காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் வாகன ஓட்டுனர்களிடம் பணம் வசூல் செய்து புல்லட் வாகனத்தில் வலம் வந்த போலி ஆசாமி அதிரடி கைது!
கோவையிலிருந்து திருப்பூருக்கு முதலமைச்சர் சாலை வழியாகப் பயணித்த போது சீருடையில் வாகன ஓட்டுனர்களிடம் பணம் வசூல் செய்து புல்லட் வாகனத்தில் வலம் வந்த போலி ஆசாமி அதிரடி கைது!
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் கிழக்குத் தெருவை சேர்ந்த செல்வம் என்ற நபர் அவிநாசி கருமத்தம்பட்டி அருகே தெக்கலூரில் உள்ள சந்தோஷ் மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ் மில்லில் மேற்பார்வையாளராக சில வருடமாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் உதவிகாவல்உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து திருப்பூர் அவிநாசி சாலைகளில் வாகன சோதனை என்ற பெயரில் வாகனத்தில் வருபவர்களிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி காவல் நிலையம் அருகே கொச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். இரு சக்கர வாகனத்தில் சசிகுமார் என்ற நபர் சென்றபோது காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் புல்லட் வாகனத்துடன் நின்று கொண்டிருந்த செல்வம் சசிகுமாரை தடுத்து நிறுத்து பணம் வசூல் செய்துள்ளார். சந்தேகப்பட்ட சசிகுமார் உடனே அவிநாசி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
கருமத்தும்பட்டி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கருப்பு நிற புல்லட் வாகனத்தில் காவல் சீருடையில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது ஒரு போலி ஆசாமி என்பது தெரியவந்தது .
உடனே கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து போலி ஆசாமி செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
குறிப்பாக கைது செய்யப்பட்ட நபர் தங்கி இருந்த வீட்டு உரிமையாளரிடம் நான் காவல் உதவி ஆய்வாளர் என்று அறிமுகப்படுத்தி கொண்டு தான் அந்த வீட்டில் குடியிருக்கிறார். கைது செய்யப்பட்ட நபர் வீட்டிற்கு செல்லும்போது காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் தான் செல்வார் என்றும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
அவர் பயன்படுத்திய புல்லட் வாகனம் விருதுநகர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆகையால் அந்த வாகனத்தின் உரிமையாளர் யார் என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவையிலிருந்து திருப்பூருக்கு முதலமைச்சர் சாலை வழியாகப் பயணித்த போது ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது அந்தப் பகுதியில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தி ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
.