காணாமல் போன குளத்தை தேடும் பொதுமக்கள்!
200 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான குளத்தை ஆட்டையை போட்டு பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தியாகராஜர் கல்லூரிக்கு பட்டா போட்டு கொடுத்துள்ள மதுரை வருவாய்த்துறை அதிகாரிகள்!
அதிர்ச்சி தகவல்!

அரசு புறம்போக்கு நிலங்கள் மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலைகள், சாலைகள், இடுகாடுகள் போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள் எனப்படும்.
இந்த அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது சட்டவிரோதமானது. நீர்நிலைகள் மற்றும் பொதுப்பயன்பாட்டு நிலங்களை ஆக்கிரமிப்பது அரசு உத்தரவுகளின்படி அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு என்பது பல மாவட்டங்களிலும் உள்ள பொதுவான பிரச்சனை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பை எவ்வாறு அகற்றுவது ?
அரசாணை எண். 540 என்ன சொல்கிறது ?
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் எவ்வாறு ஆக்கிரமிப்பை அகற்றுவது ?
தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு 1905 சட்டம் என்ன சொல்கிறது ?
அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது மற்றும் திருட்டுக்கு சமமானது.
நீர்நிலைகள், ஓடைகள், சாலைகள் போன்றவை ஆக்கிரமிக்கப்படும்போது மழை காலங்களில் நீர் வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டினால் அந்த கட்டிடங்களுக்கு மின்சார இணைப்பு உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் வழங்கக் கூடாது என சட்டத்தில் கூறப்படுகிறது.
அரசு புறம்போக்கு நிலங்களில் நடைபெறும் கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வருவாய் துறையினர் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுவின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை ஆய்வு செய்து, அதன் விவரங்களை சேகரித்து, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த முடிவுகளை மேற்கொள்கின்றன. நில நிர்வாகத் துறை ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் இந்த குழுக்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
இது போன்ற ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் அளித்தால், மனு கிடைத்த ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது,
மேலும் இந்த விவரங்கள் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுவின் முன் வைக்கப்படும்.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை சட்டவிதிகளுக்கு உட்பட்டு அகற்ற அரசுக்கு முழு உரிமை உண்டு.
. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு தனியாக ஒரு சட்டம் உள்ளது.
அதேசமயம் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கான சட்டங்களின் படி நடவடிக்கை எடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தலாம் என்றும் சட்ட விதிகள் கூறுகிறது.
,அரசு ஏரிக் குளங்களில் ஆக்கிரமிப்புகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு அதிகாரிகள் முறையாகச் செயல்படுவதில்லை என்றும், அவர்களின் இந்த செயலற்ற தன்மையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் உயர் நீதிமன்றம் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தின் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சட்ட விதிகளை அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு கண்ணை மூடிக்கொண்டு மதுரை வருவாய் துறை அதிகாரிகள்
மதுரை திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இது தொடர்பான செய்திகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் இதற்கு சான்றாக உள்ளன.
நீதிமன்ற உத்தரவுகள்: அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என்றும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா கேட்பதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு புறம்போக்கு நிலங்களை மீட்பதற்கான தனிப்பட்ட வழக்குகளும் நீதிமன்றங்களில் நடைபெற்றுள்ளன.
குறிப்பாக



மதுரை திருப்பரங்குன்றம் வட்டம் திருப்பரங்குன்றம் தென்னவராயன் குளம் (சர்வே எண் 205)
சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
அதில் 2.5 ஏக்கர் தற்போது மதிப்பு சுமார் 200 கோடி மதிப்புள்ள
(சர்வே எண் 205/1
205/4 ) அரசுக்கு சொந்தமான தென்னவராயன் குளத்தை திருடி 1994 ஆம் ஆண்டு மதுரை தியாகராஜார் கல்லூரி நிர்வாகத்திற்கு சட்டவிரோதமாக சப் டிவிஷன் செய்து பட்டா போட்டு
கொடுத்துள்ளனர்
மதுரை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்.
இது சம்பந்தமாக திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் அன்னராஜ் என்பவர்

10/02/25 அன்று வருவாய் துறை தலைமை செயலர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அனுப்பியுள்ளார். 205/1 ,205/4 மொத்தம் 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட தென்னவராயன் குளத்தை தியாகராஜர் கல்லூரி நிர்வாகத்திற்கு சட்ட விரோத மாக பட்டா வழங்கி உள்ளதால் தற்போது குளம் எங்கு இருக்கின்றது என்று தெரியவில்லை. ஆகையால் அரசுக்கு சொந்தமான தென்னவராயன் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தென்னவராயன் குளத்தை மீட்டுக்க வேண்டும்.அதுமட்டுமில்லாமல் தியாகராஜர் கல்லூரி நிர்வாகத்திற்கு சட்ட விரோதமாக வழங்கப்பட்டுள்ள 2.5 ஏக்கர் நிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய
வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
அதன்பின்பு
27/02/2025 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தென்னவராயன் குளத்தின் தற்போதைய நிலையை கேட்டுள்ளார். ஆனால் வருவாய்த் துறையில் இருந்து தென்னவராயன் குளம் சம்பந்தமாக சரியான தகவலை தெரிவிக்கவில்லை .
அதுமட்டுமில்லாமல் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தென்னவராயன் குளத்தை சட்டவிரோதமாக தியாகராஜர் கல்லூரிக்கு வருவாய்த்துறையினர் சப் டிவிஷன் செய்து பட்டா வழங்கியதற்கு பல லட்சங்கள் லஞ்சமாக வாங்கி இருக்கலாம் என்றும்
4 .5 ஏக்கர் பரப்பளவில் இருந்த தென்னவராயன் குளம்
தற்போது, ஆக்கிரமிப்புகளால் நான்கு சென்ட் மட்டுமே உள்ளது. என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
எது எப்படியோ
நீர்நிலை ஆக்கிரப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்ட முடியாது என உயர்நீதிமன்ற பலமுறை எச்சரித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அரசு புறம்போக்கு குளங்களை சட்டவிரோதமாக பட்டா போட்டுக் கொடுத்திருப்பது வேதனையாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல்
திருப்பரங்குன்றம் மலையில் சர்வே எண் (211/2 ) முழுவதும்
மலை தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நில நிர்வாக ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியார் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியும்
திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் ஆகிரமிப்புகளை அகற்றாமல் அலட்சிய போக்கை கடைப்பிடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் மூக்கையா ஜீவசமாதி பெயரில் 50 செண்ட் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதற்கான அனைத்து ஆதாரங்களையும் வருவாய்த்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் நில நிர்வாக ஆணையர் ஆகியோருக்கு ஆக்கிரமிப்பை அகற்ற சமூக ஆர்வலர் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகிறார்
ஆகவே தற்போது உள்ள

மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக திருப்பரங்குன்றம் தென்னவராயன் குளம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக நேரில் ஆய்வு மேற்கொண்டு குளத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் மதுரை மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டை.




