கொலை ,கொள்ளை வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வந்த 11 ரவுடிகளை தட்டித் தூக்கிய பழனி தனிப்படை காவல்துறை!
கொலை ,கொள்ளை வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வந்த 11 ரவுடிகளை தட்டித் தூக்கிய பழனி காவல்துறை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் மற்றும் பழனி சுற்றுவட்டார பகுதிகளில்
கடந்த சில வருடங்களாக கொலை கொள்ளை வழித்தறி சூதாட்டம் போன்ற சட்ட விரோத செயல்களில் ரவுடிகள் ஈடுபட்டு வருவதோடு பொது மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருவதாகவும் பல புகார்கள் மதுரை மண்டல ஐஜி மற்றும் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு வந்துள்ளது.அதன் அடிப்படையில்
மதுரை மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் அபினவ் குமார், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. பிரதீப் ஆகியோர் ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில்
பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் மேற்பார்வையில் பழனி வட்ட காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் பழனி அடிவாரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜகுமரன் மற்றும் சி.சா.ஆய்வாளர்கள் கண்ணன், அக்னிபுத்ரன், தலைமை காவலர்கள் விஜயகுமார், மணிக்ணடன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்து வந்த
சூதாட்டம், கொலை கொள்ளை முயற்சி, அடிதடி, போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் அதே போல் நீதிமன்றங்களுக்கு சாட்சிகள் சொல்ல வரும் சாட்சிகளை கொலை மிரட்டல் விட்ட குற்றங்களுக்காக போக்கிரி பூபாலகிருஷ்ணன், கோபிநாத் துர்கா மற்றும் அவரது கூட்டாளிகள் கல்துறை மணிகண்டன், விஷ்னுவரதன், தினேஸ்குமார், கனிஅரசன், Sport கார்த்தி, நாகேந்தர பிரசாத், பாலகிருஷ்ணன், குமார், ஜெனிவா கார்த்தி உட்பட 11 ரவுடிகளின் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்து அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மேற்படி பூபாலகிருஷ்ணனன், கோபிநாத் துர்கா உடன் வழக்கில் தொடர்புடைய கூட்டாளிகளை தனிப்படை காவல்துறையினர்.தேடி வருகின்றனர்.