குன்றக்குடி கோயில் யானை உயிரிழந்த கொடூர சம்பவம்!மின் கசிவால் தீ விபத்து நடக்கவில்லை! நடந்த உண்மையை மறைக்கும் கோவில் நிர்வாகம்! பக்தர்கள் அதிர்ச்சி தகவல்!விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை !
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும், இனி யானைகளை வாங்ககூடாது என்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அறநிலையத்துறை செயலர் இணைந்து விவாதித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும்.
இனி வரும் காலங்களில் யானைகளை வாங்க கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை செயலர் உத்தரவு பிறபிக்க வேண்டும்” என்று 2024 மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் கோவில் தேவஸ்தானங்களும், பக்தர்களும், ஆன்மிக ஆர்வலர்களும் கோவில் பாரம்பரியத்தில் யானைகள் பயன்படுத்தப்படுவது பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்காமாகும் என்றும் நீதிமன்றத்தின் உத்தரவு சாத்தியம் இல்லை என்றும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து இருந்து வந்தது.
தனிநபர் மற்றும் கோயில்களில் உள்ள யானைகளைப் பராமரிக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது? எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் 2021 பிப்ரவரி மாதம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ஐந்து மாதம் ஆகியும் இதுவரை கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
1960 களின் காலகட்டம் வரை கோவில்களில் வளர்க்கப்பட்ட யானைகளின் பராமரிப்பு நன்றாக இருந்தது. யானைகளை வளர்க்கும் முறைகள் நன்றாக இருந்தது. அப்போது யானைகளுக்கு உணவளிப்பதற்காகவே தனி புற்கள் வளர்க்கப்பட்டது. தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு தனியாக கான்கிரீட் கூரை அமைத்து ஷவர் நீச்சல் குளம் என பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் சோற்று உருண்டைகளைத்தான் கொடுக்கிறார்கள் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்,.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலுக்கு 1971ஆம் ஆண்டு ஆத்தங்குடியைச் சேர்ந்த நகரத்தார் சுப்புலட்சுமி என்ற பெண் யானையை பரிசாக கொடுத்தார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுப்புலட்சுமி யானையை கோயில் நிர்வாகம் பராமரிப்பு செய்து வருகிறது. அந்த யானையின் வயது 53.
கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டின் அருகிலேயே யானை மண்டபம் உள்ளது.
ஆனால் சுப்புலட்சுமி யானைக்கு தனியாக கான்கிரீட் கூரை அமைத்து ஷவர் நீச்சல் குளம் இல்லை ,
மாறாக தற்காலிக தகரக் கொட்டகை அமைத்து அதில் தென்னை ஓலை அமைத்து பராமரித்து வந்ததாகவும், திடீரென்று யானை கட்டிருந்த கொட்டகையில்
மின் கசிவு ஏற்பட்டு கொட்டகை எரிந்து யானை தீயில் கருகி உயிரிழந்ததாகவும் கோவில் நிர்வாகம் கூறுவது முற்றிலும் தவறானது என்றும்
தினந்தோறும் யானைப்பாகன் யானை கட்டியிருக்கும் கொட்டகையில் விளக்கு ஏற்றி வைப்பார் என்றும் அந்த விளக்கில் இருந்த தீ பற்றி ஓலையில் பட்டு கொட்டகை எரிந்து யானை மீது தீப்பற்றி யானை இறந்திருக்கலாம் என்றும் பக்தர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் கோவில் நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் தான் சுப்புலட்சுமி யானை கொடூரமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பல ஆண்டுகளாக யானை மண்டபத்தில் தகர சீட் போட்ட மேற்கூறை அமைக்கப்பட்டு அதற்குள் யானையை பராமரித்து வந்தனர், வெயில் தாக்கம் தாங்க முடியாமல் யானை மிகவும் சிறப்பாக சிரமப்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் யானை இருக்கும் இடத்தில் குடிநீர் தொட்டி மற்றும் குழாய் வசதி இல்லை என்றும் தண்ணீரை எடுத்து வந்து தான் யானையை குளிப்பாட்டுவார்களாம்.யானைக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பார்கள் என்றும் போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் வெயில் காலங்களில் யானையை போதுமான அளவிற்கு நீரில் குளிப்பாட்டாமல் பராமரிப்பில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வந்துள்ளது கோவில் நிர்வாகம் என பக்தர்கள் குற்றம் சாட்டின்றனர்.
அது மட்டும் இல்லாமல் நிரந்தரமாக யானை மண்டபம் கட்டிடம் கட்டி யானையை பராமரிக்காமல் தகர மேற்குறைக்கு கீழ் தென்னங்கீற்று ஓலைகளை வைத்து பராமரித்து வந்துள்ளார்கள்.
13 ஆம் தேதி அதிகாலை யானை மண்டபத்தில் இருந்த மேற்கூறையில் அமைத்த தென்னங்கீற்று ஓலைகளில் தீப்பற்றி தெரிந்துள்ளது. தீயில் இருந்து தப்பிக்க, சுப்புலட்சுமி யானை காலில் கட்டி இருந்த சங்கிலியே அறுத்துக் கொண்டு தாமாகவே மண்டபத்திலிருந்து வெளியேறி வந்தது. கோயில் மண்டபத்தில் முன்பு தீக்காயத்துடன் யானை நிற்பதை பார்த்த, மக்கள் மற்றும் பணியாளர்கள் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த கால்நடை மருத்துவர்கள், யானை சுப்புலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. யானை உடலுக்கு பொன்னம்பல அடிகளார் மற்றும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.
குன்றக்குடி ஶ்ரீ சண்முகநாதர் திருக்கோயில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
குன்றக்குடி மட்டுமல்லாது சுற்றுவட்டார மக்கள் அனைவரின் பேரன்புக்குரிய சுப்புலட்சுமியின் மறைவு பேரிழப்பு. உணர்ச்சிப் பெருக்கோடு நடைபெற்ற இறுதி ஊர்வலம் காண்போரை கண் கலங்க வைக்கிறது.
இதுபோன்ற சம்பவம் இனி நடக்காத வண்ணம் யானைகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமின்றி அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்து செயல்பட வேண்டுமென
தீ விபத்தால் உயிரிழந்த சுப்புலட்சுமி யானைக்கு நடந்த கொடூர தூர சம்பவத்திற்கு கோவில் நிர்வாகம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகத்தின் மெத்தன போக்கால் கோவில் யானையை கொன்றுவிட்டார்கள் விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என பக்தர்கள் கண்ணீர் மல்க குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ கோவில்களில் பராமரிப்பு வரும் யானைகளை வனப்பகுதியில் விட்டுவிட நீதிமன்றங்கள் தமிழக அரசுக்கு பலமுறை உத்தரவிட்டும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் போதுமான பராமரிப்பு இன்றி யானைகளின் உயிரை பறிக்கும் கோவில் நிர்வாக அதிகாரிகளின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது!