குளுகுளு குமுளி.. கு..கழுவ தண்ணீர் இல்லை!துர்நாற்றம் வீசும் சுகாதாரமற்ற கழிவறைகள்! நடவடிக்கை எடுக்குமா அரசு போக்குவரத்து கழக நிர்வாகம்!
தேனி குமுளி அரசு பேருந்து பணிமனையில் கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாமல் ஓட்டுநர் நடத்துனர்கள் அவதி!
தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் செல்லக் குழந்தையாய் வனப்புடன்
பசுமைகளின் அரவணைப்பில் பிரமிப்பூட்டும் குளுகுளு நகரமாய்
குமுளி காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது குமுளி.
தேனியிலிருந்து குச்சனூர் கம்பம் வழியாக
59 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது குமுளி.
தமிழகத்தில் இருந்து கம்பம் கூடலூர் வழியாக குமுளி மலைச் சாலை தொடங்கும் இடத்தில் உள்ளது லோயர்கேம்ப். இங்கு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிக்குயிக்கின் சிலை அமைந்த மணி மண்டபமும்…பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தேக்கடி வனவிலங்கு உய்வகம் அமைந்துள்ளது.
பசுமை மலைக் காடுகளும், மலைச் சிகரங்களும், இயற்கை நிறைந்த பகுதியான குமுளி இந்தியா மற்றும் அல்ல உலக நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விருந்தளித்து வருகிறது.
இந்த குமுளியில் அரசு பேருந்து பணிமனை உள்ளது.
இந்த பணிமனையில் தமிழகத்தில் உள்ள கும்பகோணம், மதுரை, கோயமுத்தூர் ,ஈரோடு , திண்டுக்கல் மண்டல பணிமனை பேருந்துகள் இரவு மூன்று மணி நான்கு மணிக்கு வந்து நிறுத்தம் செய்கின்றனர்.
இந்த பேருந்துகளின் ஓட்டுநர் நடத்துனர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாமல் துர்நாற்றத்துடன் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அவல நிலை உள்ள அதிர்ச்சி வீடியோ!
இதனால் ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் இதனால் உடல் ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அதுவும் முக்கியமாக இரவு நேரங்களில் கழிப்பிடம் கழித்து செல்ல முடியாமல் இரவு முழுவதும் மிகவும் சிரமப்பட்டு வருவதால் காலையில் பேருந்து இயக்கும் பொழுது உடல் ரீதியாக வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவலை நடத்துனர் ஓட்டுநர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த பணிக்கு செக்யூரிட்டி கூட இல்லை என்று தெரிவிக்கின்றனர். எந்த பாதுகாப்பும் இல்லாத
போக்குவரத்து பணிமனையில் இருந்த பேருந்தின் ஓட்டுனர் நடத்தினவரிடம் விசாரித்த போது
இந்த பணிமனையில் சுமார் 25 வருடத்திற்கு முன்பு பேருந்து ஓட்டுனர் நடத்துனர்கள் தங்குவதற்கு ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள் கட்டப்பட்டதாகவும் அந்த கட்டிடம் தற்போது பராமரிப்பின்றி பாழடைந்த பங்களா போன்று காட்சியளிக்கிறது அதுமட்டுமல்லாமல் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பயன்படுத்தும் கழிப்பறை தண்ணீர் இல்லாமல் சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுவதால் பணிமனைக்கு வெளியே தண்ணீர் இருக்கும் இடங்களில் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக ஓட்டுனர்கள் நடத்தினார்கள் பலமுறை பேருந்து பணிமனை மேலாளர் மற்றும் திண்டுக்கல் மண்டல மேலாளரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதற்கு மாறாக நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுங்கள் அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம் என்று தேனி மண்டல அரசு பேருந்து போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்துள்ளது. பணிமனை குமுளி கிளை மேலாளரிடம் கழிவறையில் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக சொல்லி உள்ளார்கள் அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ காடு மலை கடந்து பல கிலோமீட்டர் தூரம் பல மணி நேரம் பயணிகளை ஏற்றுக் கொண்டு பேருந்துகளை ஓட்டி செல்லும் ஓட்டுநர் நடத்துனர்கள் பேருந்து நிறுத்தும் இடங்களில் ஓய்வெடுக்கும் அறைகளில் முக்கியமாக தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரத்துடன் கழிவறைகள் அமைத்து தர போக்குவரத்து துறை அமைச்சகம் முன் வரவேண்டும் .