காவல் செய்திகள்

கோவை கேரள எல்லை சோதனைச் சாவடி அருகே அனுமதி இல்லாத மதுபான கூடம் 24 நேரமும் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!கண்டுகொள்ளாத பொள்ளாச்சி ஆனைமலை காவல் உட்கோட்ட காவல் துறையினர்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை காவல் உட்கோட்டம் தமிழக கேரளா எல்லை மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே 2278 டாஸ்மார்க் உள்ளது. ஆனால் அங்கு அரசு மதுபான கூடம் இல்லை சோதனைச் சாவடி அருகே அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக மதுபான கூடம் இயங்கி வருகிறது. இந்த மதுபான கூடத்தில் சட்ட விரோதமாக நாளொன்றுக்கு ஆயிரம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது ஒரு மது 200 ரூபாய் வரை விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுபானம் நடத்தும் காய்கறி கடை தியாகு

இந்த மதுபான கூடத்தை நடத்துபவர் பெயர் காய்கறி கடை நடத்தி தியாகு என்ற தகவல் வந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு கேரள எல்லை எல்லை சோதனைச் சாவடி அருகே உள்ளதால் மதுபான கூட்டத்திற்கும் கேரளாவிற்கும் சுமார் 200 மீட்டர் தூரம் தான் இருக்கிறது. ஆகவே கேரள கூலித் தொழிலாளிகள் தமிழக எல்லையில் உள்ள சட்ட விரோதமாக அனுமதி இன்றி இருக்கும் மதுபானக் கூடத்தில் வந்து மது பாட்டிலில் வாங்கி குடித்துவிட்டு செல்வதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இந்த மதுபான கூடத்தில் மது அருந்துபவர்கள் தமிழ்நாடு கேரளா இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் இவர்களால் எந்தவித அசம்பாவிதமமும் நடக்கலாம் என அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் பொள்ளாச்சி ஆனைமலை காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

கோவை மண்டல ஐஜியாக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட கே புவனேஸ்வரி ஐபிஎஸ் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது கோவை மேற்கு மண்டலத்தில் குற்ற நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படுகிறது என்றும் இது தொடரும் என்றும் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோா் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப் பொருள் தடுப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தொடா்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கேரள, கா்நாடக மாநில எல்லைப் பகுதியில் மேற்கு மண்டல மாவட்டங்கள் இருப்பதால் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதுடன், எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் வலுப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கோவை மண்டல ஐஜி கே. பவானிஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டி ஐ ஜி ஐ ஜி அவர்கள் சட்டவிராதமாக நடக்கும் மதுபானக்கூடம் மது பாட்டில் விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button