காணாமல் போன ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போனை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்த T.நகர் மாம்பழம் போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு !
காணாமல் போன ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போனை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த டி நகர் மாம்பழம் போக்குவரத்து காவல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு!
அமெரிக்காவில் வேலை செய்யும் சென்னை டி நகர் சேர்ந்த நபர் தன் பெற்றோர்களை பார்ப்பதற்கு சென்னை டி.நகருக்கு வந்துள்ளார் .தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்னை தி நகர் மாம்பழம் பேருந்து நிலையம் அருகே பர்கிட் சாலையில் சென்றபோது செல்போனை தவற விட்டதாக வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டி நகர் மாம்பழம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கோவிந்த் அவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்த் அவர்கள் உடனடியாக காணாமல் போன செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு செல்போன் வைத்திருந்த நபரிடம் செல்போன் உரிமையாளர் செல்போனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார் என்றும் ஆகவே உடனே அந்த செல்போனை எடுத்துக்கொண்டு மாம்பழம் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார்.உடனே அந்த நபர் டி நகர் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் பின்பு தவறவிட்ட செல்போன் உரிமையாளரிடம் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள சாம்சங் செல்போனை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்த் அவர்கள் மற்றும் உடன் பணியில் இருந்த மற்றொரு காவலர் இதயகுமார் இருவரும் ஒப்படைத்தனர். அப்போது தவறவிட்ட அந்த நபர் துரிதமாக செயல்பட்டு காணாமல் போன செல்போனை கண்டுபிடித்து கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு இந்த தகவலை சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கும் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் அவர்களுக்கும் நடந்த சம்பவத்தை தன் முகநூல் மூலம் தெரிவித்துள்ளார்.
இதே போல் 03/08 22 அன்று அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் தன் குடும்பத்துடன் சென்னை டி நகர் பணங்கள் பார்க் அருகில் வாடகை ஊஃபர் காரில் வந்து இறங்கிய போது பேக் மற்றும் விலை உயர்ந்த செல்போனை தவறவிட்டதாக அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கோவிந்த் அவர்களிடம் தெரிவித்தனர் . உடனே பயணம் செய்த உபர் கார் ஓட்டுனருக்கு தொடர்பு கொண்டு காரில் தவறவிட்ட பேக்கை ஒப்படைக்கும்படி கூறினார் .அதன்படி ஊஃபர் கார் ஓட்டுநர் அரை மணி நேரத்தில் காரில் இருந்த பேக் மற்றும் செல்போனை ஒப்படைத்தார். உடனே பேக் மற்றும் செல்போன் உரிமையாளர்களிடம் சிறப்பு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கோவிந்த் அவர்கள் அழைத்து ஒப்படைத்தவுடன் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தை கண்டு அருகில் உள்ள அனைவரும் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்த அவர்களை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
Dear Deputy Commissioner of police traffic south
Sir,
I would like to bring to your attention the good Samaritan work done by the Chennai Traffic Police. My name is Shreeram and I work abroad in US and visiting my parents.
I was on my way to visit my friend on my scooter. While driving I accidentally dropped my cell phone somewhere. I was in a panic mode, and I started searching for it by coming back on the same route. On my way I saw two traffic police Mr. Govind (Sub-Inspector of Police) and Mr. Idhayakumar (R1 Traffic Police) near T.Nagar bus stand Burkit Road. Seeing my state of panic Mr. Idhayakumar tried calling my cell phone in search of it. Meanwhile both asked me to continue my search on my side.
When I searched and returned in vain and enquired Mr. Govind, Mr. Idhayakumar had already located my phone and went to retrieve it. With great help from Mr. Govind (Sub-Inspector of Police) and Mr. Idhayakumar (R1 Traffic Police), I was able to get my phone back within few minutes and was free of distress and anxiety.
I sincerely thank the good Samaritan work of Mr. Govind (Sub-Inspector of Police) and Mr. Idhayakumar (R1 Traffic Police) and Chennai Traffic Police for retrieving my phone is a very short time. I whole heartedly appreciate the help.
Yours Sincerely,
Shreeram.K.S