கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணி ஆணை வழங்கியதில் முறைகேடு! உடுமலை வருவாய் கோட்டாட்சியர் 50 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு!
அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் உடுமலை வருவாய்த்துறை!?
சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தல்!!
துணை போகும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் !?
அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் உடுமலை வருவாய்த்துறை!? அமைதி காக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!
உடுமலைப்பேட்டை தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணி ஆணை வழங்கியதில் முறைகேடு! உடுமலை வருவாய் கோட்டாட்சியர் 50 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு!
பிரிட்டீஸ் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு இன்றுவரை மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள துறைகளில் முக்கியமானது வருவாய்த் துறை நிர்வாகம் மட்டுமே!
கடந்த காலங்களில் படிப்படியாக ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ள போதும் தற்போதும் சட்டம் & ஒழுங்கு குறித்த விபத்துகள் குறித்த இயற்க்கை பேரிடர் குறித்த விபரங்களை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது நிவாரணங்களை பெற்றுத் தருவது விவசாய பதிவேடுகள் பராமரிப்பது சேத விபரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது நிவாரணம் பெற்று தருவது மழை சேதம், தீ விபத்து கலவரங்கள் குறித்த தகவல்களை தெரிவிப்பது பிற துறைகளின் நிவாரணம், சலுகைகள், திட்டங்கள், வங்கி கடன், பயிர் கடன், மின் இணைப்பு ஆகியவற்றினை பெற்றிட சான்றிதழ்களை வழங்குவது… பட்டா உரிமை, ஆவண உரிமை குறித்த சான்றிதழ்களை வழங்குவது கனிமவள, இயற்க்கை வள, மரம் வெட்டுவது, போன்ற சட்டவிரோத பணிகளை கண்காணித்து தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதும் கிராம நிர்வாக பணிகளை மேற்க்கொள்ளுவது என பல இன்றியமையாத பணிகளை செய்து வரும் பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த் துறையில் தற்போது அரசியல் வாதிகளின் நேரடி தலையீட்டால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என பாரபட்சமாக மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகிறது குறிப்பாக ஒரு நடுத்தர அல்லது ஏழை நபர் தனது வீட்டின் அடிப்படை தேவைக்கு மண்,கிராவல், கற்கள் கொண்டு சென்றால் அதனை தடுத்து அபராதம் விதிக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் தினமும் இரவு பகலாக கொள்ளை போகும் கனிம வளங்களை கன்னெதிரே கண்டாலும் நடவடிக்கை எடுப்பதில்லை .இது குறித்து தகவல் தெரிவித்தால் அவ்வாறு தகவல் தெரிவிக்கும் நபருக்குஅரசியல்வாதிகள் மூலமோ அல்லது காவல் அதிகாரிகள் மூலமோ மிரட்டல் அச்சுறுத்தல் போன்ற நெருக்கடிகள் உருவாகிறது…
குறிப்பாக உடுமலையில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி துறை அரசியல்வாதிகள் என கூட்டமைப்போடு ஒன்றிணைந்து செயல்பட்டு சட்ட விரோத நபர்களுக்கு துணை போவதும் அதனை எதிர்த்து குரல் கொடுப்போருக்கு எதிராக சதிச செயல்களை செய்து பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டப்படுவது வாடிக்கையாக உள்ளதால் கனிம வளங்களை சட்ட விரோதமாக கடத்தும் கும்பலுக்கு உறுதுணையாக உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பணியிட மாற்ற சட்டத்தில் இல்லாத ஒரு ஆணையை சட்ட விரோதமாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
