குவாரி என்ற பெயரில் வனப் பகுதி சுரண்டப் படுவதை தடுத்து நிறுத்துவாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!?
புதிதாக பொறுப்பேற்றுள்ள கனிமவளத்துறை கூடுதல் செயலாளர் பணிந்த ரெட்டி மற்றும் கனிமவளத்துறை ஆணையர் நிர்மல் ராஜ் அவர்களின் கனிம வளங்களை பாதுகாக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
குட்டி கேரளா என்று அழைக்கப்படும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா குருவித்துறை கிராமம் .
குருவித்துறை கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட சர்வே எண் 161 162 உள்ளடக்கிய 12 சர்வே எண்கள் கொண்ட 10 ஏக்கர் 64 சென்ட் நிலத்தில் கனிம வளம் எடுக்க கடந்த அதிமுக ஆட்சியில் 18/01.2019 முதல் 17/01/2024 வரை ஐந்து வருடத்திற்கு (கிராவல் மற்றும் உடைகள்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோட்டைச்சாமி பெயரில் கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களுக்கு கனிம வளம் வெட்டி எடுக்க சட்ட விரோதமாக உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த உரிமம் வழங்குவதற்கு கனிமவளத்துறை மட்டும் இன்றி வருவாய்த்துறை, புவியியல் துறை, வேளாண் துறை, உட்பட பல துறைகள் அனுமதி பெற வேண்டும்.கல் குவாரிகளில் விதிமுறைகளை மீறி பாறை கற்களை உடைப்பதால் காற்று, மண், நீர், ஒலி மனிதர்கள், உயிரினங்கள், பல்லியல் சூழ்நிலை பாதிக்கப்படும்.
கனிம வளம் அதிகம் சுரண்டப்படுவதை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் கனிமவளத்துறை அதிகாரிகள்.
தமிழ்நாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருவதாகவும்
இவற்றில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மறு ஆய்வு செய்து வருவதாக வருவாய் துறை செயலாளர் கூறியது போல் நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் பசுமை போர்த்திய தொன்மை நிறைந்த சின்னங்கள் குறிப்பிட்ட அளவு மலைகள் இன்று பெரும் பள்ளங்களாக மாறிவிட்டன. கட்டுமான பணிகளுக்காக கல் மற்றும் இதர கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளூர் தேவைகளுக்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் சட்ட விரோதமாக கடத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது.
1.குவாரி அமைக்கப்படும் நிலம் வனப்பகுதி குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்திற்கு குறிப்பிட்ட தூரத்தில் இருக்க வேண்டும்.
2.இயற்கை வளங்கள் கொண்ட மலைகள் அருகே குவாரிகளுக்கு அனுமதி கிடையாது
3. 10 எக்டர் அனுமதி வழங்கியிருந்தால் அந்த நிலப்பரப்பில் வழங்கப்பட்டுள்ள வரைபடத்தின் அடிப்படையில் அந்த இடத்திற்குள் கனிம வளம் வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது
4. கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட பயன்படுத்தும் வெடிப்பொருட்கள் அளவு ஒலி அளவு மற்றும் காற்று மாசு அளவு இவை அனைத்தும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் இருக்கக் கூடாது.
