கொள்ளை போகும் இயற்கை வளங்கள். ..!
சீரழியும் நீர்நிலைகள்..!
கண்டுகொள்ளாமல் மாதம் பல லட்சம் கல்லாக கட்டும் திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர்!

விவசாய நிலங்களை மேம்படுத்த ஏரி குளம் கண்மாய்களில் களிமண் மற்றும் வண்டல் மண் எடுக்க உத்தரவிட வேண்டும் என விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு 2024 ஜூன் மாதம் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்து பயன்படுத்துவதற்குவட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் –
விவசாயிகள் இலவசமாக ஏரி, குளங்களில் மண் எடுக்க புதிய நடைமுறையை அறிவித்து தமிழக அரசு 12/06/24 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அனுமதித்து வழங்கப்படுகிறது.
இந்த அறிவிப்பால், விவசாயிகளுக்கு மட்டுமின்றி கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் தூர்வாரும் நடைமுறை எளிமையாகும். விவசாயிகளின் தேவையும் நிறைவேறும். மண் எடுப்பதால், நீர்த்தேக்கங்கள் யாவும் மேற்கண்ட செயல்முறையில் எளிதாக தூர்வாரப்படும் சூழல் உருவாகும். இது ஒன்றையொன்று சார்ந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடு ஆகும். இந்த புதிய நடைமுறைகளை பயன்படுத்தி வேளாண் பெருமக்கள் அனைவரும், தாம் வசிக்கும் இடத்தில் அருகில் உள்ள எந்த ஒரு நீர்நிலையில் இருந்தும் தேவைப்படும் மண்ணை எடுத்து, தமது வயல்களை வளம் பெறச் செய்யலாம். இதனால் மண் அரிப்பு தடுக்கப்படும், மழைவளம் பெருகும். விவசாயம், குடிநீர் உள்ளிட்டவைகளின் நீர் பற்றாக்குறை சரி செய்யப்படும் என்ற நல்ல நோக்கத்தோடு தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆனால் விவசாயிகள் என்ற போர்வையில் மணல் மாபியா கும்பல் வியாபார நோக்கில் அரசிடம் அனுமதி பெற்று ஏரி குளம் கண்மாய்களில்
மண் மற்றும் வண்டல் மண்ணை வெட்டி எடுத்து நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மண் லோடு ஏற்றிக்கொண்டு,
புதிய கட்டடங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு, ஒரு லோடு 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அது மட்டும் இல்லாமல் 30 நாட்கள் மட்டுமே அனுமதி பெற்று விட்டு மூன்று மாதங்கள் வரை கனிம வளங்களை வெட்டி கடத்தி வருவதாகவும் அது மட்டும் இல்லாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏதாவது ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெற்று அந்த அணுமையை வைத்து மற்ற தாலுகாக்களில் உள்ள ஏரி குளம் கண்மாய்களில் வண்டல் மண் வெட்டி எடுத்து கடத்தி விற்பனை செய்து வருவதாகவும் இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.