உடுமலைப்பேட்டை வருவாய்த்துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்த அனுபவம் வாய்ந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் கடந்த 21-02-2023-ல் காரணம் ஏதுமின்றி பணியிட மாறுதல் செய்யப்பட்டு தொலைதூர கிராமங்களுக்கு கட்டாயமாக மாற்றப்பட்டனர்.. 20 நாட்கள் ஆன நிலையில் மீண்டும் 10-03-2023-ல் சிலருக்கு மட்டும் கிராம மாறுதலுக்கு உட்படுத்தியிருப்பது பல தரப்பினருக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கிறது…
இதில் கனிமவள கொள்ளைகளுக்கு துணை போகாத கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களின் மீது சில போலியான குற்றச்சாட்டுக்களை உருவாக்கியும் அதன் மீது எவ்வித விசாரணைகளையும் மேற்க் கொள்ளாமல் பணியிட மாறுதல் செய்தும் அரசியல் தலையீடு காரணமாக தங்களுக்கு சாதகமான நபர்களுக்கு மட்டும் மீண்டும் 10-03-2023 – இல் அதே கிராமத்திற்கு மாறுதல் செய்தும் உள்ளதாக வருவாய்த்துறைக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் சமீபகாலமாக அரசியல்வாதிகளுக்கும் சட்டவிரோதமாக கனிம வளங்களை கடத்தும் நபர்களுக்கு துணை போகாத கிராம நிர்வாக அலுவலர்களையும் நிர்வாக ரீதியாக மிரட்டிப் பணிய வைப்பதும் பணியாத பட்சத்தில் பல நெருக்கடிகளுக்குட்படுத்தி அதன் மூலம் பணிய வைப்பது போன்ற செயல்களில் உடுமலை வருவாய்த்துறை நிர்வாகம் செய்து வருவது குறித்தும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சமீபத்தில் வெடித்து கிளம்பிய
கிராம நிர்வாக அலுவலர் சங்கம் உடுமலை வருவாய் கோட்டாட்சியரின் செயல்களுக்கு எதிராக போராட வேண்டி வரும் என எச்சரித்து சில தீர்மானங்களையும் போட்டு அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்…
இதன் தொடர்ச்சியாக உடுமலை வட்டாட்சியர் தலித் சமுதாயத்தினை சார்ந்தவர் என்பதால் செயல்படாத வட்டாட்சியராகவும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், தனிச்சையாக செயல்பட்டால் சில நிர்பந்தங்களுக்கு உட்படுத்தியும் அதன் மூலம் மாறுதலுக்கு உட்படுத்தவும் முயற்சிகள் மேற்க்கொள்ளப்படுவதால் வேறு வழியின்றி தனது பதவிக் காலம் வரை தனக்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறு சில சட்ட விரோத செயல்களை கண்டு கொள்ளாமலும் அரசியல்வாதிகளின் நிர்பந்தங்களுக்கும் அடிபணிந்தும் பணிபுரிந்து வருவதாக வருவாய்துறை வட்டாரங்களில் உள்ள உண்மையான அதிகாரிகள் தகவலை தெரிவிக்கின்றனர்…
சமீபத்தில் நடைபெற்ற கிராம உதவியாளர் பணி நியமண தேர்வில் உடுமலையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கி சிலர் உறவினர்களுக்கும் பணி வழங்கி நேர்மையான முறையில் பணி நியமனம் செய்யாமல் முறைகேடுகள் நடந்துள்ளது எனவும் இது குறித்து நேர்மையான முறையில் விரிவான விசாரணை நடைபெற்றால் 50 லட்சத்திற்கு மேல் கையூட்டு யார் பெற்றுள்ளார்கள் என்பது குறித்தும் தெரியவரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் நேர்பார்வையில் உள்ள துறையிலேயே இவ்வளவு வில்லங்கங்கள் நடைபெறுகிறது என்றால் மற்ற துறைகளில் கேட்கவா வேண்டும் .
பொதுவில் உடுமலைப்பேட்டையில் பணிபுரியும் வருவாய்த்துறை கீழமை அலுவலர்கள், ஊழியர்கள் அச்சத்திலும், மன வேதனையிலும் உள்ளார்கள் என்பது சிலரின் வெளியில் கூற முடியாத ஆதங்கமாக உள்ளது.
ஆகவே சமூக நீதிக்காக போராடிவரும் தமிழக முதல்வர் கவனத்தில் எடுத்துக் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேர்மையான வருவாய்துறை அதிகாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். இந்த குற்றச்சாட்டின் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியாளரின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்.