அமைந்தது.

வேறுவழியின்றி தி.மு.க., கவுன்சிலர்கள், காங்., துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோரை சமாதானம் செய்ய கட்சி மேலிடம் முடிவு செய்தது.

அதன்படி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று காலை, தி.மு.க., – சுயே., கவுன்சிலர்கள் மற்றும் காங்., துணை மேயர் குமரகுருநாதன் என, 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தினார்.


அமைச்சர் நேருவை சந்தித்து விளக்கம்.

காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., – எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த பேச்சில் போதிய முடிவுகள் எட்டப்படாததால், தி.மு.க., கவுன்சிலர்கள் 20 பேர் தங்கள் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக, இரண்டாம் கட்ட பேச்சு, மாவட்ட செயலர் சுந்தர் தலைமையில், காஞ்சிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

சென்னையில் அமைச்சர் நேருடன் நடந்த பேச்சின்போது பேசப்பட்டவை குறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தரப்பில் கூறியதாவது:

தி.மு.க., கவுன்சிலர்கள் 32 பேர், காங்., துணைமேயர் குமரகுருநாதனை அழைத்து அமைச்சர் நேரு பேச்சு நடத்தினார். இதில், மேயர் மற்றும் மேயர் கணவரின் ஆதிக்கம் குறித்தும் தெரிவித்தோம். அதேபோல, கவுன்சிலர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு, மேயர் மற்றும் மேயரின் கணவரும் மறுப்பு தெரிவித்தனர்.

பிரச்னையின்றி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் கவுன்சிலர்களின் குற்றச்சாட்டு குறித்து, மேயர் மகாலட்சுமியிடம், அமைச்சர் நேரு காட்டமாக  கேட்டார். மாநகராட்சியில் எந்த விதிமீறலும், முறைகேடும் நடக்கவில்லை என, மேயர் தரப்பினர் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர்.

மேயர் மகாலட்சுமியின் தலைமையின் கீழ் எங்களால் பணியாற்ற முடியாது எனவும், மேயரை கட்டாயம் மாற்ற வேண்டும் என, அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இதுகுறித்து கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்படும் என, அமைச்சர் கூறியதை தொடர்ந்து பேச்சை முடித்தார்.

இவ்வாறு தி.மு.க., கவுன்சிலர்கள் கூறினர்.


பா மணிகண்டன் காஞ்சிபுரம் மாவட்ட நிருபர் தென்னிலை கதிர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button