கோவிலுக்குச் சொந்தமான கட்டிடத்தை சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுக்க பல லட்சம் லஞ்சம்! பொள்ளாச்சி சார் பதிவாளர் மீது சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!?
பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் அரசு உத்தரவுகளை காட்டில் பறக்க விட்டு கொடி கட்டி பறக்கும் லஞ்ச ஊழல் முறைகேடு!
கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடி கட்டி பறந்தது . அதுவும் கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கட்டு கட்டாக பணத்தை எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிக்கடி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கம் கூட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளிலும் நகராட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் பத்திரப்பதிவு துறையில் நடைபெறும் ஊழல் குறைந்ததாக தெரியவில்லை. அதுவும் பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பணம் கொழிக்கும் நகராட்சி என்று தான் சொல்ல வேண்டும் என்ன காரணம் என்றால் இங்கு உள்ள பொதுமக்கள் மீன் பிரச்சனைகள் வீண் அலைச்சல் போன்றவற்றை விரும்புவதில்லை அன்பாக பழகக் கூடியவர்கள் ஒரு இடமோ வீடு வாங்குகிறார்கள் என்றால் எந்த இடையூறும் வாதங்கள் செய்தால் அது ஒரு தடையாகவே என்னுகிற பழக்கம் உள்ளது அதனால் பத்திரப்பதிவு செய்ய சென்றால் கேட்கும் பணத்தை கொடுத்து சந்தோசமாக பத்திரத்தை வாங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள். இதை சாதமாக பயன்படுத்திக் கொள்ள பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. பொள்ளாச்சியில் முறையாக அரசு பதிவு பெற்ற பத்திர எழுத்தாளரகள் சிலர்தான் உள்ளனர். பத்திரப்பதிவு ஆலோசர்கள் என்ற பெயரில் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் பத்திரம் தயாரிப்பது அதன்பின் வழக்கறிஞர்களிடம் கையொப்பம் வாங்கி பத்திரம் பதிவு செய்து விடுவார்கள் ஆனால் இங்கேதான் ஊழல் முறைகேடு நடக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பத்திரம் தயாரிக்க அரசு அனுமதி தராத பத்திரை எழுத்தர் அனைவரும் சார்பதிவாளருக்கு இடைத்தரகர்களாக இருந்து வருகிறார்கள் என்றும் இவர்கள் பதிவு செய்ய வழங்கும் ஆவணங்கள் முறையான ஆவணங்கள் இல்லையென்றாலும் லஞ்சம் கொடுத்து பத்திரம் பதிவு செய்து விடுவார்கள் என்று குற்றச்சாட்டை எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அதேபோல் பொள்ளாச்சி ஜெயந்தி நகர் விரிவாக்கத்தில் உள்ள சொத்தின் மீது தடங்கள் மனு கொடுத்து அந்த சொத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று கூறியும் அந்த வில்லங்க சொத்தை பொள்ளாச்சி சார் பதிவாளர் லஞ்சம் பெற்றுக் கொண்டு அந்த
சொத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அது சமாந்தமாக தடங்கல் போட்ட மனுதாரர் சார் பதிவாளர் இடம் கேட்டபோது நிலுவை பத்திரம் தான் போட்டுள்ளேன் என்று சர்வ சாதாரணமாக பேசி அந்த மனுதாரரை அனுப்பி வைத்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. பொள்ளாச்சி சார் பதிவாளர் தன் குடும்பத்துடன் ஜவுளிக் கடையில் ஜவுளி எடுக்க சன்மானமாக வழங்கிய பணத்திற்காக தடங்கலையும் மீறி பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர். அரசு சம்பளம் பெறும் பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம் உள்ளே இடைத்தரர்களின் நடமாட்டம் தான் அதிகமாக இருக்கும். அவர்களை வைத்து மாதம் பல லட்ச ரூபாய் வரை லஞ்சம் வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பொள்ளாச்சி ஓம் பிரகாஷ் திரையரங்கம் எதிரில் கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள இரண்டு கடைகளை சட்ட விரோதமாக பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் கிருஷ்ணசாமி பத்திரப்பதிவு செய்து கொடுத்து பல லட்சம் ரூபாய் கையூட்டாக பெற்றுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையான வில்லங்கச் சான்று முறையான அசல் தாய் பத்திரம் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் பல சொத்துக்களை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் வந்துள்ளது. பல பத்திரிகைகளில் இது சம்பந்தமாக வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் இந்த குற்றச்சாட்டுகளை மறைக்க கிடைத்த தகவல்களை வைத்து முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பொள்ளாச்சி சார் பதிவாளராக இருக்கும் கிருஷ்ணசாமி அங்கு வரும் பொதுமக்களிடம் அநாகரிமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ஆண்கள் பெண்கள் என்று பொதுமக்கள் வந்து செல்லும் அலுவலகத்தில் சார் பதிவாளர் தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கும் போது அரசு அதிகாரி போல் நடந்து கொள்ளாமல் கால் மேல் கால் போட்டு கொண்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டு நாகரிகம் இல்லாமல் தான் உட்கார்ந்து மக்களாக தான் பதில் கூறுவார் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளனர். கள ஆய்வு செய்ய வேண்டும் என்றால் 5000 ரூபாய் மற்றும் வாகனம் கொடுத்தால் மட்டுமே அந்த இடத்திற்கு கள ஆய்வு செய்வாராம் இந்த பத்திரப்பதிவு அலுவலர் கிருஷ்ணசாமி. அப்படி இல்லையா பெரிய தொகையை இடைத் தலைவர்கள் மூலம் பெற்றுக் கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளாமலே அந்த இடத்தை கள ஆய்வு செய்தது போல் அறிக்கையை தயார் செய்து விடுவார் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் சார் பதிவாளர் அலுவலகத்தில் முக்கியமாக நான்கு பேரை கையில் வைத்துக்கொண்டு முறையான ஆவணங்கள் இன்றி பத்திரப்பதிவு செய்து அவர்கள் மூலம் மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இத்தனை ஆனால் பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வந்து இதுவரை சோதனை செய்த போது கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்கவில்லை என்று தான் கூற அந்த அளவிற்கு சாமர்த்தியமாக பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள இடைத்தருவர்கள் செயல்படுகிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பொள்ளாச்சி சார் பதிவாளர் கிருஷ்ணசாமியின் பதில் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்து கேட்டதற்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தான் நாங்கள் இந்த பணியில் நீடித்துக் கொண்டு இருக்கிறோம் என்று ஒற்றை வார்த்தையில் கூறி வாயை அடைத்து விடுவாராம் . எது எப்படியோ தமிழக அரசிற்கு வரவேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினால் மட்டுமே லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க முடியும். அது மட்டும் இல்லாமல் இது போன்று பத்திரப்பதிவுத்துறையில் சட்டவிரோதமாக முறைகேடு செய்து வரும் பொள்ளாச்சி சார் பதிவாளர் கிருஷ்ணசாமி மீது பத்திரப்பதிவுத்துறை ஐ ஜி அவர்கள் நேர்மையான அதிகாரிகளை நியமித்து அங்கு ந ஊழல் முறைகேடுகள் நடந்து இருப்பதை கண்டுபிடித்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
பத்திரப்பதிவு துறை ஐஜி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் சாட்டையை சுழற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
_