ஏரி, குளங்களை சீரமைக்க அனுமதி கேட்டால், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கும் அதிகாரிகள், வண்டல் மண் எடுப்பதில், அந்த நிபந்தனைகளை கடைப்பிடிப்பதில்லை.
இதனால். ஏரி, குளங்களில் விதிமீறி அள்ளப்படுவதால் இயற்கை வளம் கொள்ளை போவதுடன், நீர்நிலைகள் சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் நீர்நிலை மீட்பாளர்கள் மற்றும் விவசாயிகள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏரி, குளங்களில்,
அரசு விதிமுறையான இரண்டு முதல் மூன்று அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி வண்டல் மண் அள்ள வேண்டும்., அதேபோல் காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரையும் ஜே.சி.பி., டிராக்டர்கள் பதிவெண்களை வைத்து அனுமதி பெற்று மண் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கட்டணமின்றி எடுத்துக்கொள்ள முடியும்.
மூன்று அடி ஆழத்திற்கு மேல் மண் எடுக்கக்கூடாது, ஒரே சீராக மண் எடுக்க வேண்டும், கரைகளை சேதப்படுத்தக்கூடாது என்ற நிபந்தனைகள் உள்ளன.
ஆனால் அரசு விதித்துள்ள நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்டு மணல் மாபியா கும்பல்கள்
காலை, 8:00 மணி முதல் இரவு முழுவதும் அனுமதி பெறாத ஜே.சி.பி., டிராக்டர்களை கொண்டு கிராவல், செம்மண் கடத்துவதாகவும்
ஏரி, குளங்களில் சீராக மண் எடுக்காமலும், குறிப்பிட்ட அளவை மீறி ஆழமாக மண் எடுப்பதாலும், ஏரி, குளங்களில்
சட்ட விரோதமாக
ஒவ்வொரு நீர்நிலையிலும் சீராக மண் எடுக்காமல், பள்ளம் பள்ளமாக ஏரியை சீரழித்து வைத்துள்ளனர்.
குறிப்பிட்ட அளவை விட அதிகமாக, 25அடி வரை, ஜே.சி.பி., இயந்திரங்களை கொண்டு மண் அள்ளி வருகின்றனர் என்றும் இந்த சட்ட விரோத செயல்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
பல ஏரிகளையும், ஏற்கனவே முறையாக சீரமைத்து இருக்கும் நீர்நிலைகளையும் சிதைத்து விட்டனர்.முறையற்ற மண் அகழ்வால் நீர்வழி பாதைகள் மற்றும் கரைகள் சேதமடைந்து, தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் உருவாகி, ஏரி, குளங்கள் சீரழிகின்றன. தற்போது ஆற்றில் தண்ணீர் வந்து விட்ட சூழலிலும், மணல் மாபியா கும்பல்களிடம் வருவாய் துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக மண் எடுத்துச் செல்வதை கண்டும் காணாமல் இருப்பதுதான் வேதனையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மணல் மாபியாக்களின் சட்ட விரோத செயல்களால் , கால்நடைகள், குளிக்க செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீரில் சிக்கிய உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து, முறைகேடாக மண் அள்ளப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட மேற்கு தாலுகா
ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி உட்பட்ட சுள்ளரும்பு
கிராமத்தில் அரசுக்கு சொந்தமான குரளத்து குளம் கண்மாய் ஏரிகளில் 10 கன அடி அளவுக்கு களிமண் மற்றும் வண்டல் மண் விவசாயம் மேம்பாட்டிற்காக
புல எண் (232/ 6A, 232/ 7) வடிவேல் என்பவரின் விவசாய நிலத்திற்கு
30 நாட்கள் எடுத்துச் செல்ல திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் நடராஜன் 09/07/25 அன்று அனுமதி வழங்கியுள்ளார்.
வடிவேல் என்பவர் 08/07/25 அன்று விண்ணப்பித்த மறு நாளே 09/07/25 அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த அனுமதியை வைத்து விவசாயி என்ற போர்வையில் கண்மாயில் வெட்டி எடுக்கப்படும் வண்டல் மண்ணை சட்ட விரோதமாக நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்கை மணல் தயாரிப்பு ஆலைகள் இயங்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை இணைந்து அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த அனுமதி என்பது பாறைகளில் உடைத்து எடுக்கும் உடை கற்களை அரைத்து எம்.சாண்ட் தயாரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி வழங்கியதில் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மணல் மாபியாக்கள் மாவட்ட அதிகாரிகளின் துணையோடு சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து கடத்தி வருகின்றனர் என்றும்
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் சாணார்பட்டி கோபால்பட்டி மற்றும் மலைப்பகுதிகள், இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளான நிலக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள பல நூறு கோடி மதிப்புள்ள கனிம வளங்களை சட்ட விரோதமாக வெட்டி சூறையாடி வருவதாகவும் இதற்காக


கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு மாதம் சுமார் 5 லட்சம் வரை லஞ்சமாக கல் குவாரி உரிமையாளர்கள் மூலம் வழங்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது .அதுமட்டும் இல்லாமல் கிரசர் நடத்த அரசு அனுமதி வாங்கிவிட்டு செயற்கை மணல் தயாரித்து சட்டவிரோதமாக இயங்கி வரும் குவாரிகளுக்கு தடை விதிக்க வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலம் தடை ஆணை பெற்றுள்ளார்.
ஆனால் உயர் நீதிமன்ற தடை ஆணையை பொருட்படுத்தாமல் திண்டுக்கல் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகளை மூடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு
இந்த வழக்கு சம்பந்தமாக 16.7.2025 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் கனிம வளங்கள் வெட்டி எடுக்க மன்னார்குடியை சேர்ந்த ராஜப்பா என்பவருக்கு புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்
இந்த அனுமதிக்கு சுமார் 600 கோடி ரூபாய் வரை முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்குவாரிகளில் இருந்து சுமார் 100 கோடி வரை மாதாமாதம் கொடுக்க வேண்டும் என்றும் ஜூலை மாதத்தில் இருந்து அனைத்து மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கனிம வளங்களை வெட்டி எடுத்துச் செல்ல மன்னார்குடி ராஜப்பா நிறுவனத்தின் சார்பாக யாரோ ஒரு நபரை மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மூலம் தான் தற்போது திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு அனுமதி சீட்டு கனிம வளம் எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக டாரஸ் லாரி உரிமையாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இது உண்மையா என
திண்டுக்கல் மாவட்ட கனிமவள துறை உதவி இயக்குனர் செல்வ சேகர் அவர்களை நேரில் சென்று கேட்டபோது கனிம வளம் வெட்டி எடுத்து செல்ல தனிநபர் யாருக்கும் குத்தகைக்கு விடவில்லை என ஒன்றுமே தெரியாதது போல் அலட்சியமாக பதில் கூறுகிறார்.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கனிம வளங்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுத்து கடத்திச் செல்வதற்கு உடந்தையாக திண்டுக்கல் மாவட்ட கனிமவள உதவியை இயக்குனர் செல்வ சேகர் இருப்பது ஊரறிந்த ஒன்றுதான் என்கின்றனர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்களை காப்பாற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை
பொறுத்திருந்து பார்ப்போம் .




