லஞ்ச ஒழிப்புத் துறை

குத்தாலம் வட்டாட்சியரின்
லஞ்ச வசூல் வேட்டை   தீவிரம்! நடவடிக்கை எடுக்கப் போவது லஞ்ச ஒழிப்பு துறையா!? மயிலாடுதுறைமாவட்ட வருவாய்த் துறை நிர்வாகமா!?


மயிலாடுதுறை மாவட்டம்
குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஏதாவது வேலை நடக்க வேண்டுமானால் லஞ்சம் கொடுத்தால் மட்டும்  பெண் வட்டாட்சியர் இந்துமதி வேலையை முடித்துக் கொடுப்பதாக கூறுகிறார்கள்.

செங்குடி கிராம நிர்வாக அலுவலகம்

ஏற்கனவே  இவர் மீது லஞ்சம் வாங்கியதாக புகார்கள் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுசம்பந்தமாக அப்பகுதிகளில்  உள்ள சமூக ஆர்வலர்களிடம் விசாரித்த போது இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் அப்பகுதியினர்.

இந்துமதி அவர்களுக்கு  வலது இடது கரம் அனைத்தும் மருத்தூர் கிராமத்தில் (தலையாரி )கிராம நிர்வாக உதவியாளராக இருக்கும் நல்ல முகமது .

திருநாள்
கொண்டச்சேரி  கிராம நிர்வாக அலுவலகம்

இவரது மனைவி திருநாள் கொண்டன்சேரி  கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்.இவர்கள் வீட்டில் தான் திருநாள் கொண்டன் சேரியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. குத்தாலம் வட்டத்தில் மட்டும் 54 வருவாய் கிராமங்கள் உள்ளது.. குத்தாலம் வட்டாட்சியருக்கு உட்பட்ட அனைத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கும்   எந்தப் பணிகளாக இருந்தாலும்  குறைந்தது 5000 முதல் 25 ஆயிரம் வரை லஞ்சம் இல்லாமல் எந்த  வேலையும் நடப்பதில்லை என்றும் அப்படி அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில்சேர்த்து மாதம் குறைந்தது 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை கையுட்டாக  வாங்கப்படும் பணத்தை  நல்ல முகமது மூலம் குத்தாலம் வட்டாட்சியர் இந்துமதி சொல்லும் இடத்தில் சொல்லும் நபரிடம் கொண்டு போய் சரியாக கொடுத்து விடுவாராம்!
அது மட்டும் இல்லாமல் யார் சரியாக கப்பம் கட்டவில்லை என்று கேட்டு அவர்களை  தகாத வார்த்தையில் வாடிக்கையாக  வட்டாட்சியர் இந்துமதி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் மனம் உடைந்த வருவாய் அலுவலர் சங்கம் சார்பாக குத்தாலம் வட்டாட்சியர் இந்துமதி யின் செயல்பாட்டை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

குத்தாலம்  வட்டாட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்

அதுமட்டுமில்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 27/07/2023 அன்று குத்தாலம் வட்டாட்சியின் அராஜக போக்கும் மற்றும் ஊழல் முறைகேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பல சமூக ஆர்வலர்களும் குத்தாலம் பெண் வட்டாட்சியர் இந்துமதி மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல புகார்கள் கொடுத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் குத்தாலம்  வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டது  குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்துமதி மீது உள்ள புகார் மீது எந்த நடவடிக்கையும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வட்டாச்சியர் அலுவகத்தில் நடக்கும் வசூல் பட்டியல் ..

குத்தாலம் வட்டாட்சியர் இந்துமதி

பட்டா மாறுதல், கன்டிசன் பட்டாவை அயன்பட்டாவாக மாறுதல் செய்ய, பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய, வாரிசு சான்றிதழ் பெற, பட்டா நிலம் அளவீடு செய்ய, அடங்கல், சிட்டா என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக கணிசமான தொகையை நிர்ணயித்து அவற்றை கொடுத்தால் மட்டுமே வேலையை முடியுமாம். இதேபோல் சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்றுகளுக்கு
பட்டா பெயர் மாற்றம்..
நிலம், வீட்டுமனையை அளவீடு செய்ய,
சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க  ,செம்மண் கடத்தலுக்கு உடந்தையாக இருக்க,
விவசாய நிலங்களை வணிக நிறுவனங்களுக்கு மாற்ற
(ஏக்கருக்கு) – 100,000
பிறப்பு, இறப்பு சான்று – 2,000
இவற்றை எந்த துறை அதிகாரிகளோ ஊழியர்களோ மறுக்கவில்லை.
திரைப் படங்களில் கூட லஞ்சம் வாங்கும் முறைப் பற்றி விளக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வருவாய்த் துறையில்
தொடர்ந்து பெண் அதிகாரிகள் லஞ்சம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது ஏன்?
கண்டபடி செலவு செய்ய பணம் வேண்டும், போன்ற மனவெறி கொள்ளும் பொழுது, பணமும் அவ்வாறே வர வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அந்நிலையில் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, ஊக்கம் அதிகமாகி, வெறியாக,வன்மத்துடன் செயல்பட ஆரம்பிக்கிறது. விளைவு, ஏழைகளிடம் கூட ரூ 1000 என்றெல்லாம் வாங்கும் மனப்பாங்கில் வெளிப்படுகிறது.அதுவும்பெண்களிடம், பெண்களே லஞ்சம் கேட்பது பெண்மையின் சீரழிவின் உச்சத்தைக் காட்டுகிறது எனலாம்.இத்தகைய சட்டமீறல்கள், குற்றங்களில் ஈடுபடுவது திகைப்பிலும், திகைப்பாக இருக்கிறது.
தமிழக அரசு இத்தகைய ஊழல்காரர்களை என்ன செய்யும்? இவர்களை மாற்ற முடியுமா, இடம் மாற்றம் இல்லை, ஏனெனில், புதிய இடத்தில் உட்கார்ந்து கொண்டாலும், பழைய வேலை செய்ய ஆரம்பிப்பார்கள்.ஆனால், இவையெல்லாம், குறிப்பிட்ட திட்டத்துடன், உறுதியாக, குறிப்பிட்ட நபர்கள்- அதிகாரிகள் ஒப்புதல், துணையோடு, நடப்பது தெரிகிறது.
இத்தகைய கொடுமையான லஞ்சப் பேய்களை மாற்ற முடியாதா, விரட்டியடிக்க முடியாதா!?லஞ்சத்தை, ஊழலை ஒழிக்க வேண்டிய கடமை, தார்மீகம் உள்ளது. ஆகவே  லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்  குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டால் அங்கு நடக்கும் ஊழல் முறைகேடு மற்றும் வட்டாட்சியர் பல கோடி சொத்து குவிப்பு சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டுக்கு உண்மையா இல்லையா என்ற தகவல்கள் வெளிவரும் என்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்!லஞ்ச வசூல் வட்டாட்சியர் அலுவலகத்தை   லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் முன்பு வருவாய்த்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா!? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button