கோவையில் ஜான்சன் கல்லூரி மாணவனை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் கத்தியால் கொலை!
கோவை கருமத்து பட்டியில் இருக்கும் ஜான்சன் ஜான்சன் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவனை கோவை இந்துஸ்தான் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கத்தியால் குத்தியதால் ஜான்சன் ஜான்சன் கல்லூரியில் படித்த முதலாமாண்டு மாணவன் உயிரிழந்து விட்டார்.
ஆனால் இந்த சம்பவத்தை கல்லூரி நிர்வாகம் மறைக்க கருமத்துப்பட்டி காவல் நிலைய உதவியுடன் மறைத்திருப்பதாக அதிர்ச்சி தகவல். தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே மோதல்கள் உண்டாவதால் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்று கல்லூரி மாணவர்கள் உயிர் இழக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.