தற்போது பெரும்பாலான கல்குவாரிகள் அரசு வழங்கிய விதிமுறைகளை பின்பற்றாமல் சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி கடத்தி வருவோம் என்றனர் என்பதுதான் நிதர்சனம்
தற்போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா குருவித்துறை அருகே கோட்டைச் சாமி கல்குவாரி இயங்கி வருகிறது இந்த கல் குவாரியை குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது .இந்த
குவாரி 21 பொது விதிகளையும், அனுமதி வழங்கிய 4 விதிமுறைகளையும் பின்பற்றப்பட வேண்டும்
ஆனால் இந்த விதிமுறைகளை அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு
தற்போது வனப் பகுதியுடன் ஒட்டி சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து கடத்தி வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் இந்த குவாரிக்கு அனுமதி இல்லாத பாதையில் சட்டவிரோதமாக கனரக வாகனங்கள் சென்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல்
திருமங்கலம் விவசாய பாசன கால்வாயை கடந்துதான் இந்த கல் குவாரிக்கு செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் போது கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மேல் கடந்து கல்குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளத்தை கனரக வாகனங்கள் மூலம் சட்டவிரோதமாக எடுத்துச் செல்கின்றனர்.. இந்த கனரக வாகனங்கள் அளவுக்கு அதிகமாக சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்துச் செல்வதால் கால்வாய் குறுக்கே அமைந்துள்ள பாலம் தற்போது மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் உயர் மின் அழுத்த மின் மின்கம்கள் செல்கின்றன அதற்கு கீழ் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வனப்பகுதிக்கு அருகே இந்த கல்குவாரி இயங்குவதால் பாறைகளை அளவுக்கு அதிகமான வெடிப்பொருள்களை வைத்து வெடிக்க வைத்து வெட்டி எடுக்கும் போது மலைகளில் இருந்து மண் சரிவு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் வனப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வெடிவைத்து வெட்டி எடுப்பதாகவும் அதுமட்டுமில்லாமல் இந்த கல்குவாரியில் ஏற்படும் காற்று மாசு அந்த வனப் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மீது படிந்து பல அறிய மூலிகை செடிகள் மற்றும் அரிய வகை இயற்கை மரங்கள் அழிந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அது மட்டும் இல்லாமல் கல் வெட்டி எடுக்க பயன்படுத்தும் வெடி மருந்துகள் வெடிக்கும் சத்தம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் உள்ள உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
அரசு அனுமதி வழங்கிய அளவை விட கூடுதலாக கனிம வளம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கல் குவாரி என்ற பெயரில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கனிம வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டி பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் தடுத்து நிறுத்த வேண்டிய கனிமவளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி கடத்தும் கல்குவாரி உரிமையாளர்கள் கப்பம் கட்டுவதால் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் கல் குவாரிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றுச் செல்லும் கனரக வாகனங்கள் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் வாகனங்களை சோதனை செய்ய வேண்டிய RTO RDO வட்டாட்சியர் மூன்று அதிகாரிகளும் தங்களுக்கு தேவையான கட்டிங் பெற்றுக் கொண்டு சைலன்ட் மோடில் இருப்பதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் சிலவற்றை பாதுகாக்கப்பட்ட மலைகளாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இதேபோல் சில மலைகள் பாதுகாப்பு குழுமத்தின் கீழ் இருக்கின்றன.
ஆனால் கடந்த ஏழு மாதங்களில் மலையை ஒட்டி உள்ள 6 கல்குவாரிகள் விதிகள் மீறி சட்ட விரோதமாக இயங்கி வந்ததால் அந்த கல்குவாரிகளுக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது முன் உதாராமாக குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா குருவித்துறை கிராம மலை அருகே அருகே சட்ட விரோதமாக கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கியதும் இல்லாமல்
சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி கடத்தி வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டை ஏளனம் செய்யாமல் வேடிக்கை பார்க்காமல் கிடப்பில் போடாமல்
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட கல்குவாரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு ஐந்து வருடம் தொடர்ந்து கனிம வளம் எடுக்க உரிமம் வழங்கப்பட்டதில் ஊழல் முறைகேடு விதிமீறல் நடந்துள்ளதா என கண்டறிய அது மட்டும் இல்லாமல் சட்ட விதிகள் மீறி கனிம வளங்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டிருந்தால் உடனே கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் அது மட்டும் இல்லாமல் கல்குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி எடுத்தால் மட்டுமே இயற்கை வளங்களை காப்பாற்ற முடியும். அப்படி இயற்கை வளங்களை காப்பாற்றினால் வனவிலங்குகள் மற்றும் வருங்கால சந்ததியினர் நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகுக்கும் என்பதுதான் நிதர்சனம்.ஆட்சியரின் அறிக்கையின்படி சட்ட விரோத செயல்பாடுகள் இருந்தால் நடவடிக்கையை
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு நடவடக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கனிம நிர்வாக பணிகள் ஒரு துணை இயக்குநர், ஒரு உதவி புவியியலாளர் மற்றும் இரண்டு சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் (கனிமம்) அடங்குவார்கள்.