மருத்துவம்

கொரோனா வார்டில் பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளால் கொரோனா மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்காத சிங்காநல்லூர் இ எஸ் ஐ மருத்துவமனை முதல்வர்!? நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா!?

கொரோனா வார்டில் பயன்படுத்தும் மருத்துவ கழிவுகளை பொதுமக்கள் செல்லும் பாதையில் சுகாதாரமற்ற நிலையில் போட்டிருப்பதால் கொரோனா மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் சிங்காநல்லூர் இ எஸ் ஐ மருத்துவமனை முதல்வர்!?

கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல் பட்டு வருகிறது

இந்நிலையில் கோவை, திருப்பூர்‌. நீலகிரி மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணிப்‌ பெண்கள்‌ மற்றும்‌ மகளிர்‌ சம்பந்தமான நோய் உள்ள பெண்கள்‌ இங்கு தான்‌ அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

கோவை மாவட்டத்தில் கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்து இருந்தது குறிப்பிட தக்கது!

இதனால்‌ இம்மருத்துவமனையில்‌ கொரோனா தொற்று உள்ள கா்ப்பிணி பெண்களுக்கு பிரசவம்‌ பார்ப்பதற்கு ஏற்ற வகையில்‌ பிரத்யேகமாக பிரசவ வார்டும்‌, அறுவை சிகிக்சை அரங்கமும்‌ தயார்ப்படுத்தப்பட்டது.
இம்மருத்துவமனையில்‌ பிரசவம்‌ பார்க்கப்பட்டு பிறந்த அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும்‌ கொரோனா தொற்று பரிசோதனை செய்யப் பட்டு வருகிறது.

இந்நிலையில் சிங்காநல்லூர்
இ எஸ் ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் பயன்படுத்திய மருத்துவ கழிவுகளை மருத்துவமனை வெளியே ( வரதராஜபுரம் ஹவுசிங் போர்டு குடியிருப்புக்கு செல்லும் வழியில் குப்பை கிடங்கு போல் சுகாதாரமற்ற முறையில் போடப்பட்டுள்ளது.

வரதராஜபுரம் ஹவுசிங் போர்டு குடியிருப்புகளுக்கு செல்லும் வழி


இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வழியில் செல்லும் பள்ளி மாணவர்கள் பெரியவர்கள் கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்த மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால்
கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா அவர்கள் உடனடியாக சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் இந்த மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

12 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button